தற்போதைய அரசாங்க நிர்வாகத்தினால் விரக்தியடைந்துள்ள 12 மில்லியன் வாக்காளர்கள், கூட்டு எதிர்க்கட்சியின் நுகோகொட பேரணியில்!
தற்போதைய அரசாங்க நிர்வாகத்தினால் விரக்தியடைந்துள்ள 12 மில்லியன் வாக்காளர்கள், கூட்டு எதிர்க்கட்சியின் நுகோகொட பேரணியில் கலந்துக்கொள்வார்கள் என கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த பேரணியில்,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களித்த 5.8 மில்லியன் மக்களும்,நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்த 6.2 மில்லியன் மக்களும் கலந்துக்கொள்வார்கள் என கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கிலேயே, இந்த பேரணி அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் ஏற்பாட்டால்,மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நாளைய தினம் நுகேகொடயில் பேரணி ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.