சார்க் மாநாட்டை நடத்தும் சூழல் இல்லை: இலங்கை வெளிவிவகார அமைச்சு!
புஷ்டியுடையதாக வெற்றியளிக்க வேண்டுமாயின் சமாதானமும் பாதுகாப்பும் அவசியமாகும். சார்க் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர் என்ற வகையில் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை உருவாக்க இலங்கை தன்னை அர்ப்பணித்துள்ளது.
அதேநேரம் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு சாதகமான அமைதியும் பாதுகாப்பும் நிலைநிறுத்தப்படுமென்கின்ற நம்பிக்கை உண்டு. இலங்கை அனைத்து வடிவிலான பயங்கரவாதச் செயற்பாடுகளையும் வன்மையாக கண்டிக்கின்ற அதேவேளை பிராந்தியத்தில் நிலவும் பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிப்பதற்காக தீர்க்கமான தீர்மானமொன்று முன்னெடுக்க வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.