அம்மாடியோவ்! வினாடிக்கு 50 ஐபோன் விற்பனை: அசத்துது ஆப்பிள்!
கலிபோர்னியா : வினாடிக்கு 50 ஐபோன்கள் விற்பனையாகியுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஆப்பிள் நிறுவனம் வெ ளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தங்கள் நிறுவனத்தின் புதுவரவான ஆப்பிள் ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் பிளஸ் போன்கள் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அமெரிக்கா மற்றும் சீனாவில் மட்டும், 3 நாட்களில் 13 மில்லியன் ஐபோன்கள் விற்பனையாகியுள்ளன. இது வினாடிக்கு 50 ஐபோன்கள் விற்பனையானதற்கு நிகர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான ஐபோன் 5 விற்பனை , 3 நாட்களில், 10 மில்லியன் என்ற அளவிலேயே இருந்தது. இதுவே சாதனையாக கருதப்பட்ட நிலையில், ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் பிளஸ் போன்களின் விற்பனை 3 நாட்களில் 13 மில்லியன் என்ற அளவில் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் ஐபோன் : இந்தியாவில், ஐபோன் 6எஸ் பிளஸ் போன்கள், அக்டோபர் 16ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 16ம் தேதி முதல், இந்தியா மட்டுமின்றி, மலேசியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளிலும், ஐபோன்களின் விற்பனையை 130 நாடுகளுக்கும் மேலாக அதிகரிக்க இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா அரசாங்கம் எப்போதும் இலங்கையுடன் இரு தரப்பு உறவுகளை சீராக பேணும் -சீன தூதுவர் ஹி சியாலியங்!
சீனா அரசாங்கம் எப்போதும் இலங்கையுடன் இரு தரப்பு உறவுகளை சீராக பேணுவதாக சீன தூதுவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம் பெற்ற நிகழ்வொன்றின் போது உரையாற்றிய அவர் சீன தூதுவர் ஹி சியாலியங்,
சீனாவை பொறுத்தவரையில் அரசியல் முன் நிபந்தனைகள் இன்றி அண்டைய நாடுகளுடன் உறவுகளை பேணி வருவதாக குறிப்பிட்டுள்ளார். சீனாவும் இலங்கையும் பல்வேறுதுறைகளில் ஒத்துழைப்புக்களை பேணி வருவதாகவும் சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளின் பாதுகாப்பு நாட்டை ஆட்சி செய்கின்றவர்களின் கைகளிலும் இருக்கின்றது - மஹிந்த ராஜபக்ஷ!
எமது நாட்டில் வாழ்கின்ற பிள்ளைகளின் இதயத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மரண பயம், அவர்களின் இதயங்களில் மீண்டும் சூழ்கொண்டுள்ளது. இது தனக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சேயா சந்தவமி கொலை மற்றும் சிவலோகநாதன் வித்யா என்ற மாணவியின் படுகொலை உள்ளிட்ட கடந்த சில நாட்களாக இடம்பெற்ற படுகொலை சம்பவங்கள் எனக்கு அதிர்ச்சியூட்டிவிட்டன.
இந்த நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு பிள்ளைகளின் பாதுகாப்பு அவர்களின் பெற்றோர்களிடம் மட்டுமில்லை. அந்த பொறுப்பு நாட்டை ஆட்சி செய்கின்றவர்களின் கைகளிலும் இருக்கின்றது என்பதே எனது நம்பிக்கையாகும். அதற்கு முன்னுரிமையளிக்குமாறு ஆட்சியில் இருப்பவர்களிடம் நான் கோரிக்கை விடுகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sirasa Tv News 1st 10 O' Clock Sinhala News - 30th September 2015
Sirasa Tv News 1st 10 O' Clock Sinhala News - 30th September 2015
Channel 1 MTV News 1st English 30th September 2015
Channel 1 MTV News 1st English 30th September 2015
Shakthi Tv News 1st Tamil News 30th September 2015
Shakthi Tv News 1st Tamil News 30th September 2015
Obama Congrats Maithri
Obama Congrats Maithri
முன்னாள் தீவிரவாத அரசியல் கைதிகளுக்கு என அமைப்பு உருவாக்க வேண்டும் - விக்னேஸ்வரன்!
முன்னாள் தீவிரவாத அரசியல் கைதிகளுக்கு என்று ஒரு அமைப்பினை உருவாக்கி அதன் ஊடாக அவர்களுக்காக வாதடும் சட்டத்தரணிகளுக்கு பணத்தினை வழங்க கூடிய வழிமுறை ஏற்படுத்த வேண்டும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளாக உள்ள தமது தந்தையர்களை விடுவிக்க கோரி யாழில் இன்றைய தினம் சிறுவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தியதுடன் ஜனாதிபதிக்கு முதலமைச்சர் ஊடாக மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்.
அந்த மகஜரை பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அரசியல் கைதிகளுக்காக ஆஜாராகி வாதட முன்வரும் சட்டத்தரணிகளுக்கு பணத்தினை கொடுக்கும் அளவுக்கு அரசியல் கைதிகளிடம் பணம் இல்லை. ஆகவே அரசியல் கைதிகளுக்கு என ஒரு அமைப்பினை உருவாக்கி அந்த அமைப்பின் ஊடாக சட்டத்தரனிகளுக்கு பணத்தினை வழங்க முடியும்.
இலங்கையில் அரசியல் கைதிகளின் நிலை அரசியல் ஆக்க ப்பட்டு உள்ளது. அதனால் தான் அவர்களுடைய பிரச்சனை தீர்க்கப்படவில்லை. வடமாகாண சபை பதவியேற்ற காலத்தில் இருந்தே அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கலந்துரையாடியும் பேசியும் வருகின்றோம் ஆனால் இதுவரை அவர்களுடைய பிரச்சனை தீர்க்கப்படவில்லை. அரசியல் கைதிகள் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக அல்லாது அரசியல் காரனங்களுக்காகவே கைது செய்து அவர்கள் மீது குற்றசாட்டுக்களை சுமத்தி அவர்களை வாட்டுகின்றார்கள். ஜெனிவாவுக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்புகின்றேன். அதில் அரசியல் கைதிகளையும் விடுவிப்பார்கள் என எண்ண இடமுண்டு என மேலும் தெரிவித்தார்.
சந்திரிக்கா மீது தற்கொலை தாக்குதல் நடத்திய புலிகள் இருவருக்கு சிறைத்தண்டனை - பெண்ணொருவர் விடுதலை!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை இலக்குவைத்து தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்துவதற்கு உதவியதாக கூறப்படும் இருவரையும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குற்றவாளிகளாக இனங்கண்டார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரான பெண்ணை விடுதலைச் செய்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தற்கொலை குண்டுதாரியை பயன்படுத்தி கொலை செய்யும் முயற்சிக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இரண்டு பேரை குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரண்டு பேரை குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி பத்மினி ரணவக்க பெண்ணொருவரை குற்றச்சாட்டில் இருந்து முற்றாக விடுதலை செய்துள்ளார்.
குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள ஒருவருக்கு 260 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ள நீதிபதி, அந்த தண்டனையை 30 வருடத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மற்றைய குற்றவாளிக்கு 300 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, அவரும் தண்டனை 30 ஆண்டுகளுக்கு அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார். உதயன் என்று அழைக்கப்படும் வேலாயுதம் வரதராஜா மற்றும் சந்திரா ஐயர் ரகுபதி சர்மா ஆகியோருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பூபதி சர்மா என்ற பெண்ணே குற்றச்சாட்டில் இருந்து விடுக்கப்பட்டுள்ளார். 1999 ம் ஆண்டு டிசம்பர் 18ம் திகதி கொழும்பு நகர சபை மைதானத்தில் நடைபெற்ற பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்ட மேடைக்கு அருகில் புலிகளின் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காயமடைந்ததுடன் ஒரு கண்ணை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.