கோவை: ''நீட் -தேர்வு பா.ஜ., அரசு கொண்டு வந்ததல்ல என தெரிந்தும், லோக்சபாவில் பா.ஜ.,வுக்கு எதிராக தி.மு.க., - எம்.பி.,க்கள் கோஷம் போடுவது அநாகரிகம்' என, பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான கமிட்டி பரிந்துரையில், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பிய தி.மு.க., அரசு, ஏன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடவில்லை? அப்படி வழக்கு போட்டால் அது நிராகரிக்கப்படும் என, தி.மு.க.,வுக்கு தெரியும்.மத்திய அமைச்சர்'நீட்' தேர்வு, தி.மு.க., அங்கம் வகித்த காங்., ஆட்சி காலத்தில், காந்தி செல்வன் மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வரப்பட்டது.
அப்போது தி.மு.க., ஏன் எதிர்க்கவில்லை? நீட் தேர்வை கொண்டு வந்த அதே காங்கிரசுடன், இன்னும் கூட்டணியில் கைகோர்த்து கொண்டு, தி.மு.க., இரட்டை வேடம் போடுவது ஏன்? பா.ஜ., அரசு கொண்டு வந்ததல்ல என தெரிந்தும், லோக்சபாவில் பா.ஜ.,வுக்கு எதிராக தி.மு.க., எம்.பி.,க்கள் கோஷம் போடுவது அநாகரிகம். கவர்னர், தங்களோடு ஒத்துப் போகவில்லை என்றால், உடனே கவர்னரை திரும்ப பெற வேண்டும் என கூறுவதை தி.மு.க., வழக்கமாக கொண்டுள்ளது.
நீட்டை திரும்பப் பெற முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு, 12 மாநில முதல்வர்கள் ஒருவர் கூட பதில் எழுதவில்லை; ஆதரவும் தெரிவிக்கவில்லை. கவர்னர் அதிகாரம்சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாவை ஏற்காமல் திருப்பி அனுப்ப, அரசியல் அமைப்பு சட்டப்படி கவர்னருக்கு அதிகாரம் உண்டு. அதை தான் கவர்னர் செய்து இருக்கிறார்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.