Overblog
Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில், கலந்துரையாடல்!

January 23 2017 , Written by lankatime

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில், கலந்துரையாடல்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில், கலந்துரையாடல்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில், கலந்துரையாடல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஆறு மாகாணங்களின் முதலமைச்சர்களுக்கும் இடையில், நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை, எவ்விதமான இணக்கப்பாடுகளும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. முன்னாள் ஜனாதிபதியின் கொழும்பு இல்லத்திலேயே இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

வடமாகாண மற்றும் கிழக்கு மாகாணங்களில் முதலமைச்சர்கள் இருவருக்கும் இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதேவேளை, இந்த சந்திப்பில் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷால் ஜயரத்ன பங்கேற்கவில்லை.

மஹிந்த ராஜபக்ஷ தரப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, மஹிந்த யாப்பா அபேவர்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பந்துல குணவர்தன, ரோஹித அபேகுணவர்தன, காமினி லொக்குகே ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பின் போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில், கலந்துரையாடப்பட்டது. அந்தத் தேர்தலின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுமாறு, முதலமைச்சர்கள், முன்னாள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர். எனினும், மஹிந்த தரப்பு அக்கோரிக்கைக்கு இணங்கவில்லை.

இந்த சந்திப்பு தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க கருத்து தெரிவிக்கையில், “சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களில் நூற்றுக்கு 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், மஹிந்த ராஜபக்ஷவுடன் இருக்கின்றனர் என்பதை அவர்கள் (முதலமைச்சர்கள்) ஏற்றுக்கொண்டனர். ஆகையால்தான், ஒன்றிணைய வேண்டும் என்ற இடத்திலிருந்தே பேச்சை ஆரம்பித்தனர். எனினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றமையால், எங்களால் அவ்வாறு இணைந்து செயற்படமுடியாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்” என்றார்.

இந்தச் சந்திப்புக்கு பின்னர், மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “பேச்சுவாரத்தை நடத்தினோம். உண்மையில் சந்தோஷமாகத்தான் இருகிறது. வாக்குவாதங்கள் இடம்பெற்றன. இரண்டு குழுக்களிடம் சிற்சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. நாங்கள் நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்தினோம். அதற்கு நல்லதொரு பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

Read more

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 25 அமைச்சர்கள், எதிர்க்கட்சியில்!

January 22 2017 , Written by lankatime

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 25 அமைச்சர்கள்,  எதிர்க்கட்சியில்!

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 25 பேர் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான முறையில் நகர்ந்து வருவதாகவும் இவர்கள் கூடிய விரைவில் எதிர்க்கட்சியுடன் இணைய எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இணைந்து கொண்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அந்த அரசாங்கத்தில் வர்த்தகதுறை அமைச்சராக பதவி வகித்தார்.

அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் வழக்கு விசாரணைகளும் நடந்து வருகின்றன.

Read more

சுதந்திரக் கட்சியின் சட்டத்தரணிகள்,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைவு!

January 22 2017 , Written by lankatime

சுதந்திரக் கட்சியின் சட்டத்தரணிகள்,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன்  இணைவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டத்தரணிகள் சங்கமான ஸ்ரீலங்கா சட்டத்தரணிகள் சங்கம் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் முழுமையாக இணைந்து கொண்டுள்ளது.

கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சட்டத்தரணிகள் சங்கத்தை ஸ்தாபிக்கும் நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர சட்டத்தரணிகள் சங்கத்தில் அங்கம் வகித்த 600 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வின் போது புதிய சங்கத்தின் தலைவராக டப்ளியூ. தயாரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர சட்டத்தரணிகள் ஒழுங்கு செய்த கூட்டத்தில் இப்படி பெருமளவிலான சட்டத்தரணிகள் ஒருபோதும் கலந்து கொள்ளவில்லை என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

Read more

இரவில் விழுந்த குழியில் பகலில் விழ எவரும் தயாரில்லை: மகிந்த ராஜபக்ச!

January 22 2017 , Written by lankatime

இரவில் விழுந்த குழியில் பகலில் விழ எவரும் தயாரில்லை: மகிந்த ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஆட்சியில் இருக்கும் மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பு எவ்வித இணக்கப்பாடும் இன்றி முடிவடைந்துள்ளது.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் நடந்தது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எப்படி பிளவுப்படாமல் போட்டியிடுவது என்பது உட்பட சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இங்கு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி,

இரவில் விழுந்த குழியில் பகலில் விழ எவரும் தயாரில்லை எனவும் நாட்டை அழிக்கும் முடிவுகளுக்கு கையை உயர்த்தும் கட்சியை பற்றி எண்ணாது, நாட்டை பற்றி சிந்திக்குமாறு தலைவர்களிடம் கூறுங்கள் எனவும் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி இந்த கருத்துக்கு மாகாண முதலமைச்சர்கள் பதில் எதனையும் கூறவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி நடந்தும் வரை கட்சியுடன் எந்த இணக்கப்பாட்டிற்கும் வர முடியாது எனவும் மகிந்த ராஜபக்ச தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனால், எந்த இணக்கப்பாடுகளும் இன்றி பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளதுடன் மீண்டும் சந்திப்பு நடைபெறுமா என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை.

Read more

அரசியலில் இருந்து விலகவோ ஒதுங்கவோ போவதில்லை :மஹிந்த ராஜபக்ச!

January 22 2017 , Written by lankatime

அரசியலில் இருந்து விலகவோ ஒதுங்கவோ போவதில்லை :மஹிந்த ராஜபக்ச!

பலமிக்க நாடுகள் எவ்வளவு அழுத்தங்களை கொடுத்தாலும் தான் அரசியலில் இருந்து விலகவோ/ஒதுங்கவோ போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது அரசியலை நாட்டு மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியை அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறு வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எப்போதும் நாட்டு மக்களுடனேயே அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் வெளிநாடுகளின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைய தான் அரசியலில் ஈடுபடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தாலும் எந்த இலாப நோக்கமும் இன்றி தன்னுடன் இருக்கும் இலட்சக்கணக்கான மக்களின் கோரிக்கைகளை எந்த வகையிலும் புறந்தள்ள போவதில்லை எனவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Read more

பின்லேடன் தொடர்பில் மேலும் சில முக்கிய ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டது!

January 22 2017 , Written by lankatime

பின்லேடன் தொடர்பில் மேலும் சில முக்கிய ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டது!

பின்லேடனின் முக்கிய ஆவணங்களை அமெரிக்க உளவு அமைப்பு சி.ஐ.ஏ வெளியிட்டது. அதில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க இராணுவ தலைமையகம் பென்டகன், நியூயோர்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின் மீது 2001 ஆம் ஆண்டு, செப்டெம்பர் 11 ஆம் திகதி அல்கொய்தா இயக்க பயங்கரவாதிகள் விமானங்களை மோதி கொடூர தாக்குதல்கள் நடத்தினர். அவற்றில் 3000 மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல்கள் உலக நாடுகளையெல்லாம் பதற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டது இந்த தாக்குதல்களின் போது மூளையாக இருந்து செயல்பட்டவர், அந்த இயக்கத்தின் தலைவர் பின்லேடன் என அமெரிக்கா கண்டறிந்தது.

சரியாக 10 ஆண்டுகள் ஆன நிலையில், 2011 ஆம் ஆண்டு, மே மாதம் 2 ஆம் திகதி பின்லேடன், பாகிஸ்தானில் அப்போட்டாபாத் என்ற இடத்தில் பதுங்கி இருந்தபோது, அமெரிக்க இராணுவத்தின் ‘நேவி சீல்ஸ்’ படைப்பிரிவினர் அதிரடி தாக்குதல்கள் நடத்தி பின்லேடனை கொன்றனர்.

அப்போது பின்லேடன் தொடர்பான முக்கிய ஆவணங்களை அங்கிருந்து ‘நேவி சீல்ஸ்’ படைப்பிரிவினர் கைப்பற்றினர்.

அந்த ஆவணங்கள் சி.ஐ.ஏ. என்று அழைக்கப்படுகிற மத்திய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த ஆவணங்களை பரிசீலித்து அவ்வப்போது சி.ஐ.ஏ. வெளியிட்டு வருகிறது.

அந்த வரிசையில் நேற்று முன்தினமும் பின்லேடன் தொடர்பான முக்கிய ஆவணங்களை சி.ஐ.ஏ. வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த ஆவணங்களில் அவர் ஐ.எஸ். இயக்கத்தின் பொறுமை இழப்பு, வன்முறை தந்திர உத்திகள், அல்கொய்தா இயக்கம் மறைந்து வரும் நிலை ஆகியவை பற்றி, பின்லேடன் கவலைப்பட்டிருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது.

அதில் ஒரு ஆவணம், பின்லேடன் தனது மகன்களை எச்சரிப்பதாக அமைந்துள்ளது. அதில் அவர், தன் மகன்களின் உடலில் எலெக்டிரானிக் சிப் பொருத்தப்பட்டு, அவர்களின் இருப்பிடம் கண்காணிக்கப்படும் ஆபத்து உள்ளதாக சுட்டிக்காட்டுகிறது.

அரேபிய தீபகற்ப பகுதியை சேர்ந்த அல்கொய்தா இயக்கத்தின் நிறுவனர் நாசர் அல் உஹாய்ஷிக்கு பின்லேடன் எழுதிய கடிதமும் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் பின்லேடன், மத அடிப்படையிலான ஒரு இராஜ்யத்தை அமைப்பதற்கான சூழல்கள் சரிவர அமையவில்லை என்பதால் அரசாங்கத்துக்கு எதிராக மிக வேகமாக செயல்படக்கூடாது என அறிவுறுத்தி உள்ளார்.

அப்படிப்பட்ட ஒரு இராஜ்யத்தை அமைப்பதில் வெற்றி கிடைக்கும் என்பது ஆதாரபூர்வமாக காட்டப்படுகிற வரையில், ஒன்றுக்கும் பலனற்ற விதத்தில் இரத்தம் சிந்தக் கூடாது எனவும் பின்லேடன் எச்சரித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டுக்கு முன் பின்லேடன் பல தரப்பினருக்கும் எழுதிய கடிதங்களில், தனது குழுவினர் அமெரிக்காவை தொடர்ந்து எதிரியாக கருதி வர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களுக்கு பிப். 2 வரை காவல் நீட்டிப்பு!

January 20 2017 , Written by lankatime

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களுக்கு பிப். 2 வரை காவல் நீட்டிப்பு!

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 20 பேருக்கு, பிப்.,2 வரை சிறைக்காவல் நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் கடற்கரையில் இருந்து ஜன. 4, 8 ஆகிய தேதிகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 20 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளை தமிழக மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் வாய்தா நாளான நேற்று மீனவர்கள் 20 பேரும், இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

அவர்களை பிப்.,2ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி சபேசன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Read more

இலங்கையின் பிரதமராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ பதவியேற்பார்?

January 20 2017 , Written by lankatime

இலங்கையின் பிரதமராக  அமைச்சர் சஜித் பிரேமதாஸ பதவியேற்பார்?

இலங்கையின் பிரதமராக  அமைச்சர் சஜித் பிரேமதாஸ பதவியேற்பார் என ஆரூடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி சஜித் பிரேமதாஸ உரிய முறையில் இலங்கையின் பிரதமராக பதவிப் பிரமானம் செய்து கொள்வார் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முன்னாள் ஆஸ்தான சோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 26ஆம் திகதி ஏற்படும் கிரக மாற்றம், இலங்கை அரசியலை தலைகீழாக மாற்றும் அளவிற்கு காணப்படும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவருடன் நெருக்கமாக செயற்படும் அமைச்சர்கள் பலர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணசிங்க பிரேமதாஸ, ஜனாதிபதியாகிய சந்தர்ப்பத்தில் பலமாக இருந்த கிரகம் இந்த மாதம் 26ஆம் திகதியின் பின்னர் சஜித் பிரேமதாஸவின் கிரகமும் அந்த அளவிற்கு பலமடையும் என அவர் கூறியுள்ளார்.

2020ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியிலும் சஜித் பிரேதாஸ தான் போட்டியிடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆரூடம் வெளியிடுவதற்கு தான் தயாரில்லை. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் எதிர்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உரிய விழிப்புணர்வு இல்லாமையினாலே தகவல் வெளியிட முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 12 வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு சஜித் பிரேமதாஸ தலைமைத்துவம் வழங்குவதாக குறித்த சுமனதாஸ, சஜித்தின் பின்னர் சிங்கம் என பெயர் கொண்ட இளம் தலைவர் ஐக்கிய தேசிய கட்சி தலைவராகுவார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more

புலிகளின் முன்னாள் உறுப்பினரை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளது!

January 20 2017 , Written by lankatime

 புலிகளின் முன்னாள் உறுப்பினரை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளது!

புலிகள் அமைப்பின் வடக்கு கிழக்கு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்த எமில்காந்தனை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க திறைசேரியால் ராடா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் ரூபாவினை முறையற்றவிதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் 2ஆம் பிரதிவாதியான எமில்காந்தன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் திகதியிலிருந்து, 2006 ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதி வரையான காலத்தில் கிளிநொச்சி அரசுக்கு சொந்தமான 200 மில்லியன் ரூபாவினை கொழும்பில் மோசடி செய்தமை, அதற்காக உதவி செய்தல், உள்ளிட்ட 7 குற்றங்களுக்காக, பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் இவ்வழக்கு தொடரப்பட்டது.

மேலும் கடந்த வழக்கின் போது ஆஜராகாத எமில்காந்தனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும் அதனை செயற்படுத்த முடியாமல் போனதாக நேற்று மன்றில் அறிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த வழக்கானது நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் களு ஆராச்சி முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையின் போது பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நடைமுறைப்படுத்த சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறவுள்ளதாக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசன்த தெரிவித்தார்.

மேலும் 1 தொடக்கம் 6 வரையான சாட்சிகளை ஏதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதிவாதிகளான டிரான் அலஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் நீதிமன்றில் நேற்று ஆஜராகியிருந்தனர்.

ஜெயலங்க வீடமைப்பு திட்டத்தால் திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டத்தில் 800 வீடுகளை புனரமைப்பு செய்யும் நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட நிதி முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more
<< < 1 2 3 4 5 6 7 8 9 10 > >>