Overblog Follow this blog
Edit post Administration Create my blog

தமிழக கட்சிகள் விருப்பப்படி இலங்கை பிரச்னையில் செயல்பட முடியாது - பொன்.ராதாகிருஷ்ணன்!

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் அளித்த பேட்டி:  இலங்கை தமிழர்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் அரசாக மத்திய அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட முடியாது.

அது இலங்கை தமிழர்களுக்கு பயன் உள்ளதாக அமையாது. இலங்கை தமிழர்களுக்கு எது நன்மை அளிக்குமோ அந்த முடிவையே மத்திய அரசு எடுக்கும். பிரதமர் மோடி எடுப்பார். பா.ம.க. தலைமையை ஏற்கும் கட்சியுடன்தான் கூட்டணி என ராமதாஸ் கூறி வருகிறார். பா.ஜ. தலைமை ஏற்கும் கட்சியுடன்தான் கூட்டணி என்று நாங்கள் கூறி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Share this post

Repost 0
To be informed of the latest articles, subscribe: