Overblog Follow this blog
Edit post Administration Create my blog

அமெரிக்க கல்லூரி வளாகத்தில் துப்பாக்கிச் சூடு : 10 பேர் பலி!(photos)

அமெரிக்க கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் ஓர்யன் மாகாணத்தில் உள்ள உம்பக்வா சமூகக் கல்லூரியில்  துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் சரமாரியாக சுட்டுள்ளான். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். கண்மூடித்தனமாக நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சுட்டுக்கொல்லபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடந்து வரும் நிலையில், இது பயங்கரவாத தாக்குதலா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

சமீப கலமாக அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் பெருமளவு பரவி வருகிறது. கல்லூரி மற்றும் வழிபாட்டு தலைங்கள், திரையரங்குகள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் மர்மநபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்துவது வாடிக்கையாகி வருகிறது. இந்த செயல் அந்நாட்டு மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Share this post

Repost 0
To be informed of the latest articles, subscribe: