Overblog Follow this blog
Edit post Administration Create my blog

எதிர்வரு ம்உள்ளுராட்சி தேர்தலில் ஐ.தே.க ஆதிக்கத்தை உறுதி செய்து கொள்ள ரணில் முயற்சி!

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதிக்கத்தை உறுதி செய்து கொள்ள பிரதமர் ரணில் விக்மரசிங்க முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்து ரணில் வலியுறுத்தியுள்ளார்.

தொகுதியில் அமைந்துள்ள உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெற்றுக்கொடுக்க சகல தொகுதி அமைப்பாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென பிரதமர் தெரிவித்துள்ளார். வேட்பாளர் தெரிவு குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். திறமையான, மதிநுட்பமான இளைஞர் யுவதிகள், பெண்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென பிரதமர், தொகுதி அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

Share this post

Repost 0
To be informed of the latest articles, subscribe: