இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க தயார்!
ஐக்கிய நாடுகள் சபையின் Alliance of Civilizations இன் உப செயலாளர் மிகுவெல் ஏஞ்சல் மொரட்டினோஸ், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம், ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு தமது அனுதாபங்களை மிகுவெல் ஏஞ்சல் மொரட்டினோஸ் தெரிவித்துக் கொண்டார்.
ஐக்கிய நாடுகள் மற்றும் அதன் உறுப்பு நாடுகள் தற்போதைய நிலைமையில், இலங்கை மக்களிடையேயான ஒற்றுமையை நிலைநாட்ட தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் மிகுவெல் ஏஞ்சல் மொரட்டினோஸ் இந்த சந்திப்பின் போது தெரிவித்தார்.

Share this post
To be informed of the latest articles, subscribe:
Comment on this post