Overblog
Edit post Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இந்த வருடத்திற்குள் பிரதமராக்கி காட்டுவோம் : குமார வெல்கம!

January 29 2017 , Written by lankatime

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இந்த வருடத்திற்குள் பிரதமராக்கி காட்டுவோம் : குமார வெல்கம!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இந்த வருடத்திற்குள் பிரதமராக்கி காட்டுவோம் என்று கூட்டு எதிர்க்கட்சி சூளுரைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மாபெரும் மக்கள் கூட்டம் புரட்சிக்கான அழைப்பு என்ற தொனிப்பொருளில் நுகேகொடையில்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம

ஓரினச் சேர்க்கையை சட்டமாக்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இதுபோன்ற அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்பிக்கப்படவில்லை. இவ்வாறானதொரு அரசாங்கத்தில் அமர்ந்திருப்பது குறித்து அமைச்சர்களுக்கு வெட்கம் இல்லையா? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் என்பது ஓரினச் சேர்க்கைக்கு விருப்பமுடையவர்கள் அல்லர். ஆனால் வேறுவேறு விடயங்கள் காணப்பட்டன. ஓரினச் சேர்க்கை சுதந்திரக் கட்சியில் இல்லை.

பிரஜாவுரிமையை நீக்குவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடினமான காரியமல்ல. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பிரஜாவுரிமையை நீக்கியதும் ஐக்கிய தேசியக் கட்சிதான். எனவே பிரஜாவுரிமையை நீக்குதலுக்கு பயந்தவர்கள் நாங்கள் அல்ல. பிரஜாவுரிமையை நீக்கினாலும் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை.

மஹிந்த ராஜபக்சவை ஓய்வுபெற்றுச் செல்ல சொல்கின்றார்கள். ஆறுபோல மக்கள் திரண்டு நிற்கையில் மஹிந்த ராஜபக்ச எவ்வாறு ஓய்வுப்பெற்றுச் செல்வார்? எனவே 2017ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கிக் காட்டுவோம் என்றார் குமார வெல்கம.

Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post