Overblog Follow this blog
Edit post Administration Create my blog

இலங்கை தொடர்பில் முன்வைத்த பிரேரணை குறித்து கலந்துரையாடல் : அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மைத்திரி அழைப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கை தொடர்பில் முன்வைத்த பிரேரணை குறித்து கலந்துரையாடல் மேற்கொள்வதற்காக அனைத்து கட்சி மாநாடொன்று அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமெரிக்கா விஜயம் நிறைவடைந்து இலங்கையை வந்தடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு விசேட உரையொன்றை ஊடகங்கள் வாயிலாக மேற்கொண்டிருந்த்தார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் அரசியலமைப்பு திருத்தச்சட்டத்திற்கமைய தற்போதைய அரசாங்கம் செயற்படும் எனவும், அனைத்து தரப்பினரின் கருத்து மற்றும் ஆலோசனைகளை கருத்தில் கொள்வதற்காக அனைத்து கட்சி மாநாடொன்று அவசியம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அதற்காக நாட்டில் ஏற்றுகொள்ளப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இப் பிரேரணைக்காக அனைத்து மத தலைவர்களின் ஆலோசனைகளை பெற்றுகொள்வதற்காக அனைத்து மத தலைவர்கள் மாநாடொன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

Share this post

Repost 0
To be informed of the latest articles, subscribe: