Overblog Follow this blog
Edit post Administration Create my blog

கோத்தபாய ராஜபக்ச மற்றும் அவருடன் இணைந்து செயற்பட்ட அதிகாரிகள்  மீண்டும் இன்று  விசாரணை!

கோத்தபாய ராஜபக்ச மற்றும் அவருடன் இணைந்து செயற்பட்ட அதிகாரிகள் இன்று மீண்டும் ஒருமுறை பாரிய ஊழல் தொடர்பான விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர்.

ரக்னா லங்கா, என்ற அரசாங்கத்தின் பாதுகாப்பு அலுவலர் விநியோக நிலையத்தில் இருந்து கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்காக 500 பணியாளர்களை பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டே அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இது குறித்த விசாரணைகள் இன்றும் நாளையும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன. அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டே இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

Share this post

Repost 0
To be informed of the latest articles, subscribe: