Overblog
Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

அமெரிக்கா- மெக்சிகோ தடுப்புச்சுவர்; ஒரு ரூபாய் கூட தர முடியாது : மெக்சிகோ அதிபர்!

January 28 2017 , Written by lankatime

மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் ஊடுருவல், போதைப்பொருள் கடத்தல் என்பது சாதாரண நிகழ்வாக உள்ளது. இதனால், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போது, தான் வெற்றி பெற்றால்

மெக்சிகோவுடனான எல்லையில் தடுப்புச்சுவர் கட்டப்படும் என டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

அதோடு மட்டுமல்லாமல், தடுப்புச் சுவர் கட்டுவதற்கான செலவை மெக்சிகோ  ஈடுசெய்ய வேண்டும் என கூறியிருந்தார். டிரம்பின் இந்த கருத்துக்கு மெக்சிகோ அதிபர் எண்ட்ரிக் பெனா நீட்டோ, தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்பை விமர்சித்து பதில் கருத்து தெரிவித்திருந்தது பலத்த சர்ச்சையை கிளப்பியிருந்தது.

இந்நிலையில், தற்போது  ஜனாதிபதி பதவி ஏற்ற பின்னர், அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் 3,200 கிலோ மீட்டர் தொலைவில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கான உத்தரவை பிறப்பித்தார்.  மேலும்,  “எல்லையில்லாத தேசம் தேசமே கிடையாது,” என டிரம்ப் கூறியிருந்தார்.

டொனால்டு டிரம்ப் உத்தரவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நீட்டோ , ”சுவர்களில் மெக்சிகோவுக்கு நம்பிக்கை இல்லை. நான் இதை பல முறை கூறி விட்டேன். இந்த சுவருக்காக மெக்சிகோ எந்தப் பணமும் தராது

எல்லையில் சுவர் கட்டும் அமெரிக்காவின் நடவடிக்கை என்னை வருத்தத்துக்கு ஆளாக்கி உள்ளது. இது நம்மை சேர்ப்பதற்கு பதிலாக பிரித்து விடும்”

எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Read more

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதே ரணிலின் சதித்திட்டம் : உதயகம்மன்பில!

January 28 2017 , Written by lankatime

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதே ரணிலின்  சதித்திட்டம் : உதயகம்மன்பில!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதே ரணில் விக்ரமசிங்கவின் சதித்திட்டம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார்.

ஆட்சிக் கவிழ்ப்புக்கான முதற்படி எனக் கூறப்படும் கூட்டு எதிர்க்கட்சியின் புரட்சியின் ஓர் ஆரம்பம் கூட்டம் நுகேகொடையில் நேற்று இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்க மகிந்த ராஜபக்ச தேடிவைத்த அனைத்தையும் விற்று விட்டு அதன் மூலம் தனக்கு இலாபத்தை தேடிக் கொண்டு வருகின்றார்.

அதனால் அவர் எதிர்ப்பார்ப்பது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று கொள்வதே. அதற்கான சதித்திட்டத்தையே ரணில் தீட்டிக் கொண்டு வருகின்றார்.

மகிந்த எனும் புயல் ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவது உறுதி அதற்கான மக்கள் சூறாவளி இன்று புரட்சியாக எழுந்துள்ளது.

இரண்டாவது சுதந்திரப்போராட்டத்தை மகிந்த ஆரம்பித்து வெற்றி பெற்றதைப் போல் தற்போது கேடு கெட்ட ஆட்சியை கவிழ்க்க சுதந்திர போராட்டத்தை ஆரம்பித்து விட்டார்.

அதற்கான விடை இப்போது கண்முன்னே தெரிகின்றது. நாட்டை காட்டிக் கொடுத்து ஆட்சி செய்யும் ரணிலின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.

தாய் நாடு இப்போது காப்பாற்றுமாறு அழுகின்றது. இந்த நாட்டை காப்பாற்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தயாராக இருக்கின்றார்.

அவருக்கு நீங்கள் உதவி செய்யுங்கள். ரணிலின் முறையற்ற ஆட்சியை மீட்டு எடுத்து மகிந்தவிடம் ஒப்படைக்க நாம் அனைவரும் இணைந்து செயற்படுவோம் எனவும் கம்மன்பில தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதியும், பிரதமரும் பலா இலை மற்றும் க்ரோட்டன் இலையை உட்கொண்டு பொது மக்களுக்கு எடுத்துக்காட்டாக, இருக்க வேண்டும் என பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

உணவு பற்றாக்குறை ஏற்படுமாயின், பலா இலை மற்றும் க்ரோட்டன் இலையை உண்ணுமாறு அரசாங்கம் கேட்டுக்கொள்ளும் என்றும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த நிலையை அரசாங்கம் ஏற்படுத்துமாயின், ஜனாதிபதியும், பிரதமரும் பலா இலை மற்றும் க்ரோட்டன் இலையை உண்ணும் நேரடி தொலைக்காட்சி பதிவு ஒன்றை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கடனை பெற்று தீவிர பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது என்றும் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை குறித்த கூட்டத்திற்கு 10 இலட்சம் மக்கள் வருகை தந்துள்ளதாக கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மேடையில் தெரிவித்தமை குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

Read more

ஓய்வுபெற்றுச் சென்ற என்னை மீண்டும் அரசியலுக்கு இங்கு இழுத்தவர் மைத்திரி: மஹிந்த ராஜபக்‌ஷ!(படங்கள் இணைப்பு)

January 27 2017 , Written by lankatime

ஓய்வுபெற்றுச் சென்று சுகபோகமாக இருக்க எண்ணிய என்னை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அரசியலுக்கு இழுத்து வந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் இன்று நடைபெற்ற புரட்சியின் ஆரம்பம் பேரணியின் போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

மோசடியான அரசியலமைப்பு ஒன்றை தயாரிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும், அதற்கு எதிராக செயற்பட வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதேபோன்று தற்போது நாட்டில் பாரிய கடன் பளு தோற்றியிருப்பதாகவும், அதற்கு தம்மீது குற்றம்சுமத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

தாம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே கடன் பெற்றதாகவும், அதன் பிரதிபலன்களை பொதுமக்கள் தற்போது அனுபவித்து வருவதாகவும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஆனால், தற்போதைய அரசாங்கம் பாரியளவில் கடன் பெற்ற போதும் எந்தவொரு அபிவிருத்தியையும் முன்னெடுக்கவில்லை என குற்றம்சுமத்தினார்.

நாட்டில் தற்போது தோற்றியுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக தாம் வேண்டும் என்றே தோல்வியடைந்ததாக சிலர் குற்றம்சுமத்துகின்றனர்.

ஆனால் தாம் எதற்காக ஆட்சியை பொறுப்பேற்றேன் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Read more

பாதுகாப்பு தொடர்பாக ஆராயும் முகமாகவே மஹிந்தவுக்கு பதிலாக போலி உருவம்: ஜோன்ஸ்டன்!(படங்கள் இணைப்பு)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இன்றி அவரது வாகனம் மாத்திரம் முதலில் நுகேகொடை பொதுக்கூட்டத்திற்கு கொண்டு வரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்தார்.

மஹிந்தவின் பாதுகாப்பு தொடர்பாக ஆராயும் முகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

நுகேகொடையில் நடைபெற்ற புரட்சி பேரணியில் மேலும் உரையாற்றிய அவர், ´முன்னாள் ஜனாதிபதியின் வாகனம் என்ற போர்வையில் நாம் பிறிதொரு வாகனத்தை அனுப்பு பாதுகாப்பு நிலைமை தொடர்பாக பரிட்சித்தோம்´ என தெரிவித்தார்.

கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, முன்னாள் ஜனாதிபதியின் வருகையை குறிக்கும் வகையில் தமது உரையை இடை நிறுத்தினார்.

அந்த தருணத்தில் நிகழ்ச்சியை நெறிப்படுத்திக் கொண்டிருந்த அறிவிப்பாளர் முன்னாள் ஜனாதிபதியை வரவேற்கும் வகையிலான அறிவிப்புகளை மேற்கொண்டார்.

எனினும், அந்த வாகனத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வராத நிலையில், சற்று நேரம் கழிந்து குறித்த வாகனம் பின்னோக்கி நகர்ந்தது.

மீண்டும் தமதுரையை ஆரம்பித்த ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பாதுகாப்பு நிலைமைகளை ஆராயும் வகையில் மஹிந்தவுக்கு பதிலாக போலியொன்றை எடுத்து வந்ததாக தெரிவித்தார்.

Read more

நுகேகொடையில் நடைபெறும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ´புரட்சி பேரணி! (படங்கள் இணைப்பு)

நுகேகொடையில் நடைபெறும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ´புரட்சி பேரணி!

இலங்கையின் ​அரசியல் வரலாற்றில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகச் சிறந்த இடத்தை பிடிப்பார் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது கட்சியை தாமே தோற்கடிக்கச் செய்த மிக அற்புதமாக அரச தலைவர் என்ற பெயரை பெற்று விடுவார் என அவர் குறிப்பிட்டார்.

இதன்காரணமாக, அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ யுகத்தை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும் என ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ஒருசிலர் தம்முடன் இணைந்துகொள்ளுமாறு கோரிக்கையை ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்தார்.

Read more

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு செய்த நன்மைக்காக நன்றிக்கடன் செலுத்த வேண்டும் : கருணா!

January 27 2017 , Written by lankatime

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு செய்த நன்மைக்காக நன்றிக்கடன் செலுத்த வேண்டும் : கருணா!

தான் நன்றிக்கடன் செலுத்துவதற்கு மறப்பதில்லை எனவும், அதனால் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு செய்த நன்மைக்காக நன்றிக்கடன் செலுத்த வேண்டும் எனவும், ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் உப தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று (27) நுகேகொடையில் நடைபெற்று வரும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

தான் தமிழ் மொழியில் கூட்டத்தில் உரையாற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடமிருந்து அறிவுறுத்தல் கிடைத்ததாகவும் கருணா அம்மான் தெரிவித்தார்.

அதேபோன்று நாட்டை மீட்டெடுத்த தலைவர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றிக்கடன் செலுத்துமாறு அனைவரையும் தாம் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Read more

மீண்டும் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைவோம் : காமினி லொக்குகே!

January 27 2017 , Written by lankatime

மீண்டும்  மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைவோம் : காமினி லொக்குகே!

மீண்டும் ஒருமுறை மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ஏற்பாட்டில் நுகேகொடையில் நடைபெற்றுவரும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

Read more

ஹட்டனில் ஏற்பட்ட கோர விபத்து: பெண் பலி, இருவர் கவலைக்கிடம்!! (படங்கள் இணைப்பு)

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் – குடாஓயா பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் பலத்த காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற லொறி ஒன்றும் கொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் ஹட்டன் – குடாஓயா பிரதான வீதியில் நேர்க்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர். லொறி சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்மணியின் சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பலத்த காயங்களுக்குள்ளான இருவரையும் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விபத்துக்கு காரணமான லொறியின் சாரதியை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் இடம்பெற மஹிந்த ஆட்சி இனி இடமளிக்காது : ஏ. எச்.எம். அஸ்வர்!

January 27 2017 , Written by lankatime

முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் இடம்பெற மஹிந்த ஆட்சி இனி இடமளிக்காது : ஏ. எச்.எம். அஸ்வர்!

அளுத்கமையில் நடந்த சம்பவம் எம்மை மீறி நடந்த ஒரு செயல். இது குறித்து நாம் வருத்தமடைகிறோம். இனிவரும் காலங்களில் இப்படியான சம்பவங்கள் முஸ்லிம்களுக்கெதிராக நடப்பதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதி தெரிவித்திருக்கிறார் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

பொரளை என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நுகேகொடையில் நடைபெறவுள்ள மக்கள் பேரணி தொடர்பாக விளக்கமளிப்பதற்காக நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலே இவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கும் மிகவும் கசப்பாக மாறியுள்ள நல்லாட்சி என்னும் இந்தப் பொல்லாட்சியைத் தூர வீசி எறிவதற்கு முஸ்லிம்களும் தங்களுடைய பங்களிப்பை அளிப்பதற்கென இன்று (27)வெள்ளிக்கிழமை நுகேகொடையில் மக்கள் பேரணியில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். நாட்டின் நாலா புறங்களிலிருந்தும் வடக்கில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மன்னார்,கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளிலிருந்து தமிழ் அன்பர்களும் கிழக்கு மாகாணம் மற்றும் ஏனைய இடங்களிலிருந்து முஸ்லிம்களும் இதில் சமூகமளிக்கவிருக்கின்றனர்.

எனவே 27ஆம் திகதிக்குப் பிறகு இந்தப் பொல்லாட்சியை எல்லா சமயத்தவருக்கும் எதிரான இந்த ஆட்சியை, எல்லாப் பொதுமக்களும் வெறுக்கின்ற இந்த ஆட்சியை, தூர வீசி எறிவதற்கு அனைத்து முஸ்லிம்களும் தங்களது பூரண ஆதரவை வழங்க வேண்டுமென்று முஸ்லிம் முற்போக்கு முன்னணி சார்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

சென்ற பொதுத்தேர்தல்களின் போது முஸ்லிம்களுக்கு பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து உண்மைக்குப் புறம்பான விடயங்களைக் கூறித்தான் இந்த மைத்திரி – ரணில் அரசு பதவிக்கு வந்தது. எனினும் எமக்கு இது போதும் போதும் என்றாகிவிட்டது, முஸ்லிம்களின் உடைமைகளைப் பாதுகாப்பதற்கு, முஸ்லிம்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்த அரசாங்கம் முன் வருகுது இல்லை. எவ்வளவு கூறினாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலதான் இது இருக்கின்றது என்று இன்று அரசாங்கத்தில் உள்ளவர்களே சொல்லுகிறார்கள்.

எனவே இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் அரசாங்கத்தை அரசிலிருந்து விரட்டுவது. அதற்குரிய ஆரம்ப நடவடிக்கையாகத்தான் இன்று(27) வெள்ளிக்கிழமை இந்த மாபெரும் பேரணி நடத்தப்படுகின்றது. இன்று முஸ்லிம் அனைவர் மத்தியிலும் மஹிந்த ராஜபக்ஷவைத்தான் மீண்டும் கொண்டு வாருங்கள் என்ற கோஷம் நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பரவலாக எழுந்து எதிரொலிக்கின்றது.

அளுக்கமையில் நடந்த சம்பவங்கள் சம்பந்தமாக சமூக ஊடகங்கள் வாயிலாக ஒரு விசமத்தனமான செய்தி நான் கூறியதாகப் பரப்பப்பட்டு வருகின்றது. அளுத்கமை சம்பவத்தின் குற்றத்தை மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோதாபய ராஜபக்ஷ ஒப்புக்கொண்டுள்ளதாக நான் ஊடக சந்திப்பில் தெரிவித்தாக ஒரு புரளியைக் சொல்லுகிறார்கள். இது உண்மைக்குப் புறம்பானது.

மஹிந்த ராஜபக்ஷ நேரடியாகச் சொல்லியிருக்கின்றார், இது எங்களை மீறி நடந்த செயல். அதைப்பற்றி நாங்கள் வருத்தமடைகின்றோம். இனி வரும் காலங்களில் அப்படியான விடயங்கள் முஸ்லிம்களுக்கு நடைபெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று கூறியிருக்கின்றார் என்றுதான் அந்த ஊடக சந்திப்பில் நான் கூறினேன்.

கோத்தாபய ராஜபக்ஷ பேருவளையில் முஸ்லிம்கள் மத்தியிலே நடந்த கூட்டத்திலும், மேல் மாகாண உறுப்பினர் சபாஉல்லாவுடைய வீட்டில் நடந்த நிகழ்வில் மற்றும் நீர் கொழும்பு கூட்டத்திலும் இதனைத் தெளிவாகச் சொல்லியுள்ளார் .

அளுத்கமையைத் தாக்கி அழித்தவர்களின் பின்னணிலே நின்று அதனை செயற்படுத்தியவர்தான் அமைச்சர் சம்பிக ரணவக்க. அவர் இந்த ஆட்சியிலே அமர்ந்து கொண்டு தாலாட்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றார். மந்திரி சபையிலே பொதுபலசேனாவை தடை செய்ய வேண்டும் என்று நான் கூறிய போது, அதற்கு எதிராக குரல் எழுப்பி மகா சங்கங்களும் ஏனையவர்களும், பாதையிலே இறங்குவார்கள் என்று கூறினார்.

இதன் போது அமைச்சர் ராஜிதவும் அவரோடு இணைந்து பேசினார். ஆனால் இன்று நிலைமை மாறி ராஜித நல்லதாகப் பேசுவதை எண்ணி நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அது முஸ்லிம் வாக்குகளுக்கு மாத்திரமா? அல்லாவிட்டால் அன்று நீங்களும் பொது பலசேனாவை தடை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி கூறிய போது அதற்கு எதிராக ஏன் நின்றீர்கள்? என்று இன்று முஸ்லிம் சமுதாயம் கேட்கின்றது – என்றும் தெரிவித்தார்.

Read more
<< < 1 2 3 4 5 6 7 8 9 10 > >>