இஸ்லாமிய குடியரசுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டிசம்பர் மாதத்தில் ஈரான் பயணமாகவுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். 

குறித்த விஜயத்தின் போது, ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானியை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து பாங்கொங் நகரில் இடம்பெற்ற ஆசிய ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் மைத்திரிபால சிறிசேன மற்றும் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஈரானுக்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இச்சந்திப்பின்போது இருநாட்டு வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் மசகு எண்ணெய் வர்த்தகம் போன்ற துறைகளில் இருவர்களுக்கிடையேயும் பரந்துபட்ட கலந்துரையாடல்களும் ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.  தற்போது உமா ஒயா திட்டத்திற்காக ஈரான் அதிகளவிலான நிதி உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.