Overblog Follow this blog
Edit post Administration Create my blog

நாங்கள் பிரியவில்லை; மீண்டும் இணைவோம்': கூட்டணி குறித்து இளங்கோவன் சூசகம்!

நாங்கள் பிரிந்து செல்லவில்லை; மீண்டும் இணைவோம்,'' என, தி.மு.க., கூட்டணியில் மீண்டும் இடம்பெறுவது குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் சூசகமாக கூறினார்.மறைந்த நடிகர் சிவாஜியின் பிறந்த நாள் விழா, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில்  நடந்தது. விழாவில், இளங்கோவன் பேசியதாவது:

சிவாஜி நடித்த பல படங்களின் பாடல்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தியுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், வாஞ்சிநாதன், வ.உ.சி., பாரதியார், பகத்சிங், திருப்பூர் குமரன் போன்றவர்களின் வேடங்களில் நடித்து, அவர்கள் எப்படி இருப்பர் என்பதை தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டியவர் சிவாஜி.ஏழை மாணவர்கள் பலரை, அவர் படிக்க வைத்துள்ளார். அவர் செய்த உதவிகள், வெளியே தெரியாது; விளம்பரப் படுத்திக் கொள்வதில் விருப்பம் இல்லாதவர். இந்திய - சீனப் போரின் போது, நிவாரண நிதி திரட்டினர். அப்போது, தன் மனைவியின் நகைகளை காமராஜரிடம் வழங்கி, நிதி திட்டத்தில் சேர்க்குமாறு கூறினார்.

காமராஜருக்கு பின், காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டியவர்.'தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும்; ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும்' என, தன் கடைசி ஆசையை, என்னிடம் வெளிப்படுத்தினார். காங்கிரஸ் கட்சிக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது. கல்லுாரி மாணவர்கள் பிரிந்து செல்லும்போது பாடுகிற, 'பசுமை நிறைந்த நினைவுகளே' என்ற பாடலைத் தான், இசைச் கச்சேரி குழுவினர் பாட வேண்டும் என, நான் விரும்பினேன். ஆனால், நாங்கள் யாரும் பிரிந்து செல்லவில்லை; மீண்டும் இணைவோம். யார் ஆட்சி அமைத்தாலும், காங்கிரஸ் துணையோடு தான் ஆட்சி அமைக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Share this post

Repost 0
To be informed of the latest articles, subscribe: