Overblog Follow this blog
Edit post Administration Create my blog

மைத்திரிக்கு விமான நிலைத்தில் வரவேற்பு:- சோதிடக்காரர்களின் பேச்சை நம்பாமலிருந்தால் மஹிந்தவே ஜெனீவா சென்றிருப்பார் - மைத்திரி!(photos)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நியுயோர்க் நகருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். ஐக்கிய நாடுகள் சபையின் 70 ஆவது பொது சபை கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி நியுயோர்க் நகருக்கு விஜயம் செய்தார். அங்கு ஜனாதிபதி பொதுச் சபை கூட்டம் உட்பட ஏனைய பல மாநாடுகளிலும் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அதேபோன்று பல அரச தலைவர்கள் மற்றும் பிராந்திய தலைவர்களுடனும் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும் ஜனாதிபதிக்கு இதன்போது சந்தர்ப்பம் கிடைத்தது. அதேவேளை நேற்று  திரும்பிய ஜனாதிபதியை வரவேற்க பல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள்  பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றிருந்தனர்.

சோதிடக்காரர்களின் பேச்சை கண்மூடித்தனமாக நம்பாமலிருந்தால் மஹிந்த ராஜபக்ஷவே நாட்டின் தலைவராக இம்முறையும் ஜெனீவா சென்றிருப்பார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்து விட்டு நாடு திரும்பிய பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தனது ஜெனீவா அனுபவங்களை ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தார். இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷ சோதிடக்காரர்களின் பேச்சைக் கேட்டு இரண்டு வருடங்களுக்கு முன்பே தேர்தலை நடத்தாமல் இருந்திருந்தால் இன்றும் அவர் தான் ஜனாதிபதியாக இருந்திருப்பார். அவ்வாறெனில் அவர்தான் இம்முறையும் ஜெனீவா சென்றிருப்பார்.

மறுபுறத்தில் மஹிந்த சோதிடக்காரர்களின் பேச்சை நம்பியதால் தான் ஜனவரி எட்டாம் திகதி இந்நாட்டில் ஒரு அரசியல் புரட்சி மலர்ந்தது. அந்த வகையில் நாம் சோதிடக்காரர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். புலிகளை முற்றாக அழித்து விட்டதாக மஹிந்த ராஜபக்ஷ பீற்றிக் கொண்டாலும் நாட்டுக்கு வெளியே புலிகள் பலமாகவே இருக்கின்றார்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

Share this post

Repost 0
To be informed of the latest articles, subscribe: