Overblog
Edit post Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் 7 லட்சத்து 78 ஆயிரம் பேர் மீட்பு!

April 25 2020 , Written by lankatime

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் 7 லட்சத்து 78 ஆயிரம் பேர் மீட்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் 7 லட்சத்து 78 ஆயிரம் பேர் மீட்பு

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 78 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 28 லட்சத்து 12 ஆயிரத்து 697 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 18 லட்சத்து 38 ஆயிரத்து 51 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 58 ஆயிரத்து 361 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த கொடிய வைரசுக்கு ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 258 பேர் பலியாகியுள்ளனர்.

ஆனாலும், இந்த கொடிய கொரோனாவில் இருந்து மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் உலகம் முழுவதும் இதுவரை 7 லட்சத்து 78 ஆயிரத்து 388 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விவரங்கள்:-

அமெரிக்கா - 92,266

ஸ்பெயின் - 92,355

இத்தாலி - 60,498

பிரான்ஸ் - 43,493

ஜெர்மனி - 1,06,800

துருக்கி - 21,737

ஈரான் - 66,599

சீனா - 77,257

பிரேசில் - 26,573

பெல்ஜியம் - 10,122

கனடா - 15,469

ஸ்விட்சர்லாந்து - 21,000

ஆஸ்திரியா - 11,872

Share this post
Repost0
To be informed of the latest articles, subscribe:
Comment on this post