தீவிரவாதிகளின் அபாயகர திட்டம் - பெரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டது, கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சிகரமானவை
சம்மாந்துறை வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் இரசாயனத் தாக்குதல்களை நடத்த தற்கொலைதாரிகள் திட்டமிட்டிருந்தனரா என்பது பற்றி விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
குடிநீரில் இவற்றை கலப்பது அல்லது வேறு பவுசர் ஒன்றில் இரசாயனக் கலவைகளை கொண்டுசென்று மோதி தாக்குதலை ஏற்படுத்துவது உட்பட்ட திட்டங்கள் இருந்தனவா என்பது பற்றி விசாரணைகள் நடக்கின்றன....
அதேசமயம் பத்து தலைக்கவசங்கள் பத்து ஆடைகள் உட்பட்ட தலா பத்து செட் உபகரணங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டமை விசாரணையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதுபற்றி கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் விசாரித்த போது பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி முக்கியமான கேந்திர நிலையமொன்றை முற்றுகையிட்டு அங்குள்ளோரை பணயக்கைதிகளாக வைத்து தாக்குதல்களை நடத்தும் திட்டமொன்று இருந்ததாக தெரியவந்துள்ளது.
விமான நிலையம் அல்லது கொழும்பின் பிரதான ஹோட்டலொன்று இவர்களின் இலக்காக இருந்ததாக சொல்லும் பாதுகாப்புத் தரப்பு ,அவற்றை மேற்கொள்ள முன்னர் பாதுகாப்பு தரப்பு முந்திக்கொண்டதால் பெரிய அனர்த்தமொன்று தவிர்க்கப்பட்டதாக கூறுகிறது.விசாரணையின்போது கிடைக்கும் தகவல்கள் மிகவும் அதிர்ச்சிகரமானவையாக இருப்பதாக சொல்லப்படுகிறது.