Overblog
Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

கள்ளத்தோணியில் வந்த இலங்கை பெண்: போலீசார் குழப்பம்!

November 3 2015 , Written by lankatime

கள்ளத்தோணியில் வந்த இலங்கை பெண்: போலீசார் குழப்பம்!

ராமேஸ்வரம்:தனுஷ்கோடிக்கு கள்ளத்தனமாக படகில் வந்த இலங்கை பெண் கூறிய பொய் தகவலால், உளவுதுறை போலீசார் குழப்பமடைந்துள்ளனர்.ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் சுற்றி திரிந்த இலங்கை பெண் ஒருவரை மண்டபம் மரைன் போலீசார் பிடித்தனர். அவரிடம் மத்திய, மாநில உளவுதுறை போலீசார் விசாரித்ததில், இலங்கை திரிகோணமலையைச் சேர்ந்த கிங்ஸ்லி மனைவி மேரி மார்க்ரெட் 58, என தெரிந்தது.இவர் 2007ம் ஆண்டு பாஸ்போர்டில் தனது கணவருடன் மருத்துவ சிகிச்சைக்கு சென்னைக்கு வந்து தங்கியுள்ளார். பின்னர் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கோபம் அடைந்த மேரி மீண்டும் இலங்கை செல்ல தனுஷ்கோடி வந்ததாக கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய உளவுதுறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த மரைன் ஏ.டி.எஸ்.பி., ஞானசிவக்குமார், மேரியிடம் மீண்டும் விசாரித்தார். அவர் கணவருடன் சென்னை அம்பத்துாரில் 8 ஆண்டுகள் தங்கியதும், கணவருடன் ஏற்பட்ட தகராறினால் கடந்த அக். 27ல் விமானம் மூலம் இலங்கை சென்றது தெரியவந்தது. மேலும், அங்கு ராணுவத்தினரின் கெடுபிடிகளைக் கண்டு பயந்து மேரி, நேற்று முன்தினம் இரவு மன்னாரில் இருந்து கள்ளபடகில் தனுஷ்கோடி வந்திறங்கியது தெரியவந்தது. இலங்கையில் இருந்து அகதியாக வந்தால் பாஸ்போர்ட் வழக்கில் சிறையில் அடைப்பார்கள் என்பதால், இதற்கு பயந்து மேரி உண்மையை மறைக்க நாடகம் ஆடுவதாக போலீசார் கருதுகின்றனர். மேரி மீது என்ன நடவடிக்கை எடுப்பது என போலீசார் குழப்பமடைந்துள்ளனர்.

Read more

விமான விபத்தில் உயிர் இழந்த பயணிகளின் உடல்கள் ரஷியாவுக்கு அனுப்பப்பட்டன!

November 3 2015 , Written by lankatime

விமான விபத்தில் உயிர் இழந்த பயணிகளின் உடல்கள் ரஷியாவுக்கு அனுப்பப்பட்டன!
விமான விபத்தில் உயிர் இழந்த பயணிகளின் உடல்கள் ரஷியாவுக்கு அனுப்பப்பட்டன!

எகிப்து நாட்டின் கடற்கரை சுற்றுலா நகரமான ஷரம் எல் ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு கடந்த சனிக்கிழமை ஏர்பஸ் ஏ321 ரக விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. 217 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்த அந்த விமானம் சினாய் தீபகற்ப பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 224 பேரும் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் ரஷியாவை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டு உள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், விபத்தில் இறந்த ரஷிய பயணிகளின் உடல்களை ரஷியாவுக்கு அனுப்பும் பணிகளை எகிப்து நிர்வாகம் விரைந்து மேற்கொண்டது. அதன்படி 144 உடல்கள் அடங்கிய முதல் விமானம் நேற்று காலையில் உள்ளூர் நேரப்படி சுமார் 6 மணிக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள புல்கோவோ விமான நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் அந்த உடல்கள் அனைத்தும் ஒரு பெரிய லாரியில் ஏற்றப்பட்டு, அடையாளம் காண்பதற்காக அருகில் உள்ள சவக்கிடங்கு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டன. மீதமுள்ள ரஷிய பயணிகளின் உடல்களை ஏற்றிக்கொண்டு 2-வது விமானம் நேற்று மாலையில் எகிப்தை விட்டு புறப்பட்டது. இந்த விபத்தால் ரஷியாவில் நேற்று முன்தினம் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

Read more

ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்துக்கு எதிரான போராட்டத்தை மாத்தறையில் இருந்து தொடங்குகிறது மஹிந்த அணி!

November 3 2015 , Written by lankatime

 ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்துக்கு எதிரான போராட்டத்தை மாத்தறையில் இருந்து தொடங்குகிறது மஹிந்த அணி!

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மஹிந்த ஆதரவு அணி தீர்மானித்துள்ளது. இதன்படி முதற்கட்ட எதிர்ப்பு நடவடிக்கை இம்மாத நடுப்பகுதியில் மாத்தறையில் இடம்பெறவுள்ளது.

அதன்பின்னர் இரண்டாம் கட்ட நடவடிக்கை கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன், ஜெனிவா தீர்மானத்திலுள்ள ஆபத்து தொடர்பில் கிராமப்புற மக்களுக்கும் தெளிவுபடுத்தப்படவுள்ளது என்று மஹிந்த ஆதரவு அணி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன், சர்வகட்சி மாநாட்டுக்கும் எதிர்ப்பு வெளியிடப்படவுள்ளது. ஜெனிவா தீர்மானத்தை அமுல்படுத்த வேண்டுமானால், நாட்டில் சட்டம் இயற்றப்பட வேண்டும். அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். உயர்நீதிமன்றம் வரை செல்வோம். இராணுவத்தைக் காட்டிக்கொடுப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

Read more

பிரபாகரன் சரணடைந்திருந்தால் அவரை மீட்டு புனர்வாழ்வு அளித்திருப்போம் : கோத்தபாய!

November 3 2015 , Written by lankatime

பிரபாகரன் சரணடைந்திருந்தால் அவரை மீட்டு புனர்வாழ்வு அளித்திருப்போம் : கோத்தபாய!

பிரபாகரன் சரணடைந்திருந்தால் அவரை மீட்டு புனர்வாழ்வு அளித்திருப்போம் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எனக்கு எதிராக குற்றம் சுமத்துபவர்கள் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். புலித்தேவன் மட்டுமன்றி பிரபாகரன் கூட சரணடைந்திருந்தால் மீட்டு புனர்வாழ்வு அளித்திருப்போம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் விசாரணை அறிக்கை ஒரு பக்கச் சார்பானது. படையினர் மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை. புலம்பெயர் தமிழ் சமூகமே யுத்த வெற்றியினால் அதிருப்தி கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியமை ஓர் பிழையான செயலாகும், இதன் ஊடாக நாடு சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும். அண்மையில் இலங்கைக்கு ஜப்பான் வழக்குரைஞர் ஒருவர் விஜயம் செய்திருந்தார். உள்நாட்டு நீதவான்கள் விசாரணைகளில் பங்கேற்க மறுத்தால் சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான பொது மக்கள் உயிர்ச் சேத விபரங்கள் தொடர்பில் அப்போதைய அரசாங்கம் வழங்கிய புள்ளி விபரத் தகவல்கள் மற்றும் பரணகம அறிக்கை ஆகியனவற்றை சர்வதேச சமூகம் நிராகரித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 5000 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 25000 த்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வது அல்லது புதிய சட்டங்களை அமுல்படுத்துவதும் குறித்து தற்போதைய அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். யுத்த நிறைவின் போது 5000 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். நான் பதவியை விட்டு ஓய்வு பெற்றுக்கொண்ட போது அந்த எண்ணிக்கை 270 ஆக குறைவடைந்திருந்தது.

கடுமையான பயங்கரவாத குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் துணை இராணுவக் குழுக்களை உருவாக்கவில்லை. கருணா கூட 2005 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே புலிகளிடமிருந்து பிளவடைந்து செயற்பட்டனர். துணை இராணுவக் குழுக்களுக்கு முன்னைய அரசாங்கம் ஆயுதங்களை வழங்கியது. வெள்ளைவான் கடத்தல்களில் எனக்கு தொடர்பு கிடையாது. 1986 – 1989 ஆம் ஆண்டுகளில் பல வர்ண வேன்களில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர் யுவதிகள் தெற்கில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த வரலாற்றை அமைச்சர் மேர்வின் சில்வா மறந்து விட்டு கருத்து வெளியிட்டு வருகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளே லக்ஸ்மன் கதிர்காமரை படுகொலை செய்தனர். நாமே அந்த விசாரணைகளை நடத்தி உண்மைகளை வெளிக்கொணர்ந்தோம்.

பிரபாகரன் சரணடைந்திருந்தால் அவரை மீட்டு புனர்வாழ்வு அளித்திருப்போம் : கோத்தபாய!
Read more

216 தமிழ்க் கைதிகள் குறித்த அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு!

November 3 2015 , Written by lankatime

216 தமிழ்க் கைதிகள் குறித்த அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிப்பு!

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 216 விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, என சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார். எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கைதிகள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் வழங்கிய உறுதி மொழிக்கு அமைய, இந்த அறிக்கை சிறைச்சாலை திணைக்களத்தினால் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மகசீன் உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் அண்மையில் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை நடத்தியிருந்தனர். விடுதலைப் புலிச் செயற்பாடுகள் தொடர்பில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் மற்றும் வழக்குத் தொடரப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில் அறிக்கை தயாரித்து வழங்குமாறு சிறைச்சாலை தலைமையகத்திற்கு அரசாங்கம் பணிப்புரை விடுத்திருந்தது. கொழும்பு, மகசீன், அனுராதபுரம், மட்டக்களப்பு, பதுளை, களுத்துறை, பல்லேகலே உள்ளிட்ட சிறைச்சாலைகளில் 216 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்பிலான விசேட அறிக்கையொன்று சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நயாகம் ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

Read more

மோசடி தொடர்பில் மைத்திரி, ரணில் உட்பட 75 பேருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு!

November 3 2015 , Written by lankatime

மோசடி தொடர்பில் மைத்திரி, ரணில் உட்பட 75 பேருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு!

நிலக்கரி கொள்வனவு மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 75 பேருக்கு உயர்நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில் மோசடி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தனியார் நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த குறித்த மனுவில், ஒரு மெற்றிக்தொன் நிலக்கரியைக் கொள்வனவு செய்ய 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற குறைந்த டென்டரை தாமே முன்வைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஒரு மெற்றிக்தொன் நிலக்கரியைக் கொள்வனவு செய்ய 101 மில்லியன் அமெரிக்க டொலர்களை கோரிய நிறுவனம் ஒன்றுக்கு அந்த டென்டர் வழங்கப்பட்டதாகவும், தமது நிறுவனத்திற்கே டென்டரை வழங்க வேண்டும் என, அரச தொழிநுட்ப மதிப்பீட்டு சபை பரிந்துரை செய்திருந்த போதிலும், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட டென்டர் சபை பிரதிவாதிகளுக்கு அதனை வழங்கியதாகவும் குறித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனால் இந்த விடயத்தில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாகவும், தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், இதற்கு தீர்வு பெற்றுத் தருமாறும் மனுதாரர் சார்பில் கோரப்பட்டிருந்தது. முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், குறித்த மனுவை எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதியளித்துள்ளது. இதன்படி மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 75 பேருக்கு, அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Read more

மைத்திரிபாலவுக்கு எதிராக வழக்குத் தொடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி!

November 3 2015 , Written by lankatime

மைத்திரிபாலவுக்கு எதிராக வழக்குத் தொடுக்க உயர்நீதிமன்றம் அனுமதி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சட்டரீதியாக வழக்குத் தொடுக்க முடியுமென பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார். நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் மைத்திரிபால சிறிசேனவும் விசாரிக்கப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியுமென அவர் கூறினார்.

ஓர் அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதிக்கு எதிராகச் சமர்பிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையை முன்னெடுக்க முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதத்தை பிரதம நீதியரசர் நிராகரித்தார். இதையடுத்து இந்த மனு தொடர்பான விளக்கத்தை எதிர்வரும் 15ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சில அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read more

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறமாட்டார் : நாமல்!

November 3 2015 , Written by lankatime

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறமாட்டார் : நாமல்!

தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறமாட்டார் என்று தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச. “ சில துரைமார் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அப்பா அரசியலில் இருந்த ஓய்வுபெறாவிட்டால், ஏதாவது ஒன்றுக்காக உங்களை சிறையில் தள்ளுவார்கள் என தெரிவித்தனர். என்னை சிறையில் தள்ளினாலும் எனது அப்பா அரசியலில் இருந்து ஓய்வுபெறமாட்டார் என்பதை நான் அந்த துரைமாருக்கும் தலைவர்களுக்கும் கூறிக்கொள்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

Read more

ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை : எச்சரிக்கிறார் குணதாச அமரசேகர!

November 3 2015 , Written by lankatime

ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை : எச்சரிக்கிறார் குணதாச அமரசேகர!

ஜனாதிபதிக்கு எதிராக எந்தச் சந்தர்ப்பத்திலும் குற்றவியல் பிரேரணையை கொண்டுவர முடியும் என சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவரும் சிங்கள தேசிய அமைப்புக்களின் ஏற்பாட்டாளருமான டாக் டர் குணதாஸ அமரசேகர மேலும் தெரிவிக்கையில்;

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை ஜெனிவாவிற்கு முன்வைக்காது அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னகத்தே வைத்துக் கொண்டுள்ளார். இச் செயற்பாடானது இலங்கையின் அரசியலமைப்பை மீறியதாகும். எனவே எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணையைக். கொண்டுவர முடியும். பரணகம அறிக்கை யை ஜெனிவாவிற்கு சமர்ப்பிக்கப்படாமையானது இந்த அரசு செய்த மிகப்பெரிய தவறாகும். இதனை சமர்ப்பிப்பதற்குத் தேவையான அளவு சந்தர்ப்பம் காணப்பட்டது. எனவே இதனை சமர்ப்பிக்காமை தேசத்துரோகமாகும். பரணகமவின் அறிக்கை ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் எமக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தீர்ந்து போயிரு க்கும். ஆனால் சர்வதேசத்தை வென்றுவிட் டோம் என மார்தட்டும் ஜனாதிபதி எமது படையினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை என நேரடியாக கூறியிருந்தால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்திருக்கும்.

இவ்வாறு நேரடியாக எவ்வித கருத்தையும் வெளியிடாது புதுப் புதுக் கதைகளைக் கூறுகின்றார். இதனால் எந்தப் பயனும் இல்லை. இவ்வாறு பரணகம அறிக்கையை ஜெனிவாவிற்கு முன்வைக்காது எமக்கு எதிரான விசாரணைகளுக்கு அரசு இணங்கியது தேசத்துரோகமாகும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங் கைப் படையினருக்கு எதிராக தயாரிக்கப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய புதிதாக தயாரித்த அறிக்கையொன்றை தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் ஜெனிவாவிற்கு அனுப்பி வைத்துள்ளது. இப்புதிய அறிக்கை சுமந்திரன் தலைமை யில் தயாரிக்கப்பட்டுள்ளது. எமது படையினர் இனச் சங்காரத்தை மேற்கொண்டனர் என்பதை உறுதிப்படுத்தவே இவ்வாறானதோர் புதிய அறிக்கையொன்று ஜெனிவாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜனாதிபதியும் அரசும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அனைத்து தவறுகளையும் செய்து விட்டு ஜனாதிபதியினால் சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டுள்ளது.

இதற்கு என்ன தேவை என்பது எமக் குப் புரியவில்லை. ஜெனிவா பிரேரணைக்கு முன்பதாகவே இவ்வாறான தொரு சர்வகட்சி மாநாடு கூட்டப்படவிருந்தது. ஆனால் அமெரிக்கா எமக்கு எதிரான பிரேரணையை ஜெனிவா வில் முன்வைத்து அது நடைமுறைப்படுத்த தயாராகிய நிலையில் எமக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ள சூழ்நிலையில் இலங்கை அரசு அமெரிக்க பிரேரணையை ஏற்றுக் கொண்ட நிலையில் எதற்காக சர்வகட்சி மாநாடு? ‘ஜெனிவா மலர்வளையத்திற்கு எதிர்க் கட்சியினதும் ஆதரவைப் பெற்றுக் கொண் டோம் என்பதை வெளிப்படுத்தவே சர்வ கட்சி மாநாடு என்ற கண் துடைப்பு நாடகம் நடத்தப்படுகிறது.

Read more
<< < 1 2