Overblog Follow this blog
Edit post Administration Create my blog

நான்கரை வயதுசேயா என்ற  சிறுமி கொலை தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸாருக்கு எதிராக விசாரணை!

கொட்டதெனியாவ சேயா என்ற நான்கரை வயது சிறுமி கொலை தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸாருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பாடசாலை மாணவர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த இருவரையும் தாக்கியதாகவும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாணவரை நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் கொடூரமாக தாக்கியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரும் மரபணு சோதனை அறிக்கையின் பின்னர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் குறித்த மாணவர் பொலிஸார் தாக்குதல் நடத்தியதாகக் கூறி கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் சந்தேக நபர்கள் மீது சித்திரவதைகளை மேற்கொண்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, சந்தேக நபர்களை தாக்கவில்லை எனவும், யாரோ குறித்த மாணவரை பொலிஸாருக்கு எதிராக வழிநடத்தி வருவதாகவும் கொட்டதெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share this post

Repost 0
To be informed of the latest articles, subscribe: