Overblog Follow this blog
Edit post Administration Create my blog

ஜீ.எஸ்.பி. சலுகை விரைவில் கிடைத்துவிடும் -  ரணில்!

ஜீ.எஸ்.பி. சலுகை விரைவில் கிடைத்துவிடும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொழிற்சங்கத் தலைவர்களுடனான பிரமரின் சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இன்று நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜெனீவா மனித உரிமைகள் அமர்வின் செயற்பாடுகள் ஊடாக சர்வதேச மட்டத்தில் இலங்கை தொடர்பான நம்பிக்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவிடமிருந்து எமக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை மிக விரைவில் கிடைத்துவிடும். இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர சில நாட்களில் முன்னெடுக்கவுள்ளார். அதன் பின்னர் உள்நாட்டில் சுமார் பத்து லட்சம் தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படும். அதன் மூலமாக நம்நாட்டின் வேலையில்லாப் பிரச்சினைக்கும் ஓரளவு தீர்வு காணப்பட்டு, பொருளாதார அபிவிருத்திக்கும் வழியேற்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரதான மத நிகழ்வுகளுக்கு அரசாங்கத்தின் பூரண அனுசரணை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த யோசனையை முன்வைத்துள்ளார். இதன்படி, பிரதான மத நிகழ்வுகள் அனைத்தும் அரச அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும். மத நல்லிணக்கத்தை கருத்திற் கொண்டு சகல பிரதான மத நிகழ்வுகளும் அரச நிகழ்வுகளாக நடைபெறவுள்ளன. பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய பிரதான மத நிகழ்வுகளுக்கு அரசாங்க அனுசரணை வழங்கப்பட உள்ளது. இது தொடர்பிலான திட்டமொன்றை வகுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அவரது செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்நோக்கில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சமாந்திரமாக மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட உள்ளன. இதன்படி, வெசாக், பொசோன் பௌர்ணமி தினங்களைப் போன்றே, தீபாவளி, தைப்பொங்கல், நத்தார் பண்டிகை உள்ளிட்ட நிகழ்வுகளும் அரச அனுசரணையுடன் அரச நிகழ்வுகளாக எதிர்காலத்தில் நடாத்தப்பட உள்ளது.

Share this post

Repost 0
To be informed of the latest articles, subscribe: