Overblog
Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி!

January 26 2017 , Written by lankatime

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் பிரசாரங்களுக்காக பஸ்களை பயன்படுத்தி செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தாமை தொடர்பில் மகிந்த ராஜபக்ச மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயற்குழு ஆகிய தரப்புக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கொழும்பு வணிக மேல்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

வழக்கு தொடர்பிலான பிரதிவாதங்களை முன்வைக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்ன உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து எதிர்வரும் மார்ச் 28 திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.

Read more

எனது தந்தை திட்டமிட்டு கொலை செய்யபட்டார் மைக்கல் ஜாக்சன் மகள் பாரிஸ் ஜாக்சன் புகார்!

January 26 2017 , Written by lankatime

எனது தந்தை திட்டமிட்டு கொலை செய்யபட்டார் மைக்கல் ஜாக்சன் மகள் பாரிஸ் ஜாக்சன் புகார்!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான மைக்கல் ஜாக்சன்  கடந்த 2009 ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார். அதன் பின்னர் அவரது குடும்ப மருத்துவர் கான்ராடு முர்ரே அளவுக்கு அதிகமான சக்தி வாய்ந்த மாத்திரை வழங்கியதுதான் அவர் இறப்பிற்கு காரணம் என்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில் ஜாக்சன் மகளான பாரிஸ் ஜாக்சன் கூறுகையில், எனது அப்பா கொலை செய்யப்பட்டுள்ளார். இது என் குடும்பம் மற்றும் பெரும்பாலான ரசிகர்கள் பலருக்கும் தெரியும்.
என் அப்பாவை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். இது ஒரு சதியாக இருக்கலாம். காரணம் என் அப்பா பாடகராக இருந்த காலக்கட்டங்களில் ஏராளமான பாடகர்கள் நிறைய சிக்கல்களில் இருந்தனர். அவர்கள் நிலைமை மிகவும் வருந்ததக்க வகையில் இருந்தது.

மேலும் இது ஒரு சதுரங்க விளையாட்டு. இதை சரியான முறையில் விளையாடி வெற்றி பெற முயற்சிப்பேன். மேலும் என் அப்பாவுக்கு மர்மமான முறையில் நிறைய எதிரிகள் இருந்தனர்

இதில் நான் யாரையும் குறிப்பிடவில்லை ஆனால் இதை நினைக்கும் போதுஎனக்கு மிகவும் கடினமாக உள்ளது, இதற்கு மேல் தான் எதையும் கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Read more

உலக நாடுகளின் ஊழல் தரவரிசையில் இலங்கைக்கு பின்னடைவு!

January 26 2017 , Written by lankatime

உலக நாடுகளின் ஊழல் தரவரிசையில் இலங்கைக்கு பின்னடைவு!

டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள, உலக நாடுகளின் ஊழல் போக்கு குறித்த தரநிலைப் பட்டியலில், கடந்த ஆண்டை விட இலங்கை இம்முறை பின் தங்கியுள்ளது. உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இதன்படி, 2015ம் ஆண்டில் வௌியிடப்பட்ட உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டு பட்டியலில் (The Corruption Perception Index) 37 புள்ளிகளைப் பெற்ற இலங்கை 168 நாடுகளுக்குள் 83வது இடத்தை பெற்றுக் கொண்டது. எனினும், இம்முறை (2016 ஆண்டில்) இந்தப் பட்டியலில், 175 நாடுகளுக்குள் இலங்கை 95வது நாடாக பதிவாகியுள்ளது. மேலும் இலங்கைக்கு இம்முறை 36 புள்ளிகளே கிட்டியுள்ளன.

இதேவேளை, உலகில் ஊழல் அற்ற நாடுகள் பட்டியலில் 90 புள்ளிகளைப் பெற்றுள்ள டென்மார்க் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. மேலும் பின்லாந்து, சுவிடன் மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகள் முறையே 3ம், 4ம் மற்றும் 5ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளன.

இந்தப் பட்டியலின் படி, அண்டை நாடான இந்தியா 79வது இடத்தை பெற்றுள்ளதோடு, தெற்காசிய நாடுகளில் முன்னிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Read more

இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டும் இலங்கை: இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித்சிங் சந்து!

January 26 2017 , Written by lankatime

இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டும் இலங்கை: இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித்சிங் சந்து!

இலங்கையின் அபிவிருத்தியில் பலமானதும் காத்திரமானதும் பங்களிப்பை வழங்குவதில் இந்திய பெருமை அடைவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித்சிங் சந்து தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்தியாவின் 68 ஆவது குடியரசு தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

புதிய சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரலில் வளர்ச்சி அடைந்துவரும் இந்தியா முக்கிய பங்குவகிக்கின்றது. இந்த பின்னணியில் தமது நாட்டுடன் இணைந்து இலங்கை செயற்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

Read more

தற்போதைய அரசாங்க நிர்வாகத்தினால் விரக்தியடைந்துள்ள 12 மில்லியன் வாக்காளர்கள், கூட்டு எதிர்க்கட்சியின் நுகோகொட பேரணியில்!

January 26 2017 , Written by lankatime

தற்போதைய அரசாங்க நிர்வாகத்தினால் விரக்தியடைந்துள்ள 12 மில்லியன் வாக்காளர்கள், கூட்டு எதிர்க்கட்சியின் நுகோகொட பேரணியில்!

தற்போதைய அரசாங்க நிர்வாகத்தினால் விரக்தியடைந்துள்ள 12 மில்லியன் வாக்காளர்கள், கூட்டு எதிர்க்கட்சியின் நுகோகொட பேரணியில் கலந்துக்கொள்வார்கள் என கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த பேரணியில்,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களித்த 5.8 மில்லியன் மக்களும்,நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்த 6.2 மில்லியன் மக்களும் கலந்துக்கொள்வார்கள் என கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கிலேயே, இந்த பேரணி அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் ஏற்பாட்டால்,மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நாளைய தினம் நுகேகொடயில் பேரணி ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து அச்சுறுத்தல் : பிரியங்கார ஜயரத்ன!

January 26 2017 , Written by lankatime

நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து அச்சுறுத்தல் : பிரியங்கார ஜயரத்ன!

தனது மகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரியங்கார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடமே அவர், இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் பேரணியில் கலந்துக் கொண்டால், உங்களது மகளை கைது செய்வோம் என அரசாங்கம் அச்சுறுத்துவதாக பிரியங்கார ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான, பிரயங்கார ஜயரத்னவின் இளைய மகள் சச்சினி, புத்தளம் மாவட்டத்தில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றார்.

சச்சினியின் தந்தை சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக இருந்த போது, சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் சர்வதேச ஒருங்கிணைப்பு அதிகாரி பதவிக்கே அவரது மகள் சம்பளம் பெற்று வந்தள்ளார்

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி தவறாகப் பயன்படுத்துதல், குற்றச்சாட்டு தொடர்பில் சச்சினி ஜயரத்னவுக்கு எதிராக நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நுகேகொட பேரணியில் கலந்துக் கொள்ள வேண்டாம் என்று, பிரியங்காரவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Read more

முல்லைத்தீவிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த மைத்திரி திடீரென இடைநடுவில் கொழும்பிற்கு திரும்பிள்ளார்!

January 25 2017 , Written by lankatime

முல்லைத்தீவிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த மைத்திரி திடீரென இடைநடுவில் கொழும்பிற்கு திரும்பிள்ளார்!

முல்லைத்தீவிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென இடைநடுவில் கொழும்பிற்கு திரும்பி வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

காலநிலை மாற்றத்தின் காரணமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பயணத்தை இடைநடுவில் முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

முல்லைத்தீவு - முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இன்று இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி குறித்த பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1500 பேருக்கான காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுவதுடன், 500 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் கேப்பாபுலவில் விடுவிக்கப்படும் நிலங்களுக்கான சான்றிதழ்களும் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட இருந்தன.

Read more

ஜெயலலிதாவின், 69வது பிறந்த நாளன்று புதிய கட்சி: தீபா அணி ஆலோசனை!

January 25 2017 , Written by lankatime

ஜெயலலிதாவின், 69வது பிறந்த நாளன்று புதிய கட்சி: தீபா அணி ஆலோசனை!

தீபா ஆதரவாளர்களின் ரகசிய கூட்டம், சென்னை, அயனாவரத்தில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஜெயலலிதாவின், 69வது பிறந்த நாளன்று, தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் கட்சி துவங்குவது என, முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் அன்று, ஜெயலலிதா வின் அண்ணன் மகள் தீபா, தீவிர அரசியலில் குதிப்பதாக அறிவித்தார். தன் அரசியல் பயணம் குறித்த, அடுத்தகட்ட நடவடிக்கையை, ஜெ., வின் பிறந்த நாளான, அடுத்த மாதம், 24ல் அறிவிப்பதாகத் தெரிவித்தார். இந்நிலையில்,

தீபா ஆதரவாளர்களின் ரகசிய ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நடந்துள்ளது.

இக்கூட்டத் தில், தீபாவின் கணவர் மாதவன், முன்னாள் - எம்.எல்.ஏ.,க்கள் திருச்சி சவுந்திரராஜன், பெரம்பலுார் இளவழகன், கோவை மலரவன், பொள்ளாச்சி ரத்தினம், உடுமலை மணிவாசகம் உட்பட, ஏழு பேர் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன், முன்னாள் - எம்.பி., சேலம் அர்ஜுனன், முன்னாள் மாவட்ட செயலர்கள் காதி கிருஷ்ண சாமி, விழுப்புரம் மணிகண்டன், அன்புசெல்வன் மற்றும் ஒன்றிய செயலர்கள் உட்பட, 300 பேரும் பங்கேற்றனர்.

அவர்கள் கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஜெயலலிதா பிறந்த நாளான, பிப்., 24ல், புதிய கட்சி துவக்குவது, உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து பேசப்பட்டது. கட்சியின் தலைமை அலுவலகத்தை, சென்னை, கோயம்பேட்டில் திறக்க திட்டமிட்டு உள்ளோம்.

உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர் களை நியமிப்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

பிப்., முதல் வாரத்தில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வது என்றும், அதன்பிறகு முக்கிய முடிவுகள் எடுப்பது என்றும் தீர்மானித் துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Read more

நுகேகொடையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம்: மகிந்த ராஜபக்ஸ!

January 25 2017 , Written by lankatime

நுகேகொடையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம்: மகிந்த ராஜபக்ஸ!

நுகேகொடையில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதனை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டியிலுள்ள அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் அரசாங்கத் தரப்பிலிருந்து பங்கேற்கவுள்ளவர்களின் எண்ணிக்கை ஆச்சரியமளிக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் கூட்டம் வரலாற்று முக்கியத்துவமான ஒன்று எனவும் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தற்போது விமல் வீரவன்ச சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 03 மாதம் வரை அவருக்கு பிணை வழங்குவதில்லை என்று ஒரு அமைச்சர் கூறியிருப்பதாகவும், இதன் மூலம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது நீதிமன்றத்தாலா அல்லது அமைச்சர்களாலா என்று தெளிவாகின்றது என்றும் அவர் இதன் போது கூறியுள்ளார்.

இதேபோன்று, கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர்களின் பிள்ளைகளும் சிறை செல்ல வேண்டி ஏற்படும் என்று அமைச்சர் ஒருவர் நேற்று பகிரங்கமாக கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் கஷ்டப்படுவது பிரச்சினையில்லை என்று குறிப்பிட்ட அவர், அவர்களின் பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது என்பதால் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருந்தவர்களை பங்கேற்க வேண்டாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக அனைத்து போராட்டங்களையும் தொடர்ந்து மேற்கொள்வதாகவும் கூறியுள்ளார். எது எப்படி இருப்பினும் ஆட்சியை கைப்பற்றுவேன் என சூழுரைத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அதனை நிறைவேற்ற தனது உச்சகட்ட பலத்தை காட்டுவார் என்றும் கூறப்படுகின்றது.

Read more
<< < 1 2 3 4 5 6 7 8 9 10 > >>