சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முற்பட்ட இந்திய, பாகிஸ்தான் பிரஜைகள் கைது!
உரிய பாஸ்போட் இன்றி நாட்டில் இருந்து வௌியேற முற்பட்ட வௌிநாட்டு பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கைதான இருவரும் இந்திய மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
போலி பாஸ்போட்டைப் பயன்படுத்தி இந்தியப் பிரஜை இந்தியாவின் பெங்கலூருக்கும், பாகிஸ்தான் பிரஜை பிரான்சுக்கும் செல்ல முற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதுஇவ்வாறு இருக்க, மாத்தறை ரயில் நிலையத்தின் பொருட்களுக்கு தீயினால் சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட வௌிநாட்டுப் பிரஜைகள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்லோவேனியா பிரஜைகளான இவர்களை மாத்தறை பொலிஸார் கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.