Overblog
Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

பிரதமர் மகிந்த பொதுமக்களுக்கு விடுத்துள்ள செய்தி!

November 10 2018 , Written by lankatime

பிரதமர் மகிந்த பொதுமக்களுக்கு விடுத்துள்ள செய்தி!

பொதுத் தேர்தல் மூலம், பொதுமக்கள் தங்களது விருப்பங்களை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

நிலையான அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்ப இதன் மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு மக்கள் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்த சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுப்பது தலைவர்களின் பொறுப்பும், கடமையுமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Read more

ஜனாதிபதி ஏன் நாடாளுமன்றை கலைத்தார் - காரணம் இதோ!

November 10 2018 , Written by lankatime

ஜனாதிபதி ஏன் நாடாளுமன்றை கலைத்தார் - காரணம் இதோ!

தற்போது நிலவும் பிரச்சினைக்குரிய நிலைமையிலிருந்து நாட்டை மீட்கும் நோக்கிலேயே ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்த பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என அமைச்சர் விமல் வீரவங்ஸ தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read more

நாமல் ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவில் இணைவதாக அறிவிப்பு!

November 10 2018 , Written by lankatime

நாமல் ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவில் இணைவதாக அறிவிப்பு!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைவதாக தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான் கூட்டணி ஒன்றை ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் வெற்றிக்காக பல கட்சிகள் இணைந்து இந்த கூட்டணி அமையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Read more

(Photos)பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த மருத்துவர்கள்!

November 10 2018 , Written by lankatime

(Photos)பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த மருத்துவர்கள்!
(Photos)பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த மருத்துவர்கள்!(Photos)பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த மருத்துவர்கள்!(Photos)பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த மருத்துவர்கள்!
(Photos)பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த மருத்துவர்கள்!(Photos)பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த மருத்துவர்கள்!(Photos)பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த மருத்துவர்கள்!
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.

பிரதமர் செயலகத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், அரச துறையில், குறிப்பாக மருத்துவத் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்த ஆராயப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியத்தை மீளப் பெற்றுக்கொடுத்தல், அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு கொள்கை ஒன்றை தயாரித்தல் மற்றும் தேசிய வேதனக் கொள்கையை பாதுகாக்கும் அடிப்படை வேதன முறைமையை ஏற்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more

புதிய அரசாங்கத்தின் ஒற்றுமையை எவராலும் பிரிக்க முடியாது: மஹிந்த ராஜபக்ஷ!

November 6 2018 , Written by lankatime

புதிய அரசாங்கத்தின் ஒற்றுமையை எவராலும் பிரிக்க முடியாது:  மஹிந்த ராஜபக்ஷ!
புதிய அரசாங்கத்தின் ஒற்றுமையை எவராலும் பிரிக்க முடியாது:  மஹிந்த ராஜபக்ஷ!புதிய அரசாங்கத்தின் ஒற்றுமையை எவராலும் பிரிக்க முடியாது:  மஹிந்த ராஜபக்ஷ!
புதிய அரசாங்கத்தின் ஒற்றுமையை எவராலும் பிரிக்க முடியாது:  மஹிந்த ராஜபக்ஷ!புதிய அரசாங்கத்தின் ஒற்றுமையை எவராலும் பிரிக்க முடியாது:  மஹிந்த ராஜபக்ஷ!புதிய அரசாங்கத்தின் ஒற்றுமையை எவராலும் பிரிக்க முடியாது:  மஹிந்த ராஜபக்ஷ!
புதிய அரசாங்கத்தின் ஒற்றுமையை எவராலும் பிரிக்க முடியாது:  மஹிந்த ராஜபக்ஷ!புதிய அரசாங்கத்தின் ஒற்றுமையை எவராலும் பிரிக்க முடியாது:  மஹிந்த ராஜபக்ஷ!புதிய அரசாங்கத்தின் ஒற்றுமையை எவராலும் பிரிக்க முடியாது:  மஹிந்த ராஜபக்ஷ!
ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்திற்கு மீண்டும் ஒருமுறை மரியாதை செலுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் விதத்தில் ´மக்கள் மகிமை´ ஆர்ப்பாட்டப் பேரணி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்ட பேரணியில் தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 3 வருடங்களும் 10 வருடங்களும் ரணில் விக்ரமசிங்கவுடன் கடமையாற்றியதன் பின்னரே ஜனாதிபதி இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடமையாற்றுவது இலகுவான ஒரு விடயம் எனவும் நாட்டின் எதிர்கால குழந்தைகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்கால நலனுக்காக கடமையாற்றப் போவதாகவும், தான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் செய்யாது தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பலரது அர்ப்பணிப்புடன் அமைக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்தை எக்காரணத்திற்காகவும் யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
Read more

அரசாங்கத்தின் ஒற்றுமையின் சக்தி நாளை: பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ!

November 4 2018 , Written by lankatime

அரசாங்கத்தின் ஒற்றுமையின் சக்தி நாளை: பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ!
அரசாங்கத்தின் ஒற்றுமையின் சக்தியை காட்டும் விதமான ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நாளை (05) கொழும்பில் இடம்பெற உள்ளது.

பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் நாளை மாலை குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கவும் மக்களின் விருப்பத்தை காண்பிப்பதற்கும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read more

තවත් අමාත්‍යවරුන් පිරිසක් දිවුරුම් දෙයි!

November 4 2018 , Written by lankatime

තවත් අමාත්‍යවරුන් පිරිසක් දිවුරුම් දෙයි!
නව කැබිනට් අමාත්‍යවරු දෙදෙනෙක්, රාජ්‍ය අමාත්‍යවරයෙක් සහ නියෝජ්‍ය අමාත්‍යවරයෙක් මීට සුළු වේලාවකට පෙර ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන ඉදිරියේ දිවුරුම් දී තිබෙනවා.

ඒ අනුව දිනේෂ් ගුණවර්ධන මහානගර හා බස්නාහිර සංවර්ධන අමාත්‍යවරයා ලෙස අද (04)  දිවුරුම් දුන් බවයි වාර්තා වන්නේ.

ජනාධිපති ලේකම් කර්යාලය පවසන්නේ ජනමාධ්‍ය හා ඩිජිටල් යටිතල පහසුකම් රාජ්‍ය අමාත්‍යවරයා ලෙස කෙහෙළිය රඹුක්වැල්ල දිවුරුම් දුන් බවයි.

වාසුදේව නානායක්කාර දිවුරුම් දී ඇත්තේ ජාතික ඒකාබද්ධතා, සංහිදියා හා රාජ්‍ය භාෂා අමාත්‍යවරයා ලෙසයි.

සංස්කෘතික අභ්‍යන්තර කටයුතු සහ වයඹ ප්‍රාදේශීය සංවර්ධන නියෝජ්‍ය අමාත්‍යවරයා ලෙස දිවුරුම් දී ඇත්තේ පුත්තලම දිස්ත්‍රික් එක්සත් ජාතික පක්ෂ, ජාතික ලැයිස්තු පාර්ලිමේන්තු මන්ත්‍රී අශෝක ප්‍රියන්තයි.

මේ අනුව නව රජයේ කැබිනට් අමාත්‍යවරුන් සංඛ්‍යාව 17 දෙනෙකු, රාජ්‍ය අමාත්‍යවරුන් 09 දෙනෙකු සහ නියෝජ්‍ය අමාත්‍යවරුන් 09 දෙනෙකු මේ වනවිට දිවුරුම් දී තිබෙනවා.

එමෙන්ම නියෝජ්‍ය අමාත්‍යවරයෙකු ලෙස අද දිවුරුම් දුන් එක්සත් ජාතික පක්ෂ පාර්ලිමේන්තු මන්ත්‍රී අශෝක ප්‍රියන්ත සහ පාර්ලිමේන්තුව තුළ ස්වාධීනව කටයුතු කරන මන්ත්‍රී පූජ්‍ය අතුරලියේ රතන හිමියන් නව රජයට සහය පළ කිරීමත් සමඟ සන්ධාන මන්ත්‍රී ආසන සංඛ්‍යාව 105 දක්වා ඉහළ යනවා.

කථානායකවරයා හැරුණු කොට එක්සත් ජාතික පක්ෂ මන්ත්‍රී ආසන සංඛ්‍යාව මේ වන විට 97 දක්වා පහළ බැස තිබෙනවා.
 
Read more

மேலும் சில அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்!

November 4 2018 , Written by lankatime

மேலும் சில அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்!
இன்றைய தினமும் புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இருவர், இராஜாங்க அமைச்சர் ஒருவர், பிரதி அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட நான்கு பேர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர்.

இதற்கமைய, பெருநகரங்கள் அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக தினேஷ் குணவர்தன, சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

வாசுதேவ நாணயக்கார, தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் விவகார அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

இதனிடையே, ஊடக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல பதவியேற்றுள்ளார்.

அத்துடன், கலாச்சார உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி பிரதி அமைச்சராக ஆர்.டி. அசோக்க பிரியந்தவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

இந்த சத்தியப்பிரமாண நிகழ்வுகள், ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Read more

மஹிந்த ராஜபக்ஷ வெள்ளவத்தை கதிரையன் ஆலயத்தில் மத விழாக்களில்

November 4 2018 , Written by lankatime

மஹிந்த ராஜபக்ஷ வெள்ளவத்தை கதிரையன் ஆலயத்தில் மத விழாக்களில்

மஹிந்த ராஜபக்ஷ வெள்ளவத்தை கதிரையன் ஆலயத்தில் மத விழாக்களில்

මහින්ද රාජපක්ෂ මැතිතුමන් වැල්ලවත්ත කදිරේෂන් කෝවිලෙහි ආගමික වතාවත් සඳහා සහභාගී වූ අවස්ථාව.
 மஹிந்த ராஜபக்ஷ வெள்ளவத்தை கதிரையன் ஆலயத்தில் மத விழாக்களில் கலந்து கொண்டார்

Read more
1 2 > >>