Overblog Follow this blog
Edit post Administration Create my blog

அண்மைக்காலமாக நாட்டில் பாரியளவில் குற்றச் செயல்கள் - நாமல் ராஜபக்ஸ!

நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக நாட்டில் பாரியளவில் குற்றச் செயல்கள் இடம்பெற்ற வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பாதாள உலகக்குழு செயற்பாடுகளும் தலைதூக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் வழமைக்கு மாறான வகையில் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்களை கட்டுப்படுத்த சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கும் தரப்பினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். காவல்துறை திணைக்களத்தின் நடவடிக்கைகள் குறித்து திருப்திகொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் பாரியளவு குற்றச் செயல்கள் இடம்பெற்று வரும் நிலையில் அராசங்கம் தமது குடும்பம் தொடர்பிலான விசாரணைகளில் தீவிரம் காட்டி வருவதாகவும், இதன் மூலம் மக்களை திசை திருப்ப முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this post

Repost 0
To be informed of the latest articles, subscribe: