Overblog Follow this blog
Edit post Administration Create my blog

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்தை ஏமாற்றாத வகையில் நேர்மையான விசாரணைகள் நடைபெறும் - ராஜித!

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேசத்தை ஏமாற்றாத வகையில் நேர்மையான விசாரணைகள் நடைபெறும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பி.பி.சியின் சந்தேசய சிங்கள செய்திச் சேவைக்கு இன்று அளித்துள்ள செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலங்கையின் உச்சநீதிமன்ற நீதிபதியொருவர் குறித்து மோசமான புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் காரணமாக கௌரவமான முறையில் அவரை பதவி விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளோம். அதனைச் செய்யத் தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பதவி பறிக்கப்படும். இவ்வாறான நீதிபதிகளை வைத்துக் கொண்டு இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளை சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் முன்கொண்டு செல்ல முடியாது. சர்வதேசப் புகழ்பெற்ற நீதியரசர் வீரமந்திரி போன்றவர்களை அழைத்துவந்து இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் நேர்மையான முறையில் முன்னெடுக்கப்படும்.

சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபடாது என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி இன்று நிறைவேறியுள்ளமை தொடர்பாக தமிழ்வின் இணையத்தளம் ஏற்கனவே செய்தியினை பிரசுரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியினை பார்க்க. ஐ.நாவில் நடக்கவுள்ள உலக அதிசயம்! - எந்த நாட்டின் மீது தீர்மானம் வருகின்றதோ, அந்த நாடே இந்த தீர்மானத்தை வழிமொழியவுள்ளது!

Share this post

Repost 0
To be informed of the latest articles, subscribe: