முல்லைத்தீவிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த மைத்திரி திடீரென இடைநடுவில் கொழும்பிற்கு திரும்பிள்ளார்!
முல்லைத்தீவிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென இடைநடுவில் கொழும்பிற்கு திரும்பி வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
காலநிலை மாற்றத்தின் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பயணத்தை இடைநடுவில் முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இன்று இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி குறித்த பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1500 பேருக்கான காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதுடன், 500 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் கேப்பாபுலவில் விடுவிக்கப்படும் நிலங்களுக்கான சான்றிதழ்களும் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட இருந்தன.