தேனிலவின் போது கணவரை அறையில் பூட்டி பேஸ்புக் தோழியுடன் புதுப்பெண் ஓட்டம்!
வங்காளதேசம் தலைநகர் டாக்காவைச் சேர்ந்த தொழில் அதிபர் சன்னால்லா. இவரது மகள் ஜன்னத். இளம்பெண்ணான இவருக்கு பேஸ்புக் மூலம் 2012-ம் ஆண்டு இந்தூரைச் சேர்ந்த நைனா என்ற இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது.
இருவரும் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி வந்தனர். அவர்களது நட்பு பிரிக்க முடியாத அளவுக்கு சென்றது. இந்த நிலையில் 2013-ம் ஆண்டு ஜன்னத் இந்தூர் வந்தார். அங்கு தோழி நைனா வீட்டில் தங்கி இருந்தவாறு உள்ளூர் கல்லூரியில் பிபிஏ பட்டப்படிப்பில் சேர்ந்து படித்தார்.
பேஸ்புக் தோழிகளுக்கு இடையேயான நெருங்கிய நட்பை பெற்றோர் அறிந்திருக்கவில்லை. இந்த நிலையில் நைனாவுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்தனர். இதற்கு நைனா எதிர்ப்பு தெரிவித்தார். இறுதியில் திருமணம் ஆன பின்னும் தோழி ஜன்னத்துடன்தான் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் திருமணத்துக்கு சம்மதித்தாள்.
மகேஷ் என்பவருக்கும் நைனாவுக்கும் திருமணம் நடந்தது. அதன் பிறகு மகேஷ்- நைனா தேனிலவுக்காக கோவா புறப்பட்டனர். மணமகள் நைனா தன்னுடன் பேஸ்புக் தோழி ஜன்னத்தையும் கோவாவுக்கு அழைத்து சென்றார். அதன் பிறகுதான் விபரீதம் ஏற்பட்டது.
அங்கு தோழியைப் பிரிந்து கணவருடன் செல்ல மணமகள் நைனா மறுத்து விட்டாள். இதனால் தகராறு ஏற்பட்டது. அப்போது இரு தோழிகளும் சேர்ந்து புதுமாப்பிள்ளை மகேஷை ஒரு அறையில் போட்டு பூட்டி விட்டு இருவரும் கோவாவில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதை அறிந்த மகேஷ் அதிர்ச்சி அடைந்தார். ஒரு வழியாக அறையில் இருந்து வெளியேறி ஊர் வந்து சேர்ந்தார். நைனாவிடம் வந்து ஜன்னத்துடனான தொடர்பை கைவிடுமாறு மகேஷ் கூறினார். இதை ஏற்க மறுத்ததுடன் தோழியை பிரிக்க பார்க்கிறாயா என்று கணவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மேலும் கணவர் மீது போலீசிலும் புகார் செய்தார்.
இதுபற்றி போலீசாரிடம் கேட்ட போது, நைனாவும், ஜன்னத்தும் கணவன்- மனைவி போல் கருதிக் கொண்டு அன்பு செலுத்துகிறார்கள். ஜன்னத் தனது போனில் நைனாவின் எண்ணை மனைவி என்று குறிப்பிட்டு பதிவு செய்து வைத்துள்ளார். பிரிக்க முடியாத அளவுக்கு நட்பு உருவாகி விட்டது. பெற்றோர் இதை ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள் என்றார்.
விக்னேஸ்வரனின் கருத்து நல்லிணக்கத்துக்கு எதிரானது: சுமந்திரன்!
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எழுக தமிழ் பேரெழுச்சியில் தெரிவித்திருக்கும் கருத்து நல்லிணக்கத்திற்கு எதிரானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் புஎழுக தமிழ்பூ எழுச்சிப் பேரணி நடைபெற்றிருந்தது.
பேரணியின் இறுதியில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றியிருந்தார். இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் சுமந்திரன், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எதிர்ப்பு ஊர்வலத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, நாம் அதில் கலந்துகொள்ள வில்லை. இங்கு வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ள கருத்து நாட்டின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு எதிரானது. நாட்டில் புதிய அரசியல் யாப்பு உருவாக்க நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், இது போன்ற நடவடிக்கைகள் தெற்கு மக்களுக்கு தவறான ஒரு கருத்தை கொடுப்பதாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு : அமெரிக்காவில் 4 பெண்கள் பலி!
அமெரிக்காவில், வணிக வளாகத்தில் புகுந்து, மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில், நான்கு பெண்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் அருகே உள்ள, பர்லிங்டன் பகுதி வணிக வளாகம் ஒன்றில், நேற்று காலை, வழக்கம் போல் மக்கள் நடமாட்டம் இருந்தது. அங்கு வந்த மர்ம நபர் ஒருவன், கையில் வைத்திருந்த துப்பாக்கியால், கண்ணில் பட்டவர்களை சரமாரியாக சுடத் துவங்கினான்; அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
கண்காணிப்பு கேமரா : பின், அங்குள்ள, ஆடை அலங்கார கடையில் புகுந்த மர்ம நபர், துப்பாக்கியால் சுட்டான்; இதில், நான்கு பெண்கள் உயிரிழந்தனர்; ஒரு ஆண் படுகாயமடைந்தார். இதனால், அங்கு பதற்றம் நிலவியது. துப்பாக்கிச்சூடு நடத்தியவன், தப்பியோடி விட்டான்.
போலீசாரும், மீட்பு படையினரும் விரைந்து வந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், பதற்றமின்றி, வணிக வளாகத்தில் இருந்து வெளியேறும் காட்சி பதிவாகியுள்ளது; போலீசார், அவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதிர்ச்சி வீடியோ : இதற்கிடையே, அமெரிக்காவின் சார்லோட் நகரில், சமீபத்தில், குற்றவாளி ஒருவனை கைது செய்வதற்காக, போலீசார் சென்றனர். அப்போது, ஆப்ரிக்க வம்சாவளியை சேர்ந்தவரும், அமெரிக்க குடியுரிமை பெற்ற கறுப்பினத்தவருமான ஸ்காட், 43, என்பவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை அடுத்து, போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அங்கு, மூன்று நாட்களாக, மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, போலீசார், துப்பாக்கியால் சுடும் வீடியோ காட்சியை, ஸ்காட்டின் உறவினர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், போலீசாரிடம், ஸ்காட், 'சுட வேண்டாம்' என, மன்றாடுகிறார்; அவரிடம் ஆயுதம் எதுவுமில்லை. எனினும், அவரை போலீசார் சுட்டுக் கொல்லும் அதிர்ச்சி காட்சி, அதில் இடம் பெற்றுள்ளது.
புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை நீடிக்க முயற்சிப்போம்: மங்கள சமரவீர!
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புலிகள் அமைப்பு மீதான தடையை தொடர சிறிலங்கா தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று வெளிவிவகார மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்ள நியூயோர்க் சென்றுள்ள மங்கள சமரவீர அங்கு இவ்வாறு தெரிவித்தார்.
புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு ஐரோப்பிய நீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை மேன்முறையீடு செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியம், அதற்காக முன்வைத்த காரணங்கள் திருப்திகரமாக இல்லாததால் மேன்முறையீட்டை இரத்துச் செய்ய தீர்மானித்துள்ள நிலையிலேயே ஐரோப்பிய உயர் நீதிமன்றத்தின் உயர்நிலை ஆலோசகரான எலோனோ சாக்ஸ்டன் இந்த ஆலோசனையை வழங்கியிருந்தார்.
ஆனாலும், இந்தத் தடை இலகுவில் நீக்கப்படமுடியாதது என்றும், அது தொடரப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 400 திரையரங்குகளில் வெளியாகும் ஆண்டவன் கட்டளை!
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘ஆண்டவன் கட்டளை’. இப்படத்தை ‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கியுள்ளார். ‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகா சிங் இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். வருகிற 23-ந் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இப்படத்தை ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எம்.எஸ்.சரவணன் தமிழகமெங்கும் வெளியிடுகிறார். கிட்டத்தட்ட 400 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படுகிறது. ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
‘புலி’, ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘சண்டிவீரன்’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய வெற்றிப்படங்களை வெளியிட்ட இந்நிறுவனம் அடுத்ததாக விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பைரவா’ படத்தின் வெளியீட்டு உரிமையையும் வாங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘அடங்காதே’ படத்தையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஜனாதிபதி போட்டியிடப் போவதில்லை: கோத்தாபய ராஜபக்ச!
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று அஸ்கிரிய, மல்வத்தை பீடங்களில் மகாநாயக்க தேரர்களை கோத்தாபய ராஜபக்ச நேற்று சந்தித்துப் பேசினார்.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதி அதிபர் தேர்தலில் நான் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகப் பரவிய வதந்தியால் நான் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டேன். இராணுவ அதிகாரியாக இருபது ஆண்டுகள் நாட்டுக்கு மிகச் சிறந்த சேவையை ஆற்றியுள்ளேன். பாதுகாப்புச் செயலராக மேலும் 10 ஆண்டுகள் பணியாற்றினேன். அரசியலில் எனக்கு அனுபவம் இல்லை.
கூட்டு எதிரணியால் இரத்தினபுரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. நான் அப்போது இரத்தினபுரியில் இருந்தாலும் கூட அந்தப் பேரணியில் கலந்து கொள்ளமாட்டேன்பூ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய், அஜித் செய்யாததை செய்த சூர்யா!
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் பிசிங்கம் 3பீ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், படத்தில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையில் சூர்யா தனது அடுத்தப் படத்திற்கு தயாராகிவிட்டார். நயந்தராவின் காதலர் விஷ்னு சிவன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும், சூர்யாவின் 2டி நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றது
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், படத்தின் தலைப்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிதானாசேர்ந்தகூட்டம்பீ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, அஜித், விஜய் என்று முன்னணி நடிகர்களின் படங்களுக்கு படத்தின் ஆரம்பத்திலேயே தலைப்பு வைப்பது என்பது தமிழ் சினிமாவில் அறிதான ஒன்றாகிவிட்ட நிலையில், சூர்யா தனது படத்தின் தலைப்பை ஆரம்பத்திலேயே அறிவித்தது பாராட்டக்குறியதுதான்.
அஜித் மற்றும் விஜய் இருவரும் தொடர்ந்து தங்களது படத்தின் தலைப்பை ஆரம்பத்தில் அறிவிக்காமல், தங்களது பட்டப் பெயருடன் எண்களை வைத்து விளம்பரப் படுத்தி வருகிறார்கள், பிறகு ஏதாவது சர்ச்சையான தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக்கொள்வதோடு, படப்பிடிப்பு முழுவதும் முடிந்த பிறகோ அல்லது முடியும் தருவாயில் உள்ள நிலையிலேயோ தலைப்பை அறிவிக்கிறார்கள்.
ஆனால், சூர்யா அவர்களைப் போல அல்லாமல், படத்தின் ஆரம்பத்திலேயே தலைப்பை அறிவித்து விஜய், அஜிதால் செய்ய முடியாததை செய்துவிட்டார்
ஐ.நா.,வில் பாக்., பிரதமர் திமிர் பேச்சுக்கு இந்தியா 'பயங்கரவாத நாடு' என கடும் விமர்சனம்!
'பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு; பயங்கரவாதத்துக்கு ஆதரவு என்ற தேசிய கொள்கையை வைத்துள்ள பாகிஸ்தான், இந்தியா மீது தாக்குதல் நடத்துவது, போர்க் குற்றமே' என, ஐ.நா., சபை கூட்டத்தில் இந்தியா கடுமையாக பதிலடி கொடுத்தது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., சபை பொதுக் கூட்டம் நடந்து வருகிறது. இதில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், நேற்று முன்தினம் இரவு பேசினார். அப்போது, பயங்கரவாதிகளை ஆதரித்தும், காஷ்மீர் பிரச்னை குறித்தும் பேசினார்.
இதற்கு பதிலளிக்கும் உரிமையின் அடிப்படை யில், ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர துாதர கத்தின் முதன்மை செயலர், ஈனம் காம்பிர்
பேசியதாவது:பாகிஸ்தான் ஒரு பயங்கர வாத நாடு; பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பது, நிதி உதவி அளிப்பது, இந்தியா உள்ளிட்ட நாடு களின் மீது தாக்குதல் நடத்த துாண்டுவது என, பயங்கரவாத ஆதரவு நாடாக பாகிஸ்தான் உள்ளது.
மனித உரிமை மீறலின் உச்சகட்டம் தான் பயங்கரவாதம்; அதை தேசியக் கொள்கையாக
வைத்துள்ள பாகிஸ்தான், இந்தியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது; இது ஒரு போர்க் குற்றமாகும்.
அமெரிக்காவில், 2001, செப்டம்பர், 11ல் தாக்குதல் நடத்திய, அல் - குவைதா பயங்கர வாத அமைப்பின் தலைவன், ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானின் அபோதாபாத்தில் தான் பதுங்கியிருந்தான்; அவனை அமெரிக்கப் படையினர் கொன்றனர்.அதுபோலவே, இந்தியா வில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்தியுள்ள,
ஐ.நா.,வால் தடை செய்யப்பட்டுள்ள, பயங்கர வாதிகளாக அறிவிக்கப் பட்டுள்ள, ஜெய்ஷ் - இ - முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள், தற்போது பாகிஸ்தானில் உள்ளனர். அவர்கள், பாகிஸ்தான் சாலைகளில் சுதந்திரமாக திரிகின்றனர்;
மக்களிடையே பொதுக் கூட்டங்களை நடத்தி பேசுகின்றனர்; நிதி திரட்டுகின்றனர். ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பாகிஸ்தான் முன்வரவில்லை. பயங்கரவாதிகளின்
மையமாக இருக்கும் நாடு, மனித உரிமை குறித்து பேசுகிறது. காஷ்மீரில் மனித உரிமைகள்
மீறப்படுவதாக பாகிஸ்தான் கூறுவதை ஏற்க முடியாது. இனி, காஷ்மீரில், ஒரு பயங்கரவாதிகூட இருப்பதற்கு இந்தியா அனுமதிக்காது.இவ்வாறு அவர் பேசினார்.
காஷ்மீர் விஷயத்தில் தலையிட ஐ.நா., மறுப்பு:
காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், 'இந்த விஷயத்தில், ஐ.நா., தலையிட முடியாது; இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு நடத்தி, இதற்கு தீர்வு காண வேண்டும்' என, பாகிஸ் தான் பிரதமர் நவாஸ் ஷெரீபிடம், ஐ.நா., பொதுச் செயலர் பான் - கி - மூன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஐ.நா., சபை பொதுக் கூட்டத்தில் பங்கேற்க, நியூயார்க் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஐ.நா., பொதுச் செயலர் பான் - கி - மூனை சந்தித்துபேசினார்.அப்போது காஷ்மீர் விவகாரத் தில், ஐ.நா., தலையிட வலியுறுத்தி மனு அளித்தார். ''காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா.,தலையிட முடியாது,'' என, பான் - கி - மூன், உறுதியுடன் தெரிவித்தார்.
26ல் சுஷ்மா பேச்சு மிரட்சியில் பாக்.,
ஐ.நா., சபை பொதுக் கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசியுள்ள நிலையில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வரும், 26ல்,
அக்ஷஞீக்சுஞ்கூசூக்ஙுக்ஙூஞ்
பேச உள்ளார். ஜம்மு - காஷ்மீரின் யூரி ராணுவ முகாமில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, 'பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் வகையில், சர்வதேச அமைப்புகளில் முறை யிட வேண்டும்' என, பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கப்பட்டு, அதற்கான பலனும் கிடைத் துள்ளது. இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித் துள்ள பல்வேறு நாடுகள், பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், ஐ.நா., சபை கூட்டத்தில் பேசிய நவாஸ் ஷெரீப், பயங்கரவாதத்துக்கு ஆதர வளிக்கும் வகையில் பேசியுள்ளார். 'பாகிஸ் தானுக்கு எதிராக, பல்வேறு நாடுகளை அணி திரட்டும் வகையில், சுஷ்மா சுவராஜின் உரை இருக்கும்' என, வெளியுறவுத் துறை வட்டாரங் கள் தெரிவிக்கின்றன. இதனால், பாக்., மிரட்சி யில் உள்ளது.
பயங்கரவாதி பர்ஹான் வானியை புகழ்ந்ததன் மூலம், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அந்த நாட்டின் உண்மையான முகத்தை பிரதிபலித்துள்ளார்; இருப்பினும் ஒரு பயங்கரவாதியை புகழ்ந்து, ஐ.நா., சபையில் அவர் பேசியது அதிர்ச்சிஅளிக்கிறது.
-எம்.ஜே. அக்பர், வெளியுறவு இணைஅமைச்சர், பா.ஜ.,
வெளிநாடு செல்ல அனுமதி கோரி யோஷித்த சமர்ப்பித்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!
வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரி யோஷித்த ராஜபக்ஸ சமர்ப்பித்த மனு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யன்துடுவ முன்னிலையில் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்து பார்ப்பதற்காகவும், சட்ட மா அதிபரின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காகவும், இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
CSN அலைவரிசைக்கு சொத்துக்கள் திரட்டப்பட்ட விதம் தொடர்பாக இடம்பெறும் வழக்கு விசாரணைக்காக யோஷித்த ராஜபக்ஸவின் கடவுச்சீட்டு நீதிமன்றத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.