கற்றான போலகல பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற முப்படை வீரர்களுக்கான நவீன வசதிகள் கொண்ட கட்டடிங்கள் திறந்துவைக்கப்பட்டது.
புதுப்பிக்கப்பட்ட பிரதான கட்டிடத்தில் விசாலமான சமையலறை, சாப்பாட்டு அறை, உடற்பயிற்சி மற்றும் மருத்துவ அறை ஆகியன உள்ளடங்கலாக புதிதாக திறந்துவைக்கப்பட்ட கட்டிடத்தில் நான்கு புதிய அறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, முப்படை வீரர்களுக்கான குறித்த வீடு நீர்கொழும்பு நகரத்திலிருந்து 12 கிலோ மீட்டருக்கு அப்பால் இரண்டு ஏக்கர் காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் 1850 ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களும் இங்குள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு வசித்துவரும் 22 முப்படை வீரர்கள் முப்படை தளபதிகள் மற்றும் நலன்விரும்பிகளின் உதவியுடன் முன்னாள் இராணுவ சங்கத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.