Overblog
Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

ஒரு நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட இருவர் இருந்தால் மோதல் உருவாகும் : முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!( photos)

February 28 2017 , Written by lankatime

ஜனாதிபதி ஒருவர் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் ஒரு நாட்டில் இருந்து இருவருமே நிறைவேற்று அதிகாரம் கொண்டவர்களாக மாறும் போது மோதலான நிலைமை உருவாகும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதனை தான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிடும் போதே மகிந்த ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஒன்றை நடத்த தற்போதைய அரசாங்கம் அச்சத்தில் உள்ளது.

எந்த முறையிலாவது தேர்தலை நடந்துங்கள் என்றே நாங்கள் கூறுகின்றோம் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, அரசாங்கமே முழுமையான பணத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

எனது பெயரை பயன்படுத்தி பணத்தை திருட்டுத்தனமாக பெற்றுக் கொண்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

இவை அனைத்து சட்டரீதியான நடவடிக்கை அல்ல என்றால் பணத்தை பெற்றுக் கொண்டவர்களுக்கு பெரிய பிரச்சினை ஏற்படும்.

இந்த பணம் சட்டரீதியான அல்ல என்பதால் அது செல்லுபடியாகாது. பாதுகாப்பில்லை.

இப்படி நடந்தால், பணத்தை வைப்புச் செய்தவர்கள் இலங்கையில் இருந்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்வார்கள் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Read more

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை : இந்திரஜித் குமாரசாமி!

February 28 2017 , Written by lankatime

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை : இந்திரஜித் குமாரசாமி!

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இன்று மாலை கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசாமியை சந்தித்து பிணைமுறி மோசடி வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் விளக்கம் கோரியுள்ளனர்.

இதன்போது அவர்களுக்குப் பதிலளித்த மத்திய வங்கி ஆளுனர் குமாரசாமி, பிணை முறி மோசடி தொடர்பான எந்தவொரு விவகாரத்திலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்புபடவோ, பொறுப்புக் கூற வேண்டிய நிலையிலோ இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன ஊடகங்களுக்கு அறியப்படுத்தியுள்ளார்.

மத்திய வங்கி ஆளுனருடனா சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்களான தினேஷ் குணவர்த்தன, டளஸ் அலஹப்பெரும, பவித்ரா வன்னியாரச்சி, ரோஹித அபேகுணவர்த்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, பந்துல குணவர்த்தன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Read more

சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச் சூடு : பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

February 27 2017 , Written by lankatime

சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச் சூடு : பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

களுத்துறையில் சிறைச்சாலைகள் பஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவரான சமயங் எனப்படும் அருண உதயஷாந்த பத்திரண உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர்

உயிரிழந்தவர்களில் சிறைச்சாலைகள் அதிகாரிகள் இருவரும் அடங்குவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

கைதிகள் சிலரை ஏற்றிக் கொண்டு களுத்துறையிலிருந்து கடுவலை நீதிமன்றத்திற்கு பயணித்துக் கொண்டிருந்த சிறைச்சாலைகள் பஸ் மீது இன்று (27) முற்பகல் இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மல்வத்தை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

களுத்துறையிலிருந்து கெப் ஒன்றில் வந்த சிலர், சிறைச்சாலைகள் பஸ்ஸை மறித்து, பஸ்ஸுக்குள் ஏறி இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த சிறைச்சாலைகள் அதிகாரிகள் 4 பேர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, களுத்துறை பிராந்திய பிரதிப் பொலிஸ் மாஅதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இரண்டு பாதாள உலகக் கோஷ்டியினருக்கு இடையில் நீண்ட நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோதலின் தொடர்ச்சியாக, இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more

2016ம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் ஜனநாயக தரப்படுத்தல் வரிசையில் இலங்கை முன்னேற்றம்!

February 27 2017 , Written by lankatime

2016ம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் ஜனநாயக தரப்படுத்தல் வரிசையில் இலங்கை முன்னேற்றம்!

2016ம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் ஜனநாயக தரப்படுத்தல் வரிசையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.

உலக புகழ்பெற்ற பிரபல 'The Economist' சர்வதேச பொருளாதார சஞ்சிகையினால் வெளியிடப்பட்ட சர்வதேச ஜனநாயக சுட்டெண்ணில் இலங்கை 66 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

2015ஆம் ஆம் ஆண்டு இந்த பட்டியலில் இலங்கைக்கு 69வது இடம் கிடைத்திருந்த நிலையில் இம்முறை மூன்று இடங்கள் முன்னேறி 66வது இடத்தை பிடித்துள்ளது.

2015ஆம் ஆண்டினுள் இலங்கைக்கு இந்த பட்டியலில் இலங்கைக்கு 6.42 என்ற முழுமையான புள்ளியே கிடைத்துள்ளது. 2016ஆம் ஆண்டு 6.48 என இந்த புள்ளி அதிகரித்துள்ளது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பார்க்கும் போது இலங்கைக்கு இந்த பட்டியலில் 12ஆம் கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தை நோர்வே பிடித்துள்ள நிலையில் நேர்வே 9.93 புள்ளிகளை பெற்றுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை ஐஸ்லாந்து மற்றும் சுவீடன் நாடுகள் பிடித்துள்ளன.

இந்த பட்டியலில் வட கொரியா 1.08 என்ற அதிக குறைந்த புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த தரப்படுத்தலுக்கமைய சீனா 136வது இடத்தை பிடித்துள்ள நிலையில் அமெரிக்க 21வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த தரப்படுத்தலை தயாரிக்கும் போது தேர்தல் செயற்பாடு, அரச பொறிமுறை, அரசியல் கலாசாரம், சிவில் சுதந்திரம் ஆகிய விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

அங்கு தேர்தல் செயற்பாட்டிற்காக இலங்கைக்கு 7வது இடம் கிடைத்துள்ள நிலையில், அரசியல் பங்களிப்பில் இலங்கைக்கு 5 புள்ளிகள் கிடைத்துள்ளன.

Read more

விமல் வீரவங்சவுக்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள சந்தர்ப்பம்!

February 27 2017 , Written by lankatime

 விமல் வீரவங்சவுக்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள சந்தர்ப்பம்!

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுவாராச்சி உத்தரவிட்டுள்ளார்.

வெலிகடை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து வீரவங்ச கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த திருத்த விண்ணப்ப மனுவை இன்று ஆராய்ந்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து வீரவங்சவின் திருத்த விண்ணப்ப மனுமீதான விசாரணைகளை எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

Read more

எதிர்பாராத வகையில் ஆட்சிமாற்றம் ஏற்படும் : கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன!

February 27 2017 , Written by lankatime

எதிர்பாராத வகையில் ஆட்சிமாற்றம் ஏற்படும் :  கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன!

எதிர்பாராத வகையில் ஆட்சிமாற்றம் ஏற்படும் என கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 'அரசாங்கத்திற்கு தெரியாமல் தானே அரசாங்கம் கவிழ்க்கப்படுகின்றது. ஆகவே நீங்கள் எண்ணுவதற்கு மாறாகவே அரசாங்கம் மாற்றமடையும். ஜனாதிபதி தேர்தல் ஒன்றின் ஊடாக பிரதமர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். முன்எப்போதும் நடைபெறாத வகையில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவுசெய்யப்பட்டார்.

ஆகவே நினைக்காத ஒன்று நடைபெறும் அதனை நாம் நடத்திக்காட்டுவோம். மஹிந்த ராஜபக்ச நாட்டைப் பொறுப்பேற்பார். வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்ப மீதமாக உள்ள ஒவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மாத்திரமே இருக்கின்றார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பெரும்பாலானவர்கள், கூட்டு எதிர்கட்சியின் பெரும்பாலானவர்கள், ஏனைய அரசியல் கட்சிகளின் பெரும்பாலானவர்கள், மஹிந்த ராஜபக்சவிற்கே ஆதரவு வழங்குகின்றனர். அதுவே யாதார்த்தம்,என்று அவர் கூறியுள்ளார்.

Read more

மத்திய வங்கி, நிதியமைச்சிற்கு எதிராக வழக்குத் தொடர்வேன் :முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

February 26 2017 , Written by lankatime

மத்திய வங்கி, நிதியமைச்சிற்கு எதிராக வழக்குத் தொடர்வேன் :முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சிற்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
வழக்கு தாக்கல் செய்வதற்கான சட்டத்தரணிகளின் ஆலோசனைகளைத் தாம் பெற்று வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிணை முறி தொடர்பான மோசடிகளின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய வங்கி பிணை முறி விநியோகத்தின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷவின் கையெழுத்து தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தாம் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என அரச திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் இதுகுறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கருத்துக்களை வெளியிட்டார்.

இதுமிகப்பெரிய மோசடியாகும். எனவே நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வது பற்றி எனது சட்டத்தரணியிடம் சட்ட ஆலோசனைப் பெற்று வருகின்றேன். ஜனவரி 8ஆம் திகதியின் பின்னர் நான் நிதியமைச்சர் அல்ல. நிதியமைச்சின் பதவியை வகித்தவர்கள் எனது பெயரைப் பயன்படுத்தி பாரிய மோசடியை செய்திருக்கின்றனர். அதற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்வதே எனது எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்தார்.

Read more

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ் முஸ்லிம் தலைவர்களைச்சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை!

February 26 2017 , Written by lankatime

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ் முஸ்லிம்  தலைவர்களைச்சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ் முஸ்லிம் சமூகங்களின் தலைவர்களைச்சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் 7ம் திகதியளவில் இடம்பெறக்கூடும் எனக்குறிப்பிடப்படுகின்றது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஆதரவைப்பெற்றுக் கொள்வதற்காகவே மஹிந்த ராஜபக்ச இந்தச் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.

Read more

சீனாவின் உயர் மட்டக் குழுவினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு! (photos)

February 24 2017 , Written by lankatime

இலங்கைக்கு விஜயம் செவய்துள்ள சீனாவின் உயர் மட்டக் குழுவினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவரான, சொங் டாவோ தலைமையிலான குழுவினர் நேற்று கொழும்பில் வைத்து மஹிந்தவை சந்தித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்த்தன, டலஸ் அழகப்பெரும, மகிந்தானந்த அழுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல, நாமல் ராஜபக்ஸ மற்றம் முன்னாள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தமது ஆட்சிக் காலத்தின்போது சீனாவுடன் மிகவும் நெருங்கிய உறவைப் பேணிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, தற்போதைய அரசாங்கம் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 வீத உரிமையை சீனாவுக்கு வழங்குவதற்கும், முதலீட்டு வலயத்தை அமைப்பதற்கு 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவுக்கு வழங்குவதற்கும் மஹிந்த ராஜபக்ஸ கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறார்.

இதேவேளை, சீன உயர்மட்ட குழுவினருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துப் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more
1 2 3 4 > >>