Overblog Follow this blog
Edit post Administration Create my blog

இலங்கையின் நிதிச்சந்தைக்குள் மேலும் ஐந்து வெளிநாட்டு வங்கிகள்!

இலங்கையின் நிதிச்சந்தைக்குள் மேலும் ஐந்து வங்கிகள் விரைவில் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி இதனை உறுதிசெய்துள்ளது. இலங்கையில் செயற்படுவதற்காக ஐந்து வெளிநாட்டு வங்கிகளின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

அண்மைக்கால அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரதன்மையை கருத்திற் கொண்டே இந்த வங்கிகள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைத்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இவற்றுன் சீனா வங்கி மற்றும் ஜப்பானிய வங்கி என்பனவும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கியில் இருந்து பலர் இடமாற்றம் மத்திய வங்கியில் இ;ருந்து மேலும் பல அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்தநிலையில் கடந்த 7 நாட்களுக்குள் சிரேஸ்ட மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரையிலான சுமார் 100 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்கூட்டிய அறிவித்தல் இன்றியே இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிலருக்கு நேற்று காலையிலேயே தமது இடமாற்றம் குறித்த தகவல்கள் கூறப்பட்டுள்ளன. இது வழமையான இடமாற்றம் என்று மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். இவை தேர்தலுக்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this post

Repost 0
To be informed of the latest articles, subscribe: