Overblog Follow this blog
Edit post Administration Create my blog

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையோசனை தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் - விமல்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு அமைய நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படுமாயின் அதற்கு முன்னர் அது குறித்து சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கலப்பு நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டால், சர்வதேச நீதிபதிகள் அதில் இடம்பெறுவர்கள். ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இது தெளிவாகியுள்ளது. இதனால், கட்சி, நிற பேதங்கள் மறந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவா யோசனை தொடர்பில் அரசாங்கத்திற்கு சவால் விடும் வீரவன்ஸ இலங்கை சம்பந்தமாக ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு அமைய எதிர்காலத்தில் ஏற்படுத்தப்பட போவது உள்நாட்டு பொறிமுறையா என்பதை முடிந்தால் ஒப்புவித்து காட்டுமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். முடிந்தால், ஜெனிவா யோசனைகளை தொடர்பில் அவற்றில் உள்ள விடயங்களை ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி தெளிவுப்படுத்துமாறு சவால் விடுக்கின்றேன். விசாரணை பொறிமுறை உள்நாட்டு பொறிமுறையா அல்லது கலப்பு பொறிமுறையாக என்பதை முடிந்தால், கூறுங்கள். அரசாங்கத்தினால் அப்படி கூற முடியாது காரணம் இதனை தேசிய பொறிமுறை என்பதை விட சர்வதேச நீதிமன்ற பொறிமுறை என்றே கூறவேண்டும்

இலங்கையை சேர்ந்த சில நீதிபதிகள், சட்டத்தரணிகள் நியமிக்கப்படலாம். ஆனால், வரப்போகும் வெளிநாட்டு நீதிபதிகள், வெளிநாட்டு சட்டத்தரணிகள், வெளிநாட்டு விசாரணையாளர்களின் முன்னிலையில் உள்நாட்டு நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் ஒன்றும் செய்ய முடியாதவர்களாக மாறிவிடுவர். இந்த நீதிமன்ற செயற்பாட்டில் வெள்ளையர்களே அனைவருக்கும் சம்பளத்தை வழங்குவர். இலங்கை அரசாங்கம் கட்டிடம் ஒன்றை வழங்கி கூடுவதற்கான வசதிகளை மாத்திரமே வழங்கும் எனவும் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Share this post

Repost 0
To be informed of the latest articles, subscribe: