கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியுரிமையை பறிக்க முயற்சி: பந்துல குணவர்தன!
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். புஞ்சிபொரளை ஸ்ரீ வஜிராஸ்ரம விஹாரையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “ ஊடக சந்திப்புக்களை நடத்தியதாக குற்றம் சுமத்தி கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து, அவர்களின் குடியுரிமையை ரத்து செய்யும் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மௌனிக்கச் செய்ய அரசாங்கம் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றது. இதன் ஓர் கட்டமாகவே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சிரிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை ரத்து செய்ய அடிப்படையற்ற காரணங்கள் பயன்படுத்தப்பட்டதனைப் போன்று கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை முடக்கவும் முயற்சிக்கப்படுவதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
7 நாடுகளை அமெரிக்காவில் அனுமதிக்க தடை விதிக்கும் டிரம்ப் முடிவிற்கு ஐ.டி., நிறுவனங்கள் எதிர்ப்பு!
7 நாடுகளை சேர்ந்தவர்களை அமெரிக்காவில் அனுமதிக்க தடை விதிக்கும் அதிபர் டிரம்ப் முடிவிற்கு மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சிரியா நாட்டு அகதிகள், அமெரிக்காவில் நுழைய, அதிபர் டொனால்டு டிரம்ப் தடை விதித்துள்ளார். ஈராக், ஈரான் உள்ளிட்ட ஆறு நாடுகளை சேர்ந்தவர்களை, அடுத்த, 90 நாட்களுக்கு, அமெரிக்காவில் அனுமதிக்க தடை விதிக்கும் நிர்வாக உத்தரவிலும், டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார்.
இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவன சி.இ.ஓ., நாதெல்லா கூறியதாவது:
நானும் குடியேறி வந்தவன் தான். சி.இ.ஓ., என்ற அனுபவத்தில், குடியேற்றத்தினால் ஏற்பட்டுள்ள நல்ல பலன்களை நான் உணர்ந்துள்ளேன். இந்த பலன்கள் நமது நிறுவனம், அமெரிக்கா மற்றும் உலகிற்கு நல்லது. இந்த முக்கியமான விஷயத்தில் நாம் தொடர்ந்து போராடுவோம் எனக்கூறினார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிராட் ஸ்மித் கூறியதாவது:
புதிய உத்தரவால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடியேற்ற பிரச்னை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல ஊழியர்களுக்கு முக்கியமான விஷயம். இந்த விவகாரத்தை பல முறை நாதெல்லா பேசியுள்ளார். நிறுவனம் என்ற அடிப்படையில், வலிமையான அதிக கற்றறிந்த மக்கள் குடியேறுவதில் தவறில்லை என்பதில் உறுதியாக உள்ளோம் எனக்கூறியுள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை கூறியதாவது:
இந்த உத்தரவு, திறமையானவர்களை அமெரிக்கா கொண்டு வருவதில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும் எனக்கூறியுள்ள அவர், வெளிநாடு சென்ற தனது ஊழியர்களை திரும்பி வருமாறு இமெயில் அனுப்பியுள்ளார்.
டிரம்ப் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ., மார்க் ஜூக்கர்பெர்க்,
நாட்டை பாதுகாக்க வேண்டியது முக்கியமானது. அதேநேரத்தில், அச்சுறுத்தல் உள்ள நபர்களை மட்டும் தடுக்க வேண்டும். உதவி தேவைப்படுபவர்களுக்கும், அகதிகளுக்கும் கதவுகளை திறுந்து வைக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
வௌிநாட்டு முதலீடுகள் இலங்கைக்குள் கொண்டுவரப்படுகின்றன: பந்துல குணவர்தன!
தற்போதைய அரசாங்கத்தில் ஊழல் மோசடிகள் குறித்து சாட்சியங்கள் உள்ளன : நாமல் ராஜபக்ஷ!(photos)
தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் குறித்து தௌிவான சாட்சியங்கள் உள்ள நிலையிலும், அவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் தான் உள்ளிட்ட குழுவினர் மீது குற்றம்சாட்டிய போதும், அரசாங்கத்திற்கு எதனையும் நிருபிக்க முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர் ஒருவர் அவசரமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்!
அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினரால் பாரிய பேரணி ஒன்று நேற்று முன்தினம் நடத்தப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான இந்த பேரணி நுகேகொடையில் நடைபெற்றது.
இந்தப் பேரணியில் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களும் பங்குபற்றுவர் என பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் நுகேகொடை பேரணியில் கலந்து கொள்ள ஆயத்தமாக இருந்த அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் அவசரமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர் அவசரமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து நுகோகொடை பேரணியில் குறித்த அமைச்சர் கலந்து கொள்ள தயாராக இருப்பதாக புலனாய்வுப் பிரிவினர் அரசாங்கத்திற்கு தகவல் வழங்கியிருந்தனர்.
இவ்வாறான நடவடிக்கை அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால், குறித்த அமைச்சர் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அவர் அமெரிக்கா செல்ல வேண்டிய நடவடிக்கைகளில் தூதரம் விரைவாக செயற்பட்டதாக குறித்த ஊடகம் குறப்பிட்டுள்ளது.
குறித்த விஜயத்தில் ஈடுபடுமாறு அரசாங்கத்தின் முக்கிய நபர், குறித்தத அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சரினால், கூட்டு எதிர்க்கட்சியின் பிரபலங்களிடம் இந்த விடயம் பரிமாற்றப்பட்டுள்ளதாக ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டால் 'பிரெக்ஸிட்' போல அரசாங்கம் வெளியேற வேண்டும் : வாசுதேவ நாணயக்கார!
சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டால் 'பிரெக்ஸிட்' போல அரசாங்கம் வெளியேற வேண்டும் என மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் நேற்று கலந்து கொண்டு உரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நுகேகொடைக்கு வந்த மக்கள் கூட்டம் எமது எதிர்பார்ப்புக்கள் அனைத்திற்கும் மேலாக இருந்தது. ஆட்சிக் கவிழ்ப்பின் ஆரம்பமே இதுவாகும்.
இந்த நிலையில், இந்த அரசாங்கம் இருக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும்.
சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டால், அரசாங்கம் தொடர்பில் மக்கள் சாதகமான பதிலை வழங்கினால், ஆட்சியை நிலைநிறுத்தலாம். இல்லாவிட்டால், 'பிரெக்ஸிட்' போல அரசாங்கம் வெளியேற வேண்டும்.
இதை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு தைரியம் இருக்கிறதா? இல்லை என்று வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க மாநாயக்க தேரர்களுடன் இரகசியமான பேச்சுவார்த்தை!
ரணில் விக்ரமசிங்க கடந்த தினங்களில் மாநாயக்க தேரர்களுடன் சில இரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனுராதபுரத்திற்கு நேற்று விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அடமஸ்தான விகாராதிபதி, மிரிஸ்வெட்டியே விகாராதிபதி, சாரானந்த பிரிவேனவின் பிரதான தேரர் ஆகியோரை தனித் தனியாக சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக பிரதமர் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு மாற்றம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரதமர் ரணில், இதற்கு முன்னர் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்களை சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.
இந்த பேச்சுவார்த்தைகளிலும் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் பொருளாதார விடயங்கள் சம்பந்தமாகவே பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இந்த வருடத்திற்குள் பிரதமராக்கி காட்டுவோம் : குமார வெல்கம!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இந்த வருடத்திற்குள் பிரதமராக்கி காட்டுவோம் என்று கூட்டு எதிர்க்கட்சி சூளுரைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மாபெரும் மக்கள் கூட்டம் புரட்சிக்கான அழைப்பு என்ற தொனிப்பொருளில் நுகேகொடையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம
ஓரினச் சேர்க்கையை சட்டமாக்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இதுபோன்ற அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்பிக்கப்படவில்லை. இவ்வாறானதொரு அரசாங்கத்தில் அமர்ந்திருப்பது குறித்து அமைச்சர்களுக்கு வெட்கம் இல்லையா? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் என்பது ஓரினச் சேர்க்கைக்கு விருப்பமுடையவர்கள் அல்லர். ஆனால் வேறுவேறு விடயங்கள் காணப்பட்டன. ஓரினச் சேர்க்கை சுதந்திரக் கட்சியில் இல்லை.
பிரஜாவுரிமையை நீக்குவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடினமான காரியமல்ல. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பிரஜாவுரிமையை நீக்கியதும் ஐக்கிய தேசியக் கட்சிதான். எனவே பிரஜாவுரிமையை நீக்குதலுக்கு பயந்தவர்கள் நாங்கள் அல்ல. பிரஜாவுரிமையை நீக்கினாலும் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை.
மஹிந்த ராஜபக்சவை ஓய்வுபெற்றுச் செல்ல சொல்கின்றார்கள். ஆறுபோல மக்கள் திரண்டு நிற்கையில் மஹிந்த ராஜபக்ச எவ்வாறு ஓய்வுப்பெற்றுச் செல்வார்? எனவே 2017ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கிக் காட்டுவோம் என்றார் குமார வெல்கம.