Overblog Follow this blog
Edit post Administration Create my blog

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அழுத்தத்தில் இருந்து இலங்கை விலகியுள்ளது - ரணில்!

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அழுத்தத்தில் இருந்து இலங்கையை காப்பாற்ற, சமகால அரசாங்கத்தினால் முடிந்துள்ளதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்களை விழிப்புணர்வூட்டு கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் பொறிமுறையின் கீழ் செயற்பட்டு இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளமை குறித்து இலங்கையர்கள் என்ற ரீதியில் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும் என அவர் கூறியுள்ளார். அத்துடன் தற்போது எங்கள் நாடு சுதந்திரமாக உலக நாடுகளுடன் செயற்பட முடியும் என பிரதமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக  ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை ஜப்பான் நோக்கி சென்றுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் 8 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவொன்றும் ஜப்பான் நோக்கி சென்றுள்ளது. பிரதமரின் ஜப்பான உத்தியோகபூர்வ விஜயம் நாளை முதல் 7ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. அக் காலப்பகுதியினுள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின் சோ அபேவுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு நாட்டுக்கும் இடையில் இருதரப்பு உறவுகளை மேலும் வளர்க்கும் நோக்கில் இக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும். இதற்கு முன்னர் பிரதமர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this post

Repost 0
To be informed of the latest articles, subscribe: