ஜெயலலிதாவின், 69வது பிறந்த நாளன்று புதிய கட்சி: தீபா அணி ஆலோசனை!
தீபா ஆதரவாளர்களின் ரகசிய கூட்டம், சென்னை, அயனாவரத்தில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஜெயலலிதாவின், 69வது பிறந்த நாளன்று, தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் கட்சி துவங்குவது என, முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் அன்று, ஜெயலலிதா வின் அண்ணன் மகள் தீபா, தீவிர அரசியலில் குதிப்பதாக அறிவித்தார். தன் அரசியல் பயணம் குறித்த, அடுத்தகட்ட நடவடிக்கையை, ஜெ., வின் பிறந்த நாளான, அடுத்த மாதம், 24ல் அறிவிப்பதாகத் தெரிவித்தார். இந்நிலையில்,
தீபா ஆதரவாளர்களின் ரகசிய ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நடந்துள்ளது.
இக்கூட்டத் தில், தீபாவின் கணவர் மாதவன், முன்னாள் - எம்.எல்.ஏ.,க்கள் திருச்சி சவுந்திரராஜன், பெரம்பலுார் இளவழகன், கோவை மலரவன், பொள்ளாச்சி ரத்தினம், உடுமலை மணிவாசகம் உட்பட, ஏழு பேர் பங்கேற்றுள்ளனர்.
அத்துடன், முன்னாள் - எம்.பி., சேலம் அர்ஜுனன், முன்னாள் மாவட்ட செயலர்கள் காதி கிருஷ்ண சாமி, விழுப்புரம் மணிகண்டன், அன்புசெல்வன் மற்றும் ஒன்றிய செயலர்கள் உட்பட, 300 பேரும் பங்கேற்றனர்.
அவர்கள் கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஜெயலலிதா பிறந்த நாளான, பிப்., 24ல், புதிய கட்சி துவக்குவது, உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து பேசப்பட்டது. கட்சியின் தலைமை அலுவலகத்தை, சென்னை, கோயம்பேட்டில் திறக்க திட்டமிட்டு உள்ளோம்.
உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர் களை நியமிப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
பிப்., முதல் வாரத்தில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வது என்றும், அதன்பிறகு முக்கிய முடிவுகள் எடுப்பது என்றும் தீர்மானித் துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.