Overblog
Edit post Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்பு வீசிய ஒருவர் கைது!

November 5 2015 , Written by lankatime

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்பு வீசிய ஒருவர் கைது!

சென்னையில், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்பு வீசிய ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை ஆழ்வார்பேட்டை மியூசிக் அகடாமியில் நேற்று, 'தி இந்து'ஆங்கில நாளிதழ் சார்பில், 'இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில், இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், என். ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்று இரவு, 9:00 மணியளவில், கூட்டம் முடிந்து, எம்.கே.நாராயணன், மேடையில் இருந்து இறங்கி, அரங்கில் நடந்து வந்தபோது, வாலிபர் ஒருவர், அவர் மீது செருப்பு வீச்சு நடத்தி தாக்குதலில் ஈடுபட்டார்.

செருப்பில் ஆணி பதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. ராயப்பேட்டை போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன், 35, என்பது தெரியவந்தது. ஆனால், அந்த நபர் அரங்கில் உள்ளே நுழைய, ராகவன் என்ற பெயரில் பதிவு செய்துள்ளார். அதனால், போலீசாருக்கு அந்த நபர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.மேலும் அந்த நபர் 'மே 17' இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்க கூடும் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் அவரை கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். முன்னதாக, எம்.கே.நாராயணன் உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி, நாம் தமிழர் கட்சி, மே 17, தமிழர் விடுதலைக்கழகம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் முற்றுகை போராட்டம் நடத்தினார். இதுதொடர்பாக, இரண்டு பெண்கள் உட்பட, 70 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்பு வீசிய ஒருவர் கைது!
Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post