Overblog
Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

விமல் வீரவங்ச எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்!

January 24 2017 , Written by lankatime

விமல் வீரவங்ச எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் விமல் இந்த மாதம் 10ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆட்சி காலத்தில் அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்தற்காக வருகை தந்த நிலையில் விமல் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

டிபிபி ஒப்பந்த திட்டத்தில் இருந்து அமெரிக்கா தன்னை விலக்கி கொள்ளும்: டொனால்ட் டிரம்ப்!

January 24 2017 , Written by lankatime

டிபிபி ஒப்பந்த திட்டத்தில் இருந்து அமெரிக்கா தன்னை விலக்கி கொள்ளும்: டொனால்ட் டிரம்ப்!

பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்றழைக்கப்படும் டிபிபி ஒப்பந்த திட்டத்தில் இருந்து அமெரிக்கா தன்னை விலக்கி கொள்ளும் ஒரு நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டு, தனது தேர்தல் பிரச்சார உறுதிமொழியொன்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறைவேற்றியுள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபரான பராக் ஒபாமாவின் ஆசிய கொள்கையின் அச்சாணியாக இந்த 12 நாடுகள் வர்த்தக ஒப்பந்தம் விளங்கியது.

இந்த ஒப்பந்தத்தை ஒரு கையெழுத்தின் மூலம் முறித்துக் கொண்ட டொனால்ட் டிரம்ப், இது குறித்து கூறுகையில், ''அமெரிக்க தொழிலாளர்களுக்கு ஒரு மிகப் பெரிய நன்மையை நாங்கள் தற்போது செய்துள்ளோம்'' என்று குறிப்பிட்டார்.

பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிளவுபட்ட அமெரிக்க நாடாளுமன்றம் இதற்கான இசைவை அளிக்காததால், டிபிபி தொடர்பான நிர்வாக ஆணையில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டது ஒரு வெறும் குறியீட்டளவிலான நடவடிக்கை என்றே கருதப்படுகிறது.

Read more

கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் 10 பேர் கைது!

January 24 2017 , Written by lankatime

கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் 10 பேர் கைது!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக செயற்பாடுகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஐந்து தினங்களாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி வசதிகளை வழங்க கோரி பல்கலைக்கழகத்தினை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினர்கள் பத்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

தேசத்துரோகமான சட்டங்களை கொண்டு இந்த நாட்டை ஆட்சி செய்ய ஐக்கிய தேசியக்கட்சி நினைக்கின்றது! (Photos)

January 23 2017 , Written by lankatime

நீதிக்கு புறம்பான தேசத்துரோகமான சட்டங்களை கொண்டு இந்த நாட்டை ஆட்சி செய்ய ஐக்கிய தேசியக்கட்சி நினைக்கின்றது. நாம் இருக்கும் வரை அது ஒருபோதும் நடக்காது என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் வருடாந்த மாநாடு நேற்று கொழும்பில் சுகததாச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதை கூறியுள்ளார். தொடர்ந்து,

இந்த நாட்டை கூறு போடுவதற்கும் புதிய அரசியலமைப்பினூடாக சமஸ்டியை கொண்டுவந்து சர்வதேசத்துக்கு சார்பாக இந்த நாட்டை மாற்றியமைப்பதற்கும் கூட்டு எதிர்க்கட்சி ஒரு போதும் இடமளிக்காது எனவும் அறிவித்துள்ளார்.

நாட்டில் வேலைவாய்ப்பு தலைவிரித்தாடுகின்றது. படை வீரர்களை தண்டிக்க இந்த அரசு முனைப்பாக உள்ளது. நாட்டுக்கு சொந்தமான எல்லா வளங்களையும் தாரைவார்க்கின்றது. இதை தடுத்து நிறுத்தவும், கொடுங்கோண்மையான ரணில் ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கும் விமல் வீரவங்ச ஒருவரால் மட்டுமே முடியும்.

நாட்டின் சுயாதீனத்தையும் நீதித்துறையையும் குழிதோண்டி புதைத்துவிட்டு ரணில் விக்கிரமசிங்க வேடிக்கை காட்டுவதாகவும் இதன்போது கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்த வருட இறுதிக்குள் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்துவோம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு முன்னிலையில் தினேஸ் குணவர்தன சூளுரைத்தார்.

Read more

ரணில் தலைமையிலான தனி நபரது பலத்தினை பெற்று கொள்வதற்கு முன்னெடுப்புகள் முறியடிக்கப்படும்!

January 23 2017 , Written by lankatime

ரணில் தலைமையிலான தனி நபரது பலத்தினை பெற்று கொள்வதற்கு முன்னெடுப்புகள் முறியடிக்கப்படும்!

நாட்டில் பலம் பகிரப்படுவதை விட இதன் மூலம் ரணில் தலைமையிலான தனி நபரது பலத்தினை பெற்று கொள்வதற்கு முன்னெடுப்புகள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நானயகார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்வாரான ஒரு நிலை ஏற்படுமாயின் அதற்கு எதிராக செயற்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியை அவமதிக்கும் விடயமாகவே அதிஸ்ட இலாபசீட்டு விடயத்தில் நிதியமைச்சரின் செயற்பாட்டை கருதுவதாகவும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி அதிஸ்ட இலாபசீட்டு விலையை குறைக்க ஆலோசனை கூறும்போது நிதியமைச்சர் 30 ரூபாவில் இருந்து 20 குறைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Read more

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர மோசடி தொடர்பில் விசாரணை!

January 23 2017 , Written by lankatime

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர மோசடி தொடர்பில் விசாரணை!

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர மோசடி தொடர்பில் விசாரணை நடத்த விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிப்பதன் மூலம் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் மோசடி தொடர்பான விவாதம் வலுவற்றதாகிவிடும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

டியூ.குணசேகரவின் கோப் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைத்தது போல், ஜனாதிபதி நாளைய தினம் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ள நிலையில். விசேட ஜனாதிபதி ஆணைகுழுவை நியமித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவை நியமித்துள்ளமை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே பந்துல குணவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பில் கோப் குழு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழு அவசியமற்றது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Read more

தமிழக நிலவரம்: மத்திய உள்துறை விசாரித்தது!

January 23 2017 , Written by lankatime

தமிழக நிலவரம்: மத்திய உள்துறை விசாரித்தது!

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்கார்கள் வன்முறையில் ஈடுபட்டதால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். பல்வேறு இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் பலர் காயமுற்றுள்ளனர்.

இதற்கிடையில், மோதல் காரணமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டறிந்தது. கவர்னர் இது தொடர்பாக அறிக்கை அனுப்பி வைப்பார். தமிழகத்திற்கு துணை ராணுவம் அனுப்பி வைக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிகிறது.

Read more

புலிகளின் ஆதரவாளர்களால் சாகும் வரை உண்ணாவிரதம்!

January 23 2017 , Written by lankatime

புலிகளின் ஆதரவாளர்களால் சாகும் வரை உண்ணாவிரதம்!

இலங்கையில் புலிகளின் ஆதரவாளர்கள்  காணாமல் ஆக்கப்பட்டிருப்பது தொடர்பில் அரசாங்கம் பதிலேதும் கூறாமல் காலத்தை இழுத்தடித்துச் செல்வதைக் கண்டித்தும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், மற்றும் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து உடன் பதிலளிக்க வேண்டும் எனவும் கோரி வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை   புலிகளின் ஆதரவாளர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிக் கண்டறியும் சங்கம் இதற்கான அழைப்பை விடுத்துள்ளது.

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் வழிபாடு செய்ததன் பின்னர் ஊர்வலமாகச் சென்ற காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள் வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில் ஏ9 வீதியோரத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும்,புலிகளின் ஆதரவாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் பிரச்சினையில் ஆர்வம் கொண்டிருப்பவர்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பன்னிரண்டுபேர் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருப்பதற்குத் தீர்மானித்திருப்பதாகவும் ஏனையோர் அவர்களுக்கு ஆதரவாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்திடமிருந்து தீர்க்கமான ஒரு பதில் கிடைக்கும் வரையில் சாகும் வரையிலான இந்தப் போராட்டம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை கிடைக்காததால் நட்டம் ஏற்படவில்லை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!

January 23 2017 , Written by lankatime

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை கிடைக்காததால் நட்டம் ஏற்படவில்லை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைக்காத காரணத்தினால் நாட்டுக்கு ஐந்து சதமேனும் நட்டம் ஏற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று நடைபெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் கிடைக்கவில்லை. அவர்களின் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தால் எவ்வித பிரச்சினையும் இன்றி வரிச் சலுகைத் திட்டம் கிடைத்திருக்கும். எனினும் அன்று ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைக்காத காரணத்தினால் நாட்டுக்கு ஐந்து சதமேனும் நட்டம் ஏற்படவில்லை.

அந்த சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்ள தற்போதைய அரசாங்கம் நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் செல்கின்றது. அரசாங்கம் நாட்டின் அனைத்து சொத்துக்களையும் விற்பனை செய்து, பிரிவினைவாதத்தை போஷித்து வருகின்றது. அரசாங்கம் சமஸ்டி ஆட்சி முறையை கொண்டு வர முயற்சிக்கின்றது.

2004ம் ஆண்டில் ஜே.வி.பியுடன் அலரி மாளிகையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. பின்னர் ஜே.வி.பி, யானைக் குட்டியை செல்லம் கொஞ்ச சென்றுவிட்டது. விமல் வீரவன்ச எமது இதயத்தைப் புரிந்து கொண்டு தொடர்ச்சியாக எம்முடன் இருந்தார். வெட்கமின்றி அரசாங்கம் செய்யும் வேலைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியுள்ளது. நாட்டில் பல பிரச்சினைகள் இருந்தாலும் ஓரினச் சேர்க்கையாளர் பிரச்சினைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

Read more
<< < 1 2 3 4 5 6 7 8 9 10 > >>