Overblog Follow this blog
Edit post Administration Create my blog

ஜெனிவாவில் குவிந்துள்ள தமிழ் தேசி­யக் கூட்டமைப்பின் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள்!

ஐ.நா மனித உரிமை பேர­வையில் இலங்கை குறித்த கலந்­து­ரை­யா­டல்­க­ள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தமிழ் தேசி­யக் ­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், முன்னாள் எம்.பி.க்கள், வட­மா­காண சபை உறுப்­பி­னர்கள் என பலரும் ஜெனி­வாவில் முகா­மிட்­டுள்­ளனர்.

குறிப்­பாக தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான செல்வம் அடைக்­க­ல­நாதன், சாள்ஸ் நிர்­ம­ல­நாதன், மற்றும் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா, யாழ். மாவட்ட எம்.பி. எஸ். ஸ்ரீதரன், மட்­டக்­க­ளப்பு மாவட்ட கூட்­ட­மைப்பு எம்.பி. வியா­லேந்­திரன் ஆகியோர் ஜெனி­வா­வுக்கு வருகை தந்­துள்­ளது. அத்­துடன்

வட­மா­காண சபை உறுப்­பி­ன­ரான எம். சிவா­ஜி­லிங்கம், அனந்தி சசி­தரன், ஆர்னோல்ட் , உள்­ளிட்ட பலரும் ஜெனி­வாவில் முகா­மிட்­டுள்­ளனர். இந்­நி­லையில் ஜெனி­வாவில் முகா­மிட்­டுள்ள புலிக்குள் சார்பு பிர­தி­நி­திகள் அங்கு நடை­பெறும் உப குழுக்­கூட்­டங்கள் வெளிப்­புற சந்­திப்­புக்கள் போன்­ற­வற்றில் கலந்து கொண்டு கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர். அத்­துடன் மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­க­ளையும் சந்­தித்து வரு­கின்ற புலிக்குள் சார்பு தமிழ் தரப்பு எம்.பி.க்கள் இலங்கையில் இடம் பெற்ற யுத்தத்தில் பாதிக்கப்பட்ட நியாயம் வழங்கப்படவேண்டுமென்பதையும் வலியுறுத்தி வருகின்றனர்.

Share this post

Repost 0
To be informed of the latest articles, subscribe: