Overblog
Edit post Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

ஆசிரமத்துக்குள் புகுந்து மேலும் ஒரு இந்து சாமியார் அடித்துக் கொலை, வட மாநிலங்களில் பதற்றம்!

April 25 2020 , Written by lankatime

ஆசிரமத்துக்குள் புகுந்து மேலும் ஒரு இந்து சாமியார் அடித்துக் கொலை, வட மாநிலங்களில் பதற்றம்!

மும்பைக்கு அருகில் உள்ள கிராமமான பால்கரில் 2 இந்து சாதுக்கள் உட்பட மூன்று பேர் ஒரு கும்பலால் ஈவு, இரக்கமின்றி கொல்லப்பட்டனர். மும்பையின் கண்டிவலியைச் சேர்ந்த சாதுக்கள், சிக்னே மகாராஜ் கல்பவ்ருக்ஷகிரி (வயது 70), சுஷில்கிரி மகாராஜ், (வயது 35), ஆகியோர், ஏப்., 16ம் தேதி, குஜராத்தில் ஒரு இறுதி சடங்கில் பங்கேற்க, டிரைவர் நிலேஷ் தெல்கேட், (வயது 30), உடன் காரில் புறப்பட்டு வந்த போது இந்த சம்பவம் பால்கரில் நிகழ்ந்தது

இந்து துறவிகள் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட இந்த சம்பவத்தை மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கடுமையாக கண்டித்துள்ளார், இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், ஊரடங்கு அமலில் உள்ள போது, நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் எப்படி கூடியிருக்க முடியும். மகாராஷ்டிராவில் சட்ட ஒழுங்கு குறித்த முன்னேற்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று பாஜகவினர் கேள்வி எழுப்பினர்.

போலீசாரும், அரசும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறி வரும் நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் ஹோஷியாபூர் ஆசிரமத்தில் தனிமையில் எந்த வித ஆயுதங்களும் இல்லாமல் தங்கியிருந்த சுவாமி புஷ்பேந்திரா என்பவர் மிக கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இதனால் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்துக்கள் மிகவும் கவலையும், அச்சமும் அடைந்துள்ளனர்.

சமீபத்தில் பால்கார் இந்து துறவிகள் கொலை பற்றி பேசிய ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவர் மனைவி வந்த கார்மீது காங்கிரஸ் அனுப்பிய குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் எந்தவித காரண காரியங்கள் இல்லாமல் ஒரு பிரபல இந்து சாமியார் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது இந்தியா முழுவதும் இந்துக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பில் இந்துக்கள் – சீக்கியர்களிடையே பகைமையை உருவாக்கி அரசியல் செய்யும் நோக்கத்தில் காங்கிரஸ் இந்த சதி செயலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post