Overblog Follow this blog
Edit post Administration Create my blog

போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நாளைய தினம் வடக்கிற்கான விஜயம்!

போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நாளைய தினம் வடக்கிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார். நாளை காலை 5.30மணியளவில் கொழும்பு புறக்கோட்டையிலிருந்து விசேட ரயில் மூலம் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் அமைச்சர் நண்பகல் 12.30 மணியளவில் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை வந்தடையவுள்ளார்.

யாழ் புகையிரத நிலையத்தில் இடம்பெறும் விசேட கலந்துரையாடலில் பங்கெடுக்கும் அமைச்சர் தொடர்ந்து காங்கேசன்துறை இரயில் நிலையம் வரை பயணிக்கவுள்ளார். தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் யாழ் கோண்டாவில் பிரதான பஸ் டிப்போவிற்கு விஜயம் செய்யும் கௌரவ அமைச்சர் யாழ்ப்பாணத்து அரச பேருந்து சேவையின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

அதைத்தொடர்ந்து யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம், காரைநகர் பஸ் டிப்போ மற்றும் கிளிநொச்சி பஸ் டிப்போ ஆகியவற்றிற்கும் வியஜம் செய்வார் என அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post

Repost 0
To be informed of the latest articles, subscribe: