ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL- 1194 விமானத்தின் ஊடாக இன்று மதியம் அவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகமே ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில் இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் வெளிநாடுகளில் தங்கியுள்ள நிலையில் அவர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
ஏற்கனவே விசேட விமானங்கள் மூலம் பல மாணவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். நேற்றும் இந்தியாவின் மும்பை நகரில் இருந்து 163 மாணவர்கள் ஸ்ரீ லங்கன் விசேட விமானம் மூலம் அழைத்துவரப்பட்டனர்
இந்நிலையில் இந்தியாவின் கோயம்பத்துர் நகரில் உள்ள 113
மாணவர்கள் ஸ்ரீ லங்கன் விசேட விமானம் மூலம் அழைத்துவரப்பட்டனர்