Overblog Follow this blog
Edit post Administration Create my blog

நானும் மக்களை சந்திப்பேன்': குஷ்பு அறிவிப்பு!

காங்கிரசை பலப்படுத்த, நானும் மக்களை சந்திப்பேன்,'' என, அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறினார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:

தி.மு.க.,வை பலப்படுத்த, அக்கட்சி பொருளாளர் ஸ்டாலின், 'நமக்கு நாமே' பயணம் மேற்கொண்டு உள்ளார். தேவைப்பட்டால், ஸ்டாலினைப் போல, நானும் மக்களை சந்திப்பேன். என்ன மாதிரியான திட்டங்களுடன், மக்களை சந்திப்பது என்பது குறித்து, கட்சி மேலிடம் ஆலோசனை வழங்கும்.சட்டசபை கூட்டத் தொடர், ஜனநாயகத்தோடு நடத்தப்படவில்லை.

எதிர்க்கட்சியினரை பேச விடாததால், அவர்கள் தொடர்ச்சியாக வெளிநடப்பு செய்ய வேண்டியதாகி விட்டது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு, ஜால்ரா போடும் சபை தான், தமிழக சட்டசபை; ஆக்கப்பூர்வமாக எதுவும் நடக்க வில்லை. 'உலக முதலீட்டார்கள் மாநாட்டில், 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்து இருப்பதாகவும், 30 நாட்களுக்குள் தொழில்கள் துவங்க அனுமதி வழங்கப்படும்' என்றும், ஜெயலலிதா அறிவித்தார்.

அப்படியெனில், நான்கு ஆண்டுகளாக, ஏன் இதை செய்யவில்லை?'டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா மரணம் தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை வேண்டும்' என, கேட்கிறோம்; தேவையில்லை என்கிறார், ஜெயலலிதா. அதில், அவருக்கு என்ன சிக்கல்? இவ்வாறு அவர் கூறினார்.

Share this post

Repost 0
To be informed of the latest articles, subscribe: