Overblog Follow this blog
Edit post Administration Create my blog

இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது இந்திய கறுப்பு பண முதலைகளுக்கு கெடு

புதுடில்லி:வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணம் மற்றும் சொத்து குறித்த விவரங்களை தெரிவிக்க, கறுப்புப் பண முதலைகளுக்கு, மத்திய அரசு வழங்கியிருந்த காலக்கெடு, இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது.

இந்தியாவில் முறைகேடாக சம்பாதித்த பணத்தை, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளின் சில வங்கிகளில், இந்தியர்கள் சிலர் பதுக்கி வைத்துள்ளனர். அவர்களுக்கு, மத்திய அரசு, 90 நாட்கள் அவகாசம் கொடுத்திருந்தது. கறுப்புப் பண முதலைகள், தாங்களாகவே முன்வந்து, தங்களின் வெளிநாட்டு சொத்து, பணம் போன்ற விவரங்களை தெரிவித்தால், 60 சதவீத வரி விதிக்கப்படும். மாறாக, அந்த விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், 120 சதவீத வரி மற்றும் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என, எச்சரித்திருந்தது.

இதற்காக, வரித்துறை யின் இணையதளத்தில் தனிப்பக்கம் துவக்கப்பட்டு, அதில் விவரங்களை தெரிவிக்கலாம் அல்லது டில்லியில் உள்ள, நேரடி வரிகள் வாரிய அலுவலகத்தில், உரிய படிவங்களில் விவரங்களை தாக்கல் செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அளிக்கப்பட்டிருந்த, 90 நாள் கெடு, இன்று நள்ளிரவு, 12:00 மணியுடன் முடிவடைகிறது. அதன் பின், மத்திய அரசிடம் உள்ள பட்டியலின் அடிப்படையில், கறுப்புப் பண முதலைகள் வேட்டையாடப்பட்டு, அவர்களின் சொத்து மற்றும் பணம் பறிமுதல் செய்யப்படும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share this post

Repost 0
To be informed of the latest articles, subscribe: