Overblog Follow this blog
Edit post Administration Create my blog

இலங்கைக்கு 2.6 மில்லியனை வழங்கிய அமெரிக்கா!

கடனுதவிகளை விட இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகளே அவசியம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் நேற்று நிதியமைச்சிற்கு வந்து, அமைச்சரை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். நல்லாட்சியின் கீழ் இலங்கைக்குள் முதலீட்டு சந்தர்ப்பங்களை வலுப்படுத்த அமெரிக்க தயாராக இருப்பதாக தூதுவர் இதன் போது கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் முதலீடுகளை வலுப்படுத்துவது சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தூதுவர் இதன் போது இணக்கம் தெரிவித்துள்ளார். அதேவேளை வெளிவிவகார அமைச்சுக்கு நேற்று விஜயம் செய்த அமெரிக்க தூதுவர், சட்டத்தின் ஆதிக்கம் தொடர்பான வளர்ச்சிக்கான உதவியை வழங்குவது சம்பந்தமான உடன்படிக்கையில் கையெழுத்திட்டதுடன் 2.6. மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ளார்.

Share this post

Repost 0
To be informed of the latest articles, subscribe: