Overblog
Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

தென்கிழக்கு பல்கலைக்கழகம் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்!

April 30 2019 , Written by lankatime

தென்கிழக்கு பல்கலைக்கழகம் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்!

தென்கிழக்கு பல்கலைக்கழகம் சுற்றிவளைக்கப்பட்டு, இராணுவம் மற்றும் கடற்படையினரால்

தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது....கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றை அடுத்து நேற்று மாலை 3:45 மணியளவில், அம்பாறை மாவட்டம் ஒலுவில் பகுதியில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் விடுதி, அலுவலக அறைகள் உள்ளிட்ட பகுதிகள் அனைத்திலும் தேடுதலில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

நூற்றுக்கணக்கான படையினர் இத் தேடுதலில் பங்கேற்றதுடன், கனகர வாகனங்களும் பல்கலைக்கழக வளாகத்தில் குவிக்கப்பட்டடுள்ளது.இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், நாளை காலை விபரங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் எனவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.மேலும் ஒலுவிலின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாகச் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

மீண்டும் தோன்றிய IS தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபூபக்ர் அல் பக்தாதி!

April 30 2019 , Written by lankatime

மீண்டும் தோன்றிய IS தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபூபக்ர் அல் பக்தாதி!
மீண்டும் தோன்றிய IS தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபூபக்ர் அல் பக்தாதி!
மீண்டும் தோன்றிய IS தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபூபக்ர் அல் பக்தாதி!

மீண்டும் தோன்றிய “பக்தாதி”லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளின் பிரதானி என கருதப்படும் IS தீவிரவாத இயக்கத்தின் தலைவன் அபூபக்ர் அல் பக்தாதி சற்றுமுன் வீடியோவில் தோன்றிய விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது!

2014 இல் குண்டுத்தாக்குதல் ஒன்றில் “பக்தாதி” கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சுமார் 5 வருடங்களின் பின்னர் தன் முக்கிய சகாக்களுடன் நேற்று 18 நிமிட வீடியோவில் தோன்றியுள்ள காட்சிகள் வைரலாக பரவி வருகிறது!

குறித்த காணொளியில் சிரியா மற்றும் ஈராக்கில் யுத்தம் செய்வதனை வலியுறுத்திய பக்தாதி இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் குறித்து பெருமித்து பேசியதாகவும் புர்கான் மீடியா செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா சிஐஏ வால் பயிற்றுவிக்கப்பட்ட எல்லியட் சாம் என்ற அபுபக்கர் அல்பாக்தாத் இறந்துவிட்டதாக அமெரிக்கா 2வருடத்திற்கு முன் கூறிய போதும்‌ நான் உயிருடன் இருக்கிறேன் என பேட்டி தராதவர்.இலங்கை தாக்குதல் நடந்த பிறகு அமெரிக்க படைகள் இலங்கையில் தேடுதல் வேட்டையில் இறங்கிய பிறகு தான் அல்பாக்தாத் என்ற எல்லியட் சாம் ஒரு காணோலியை வெளியிடுகிறார்கள்.அதில் இலங்கை தாக்குதல் நடத்தியது பளிவாங்குவதற்கு தான் என அதில் கூறப்பட்டுள்ளது  (ஆதாரம்: Al-Jazeera 29-04,2019)

Read more

பொதுஜன முன்னணி மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் மே கூட்டம் இரத்து!

April 30 2019 , Written by lankatime

பொதுஜன முன்னணி மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினரின் மே கூட்டம் இரத்து!

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் ஒன்றிணைந்து மே தினக் கூட்டங்களை நடாத்தவிருந்த போதிலும், குறித்த மே தின கூட்டமானது இரத்து செய்யப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

Read more

யாழ் மண்கும்பான் பள்ளிவாசலில் ஆயுதப் பொருட்கள் மீட்கப்பட்டன!

April 30 2019 , Written by lankatime

யாழ் மண்கும்பான் பள்ளிவாசலில் ஆயுதப் பொருட்கள் மீட்கப்பட்டன!

யாழ்.தீவகம் – மண்கும்பான் பள்ளிவாசலில் நேற்று காலை சிறப்பு அதிரடிப்படையினா், இராணுவம் மற்றும் பொலிஸாா் இணைந்து நடாத்திய சோதனையில் இராணுவம் பயன்படுத்தும் சில பொருள்கள் மீட்கப்பட்டதாகப் பொலிஸாா் தொிவித்தனா்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்அடிப்படையில் பள்ளிவாசலுக்குள் நுழைந்த பொலிஸாா் மற்றும் விசேடஅதிரடிப்படையினா்,  அங்கு சோதனையிட்டபோது இராணுவம் பயன்படுத்தும் உடல்கவசம், கொமாண்டோ படைப்பிாிவினா் பயன்படுத்தும் நீா் பை, ரி-56துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் 2 மற்றும் பட்டாசுகள் ஆகியன மீட்கப்பட்டன.

இதனைத் தொடா்ந்து இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் அங்கு உள்ள ஒருவா் சந்தேகத்தின் அடிப்படையில் மேலதிகவிசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் பொலிஸார் கூறினர்.

Read more

பதில் பொலிஸ் மா அதிபர்; புதிய சட்ட மா அதிபர் பிரதம நீதி அரசர் போன்றோர் நியமனம்!

April 30 2019 , Written by lankatime

பதில் பொலிஸ் மா அதிபர்; புதிய சட்ட மா அதிபர் பிரதம நீதி அரசர்  போன்றோர் நியமனம்!

மதிப்பிற்குறிய மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் சட்டமா அதிபராக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ஜயனாத் ஜயசூரிய புதிய பிரதம நீதியரசராகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சொலிசிடர் ஜெனரல் தப்புல டி லிவேரா பதில் சட்டமா அதிபராகவும் மேலதிக கணக்காளர் நாயகமாக காணப்பட்ட சுலந்த விக்கிரமரத்ன புதிய கணக்காளர் நாயகமாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரான சி டீ விக்கிரமரத்தின புதிய பதில் பொலில் மா அதிபராகவும்

முன்னால் பொலிஸ் மா அதிபராக காணப்பட்ட என் கே இலங்ககோண் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகவும் நியமிக்கபட்டார். இதற்கான ஊடக அறிக்கை ஜனாதிபதி ஊடக பிரிவினால் திங்கட் கிழமை (29) வெளியிடப்பட்டுள்ளது. இப் புதிய பதவிகளுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று காலை (29) மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களால் வழங்கப்பட்டுள்ளது.   

Read more

Gen (Retd) Shantha Kottegoda Appointed New Secretary Defence

April 30 2019 , Written by lankatime

Gen (Retd) Shantha Kottegoda Appointed New Secretary Defence

General (Retd) S.H Shantha Kottegoda has been appointed as the new Secretary Defence by HE the President Maithripala Sirisena. He received his letter of appointment this afternoon (29) from the President.

General (Retd) Shantha Kottegoda of the Sri Lanka Light Infantry (SLLI) who served as the Commander of the Army during 1 July 2004 - 5 December 2005 was the 17thCommander of the Army before his retirement after a career of more than 36 years.

General (Retd) Kottegoda, during his distinguished career has held a number of prestigious and key appointments at the Army Headquarters (AHQ) and elsewhere in the organization and he was the Chief of Staff and Overall Operational Commander - East at the time he was appointed the Commander of the Army on 1 July 2004.

Reputed as a war veteran and a Military Officer par excellence, General (Retd) Kottegoda who was conferred with many laurels in recognition of his dedication and commitment to the Army, commands respect and regard because of his integrity.

Before he assumed this highest mantle of office, his illustrious military career served the office of Deputy Chief of Staff, Commandant, Sri Lanka Army Volunteer Force Headquarters, Director General, General Staff, Colonel of the Regiment Sri Lanka Light Infantry, Inspector of Infantry, Army Headquarters, Director General, Training, Director Training (AHQ), Director Military Intelligence, Commander 11 Brigade, Ratnapura, Deputy Commandant, Kotelawala Defence Academy, Deputy Director National Intelligence Bureau, Principal Staff Officer, Operational Headquarters at Ministry of Defence, Coordinating Officer for Kalutara and Mullaittivu districts, Colonel General Staff, Commanding Officer 4th Battalion Sri Lanka Light Infantry and several other junior appointments, including those of the Company Commander, Adjutant 1st Sri Lanka Light Infantry, Staff Officer 11, etc.

In the war-torn areas of the North and East, he rendered his services in the office of Commander, Security Forces - Wanni, General Officer Commanding 21 Division, Pompemadu, officiating General Officer Commanding 51 & 55 Divisions in Mirusuvil, Commander, 3rd Brigade Batticaloa, 5th Brigade in Mannar, Commander 10th Brigade Group Kayts and Pooneryn and a few other important appointments before he was recently nominated as the Overall Operational Commander in the East. As the Overall Operational Commander in the East, he took the overall command of all Armed Forces, Police and the Special Task Force after escalation of LTTE terrorist acts in the East.

Enlisted to the Army on 5 February 1970 as an Officer Cadet, he was commissioned as Second Lieutenant and posted to the 1st Battalion Sri Lanka Light Infantry. Later he became the adjutant of the First Battalion, Sri Lanka Light Infantry. During his military career, to his credit, he followed Young Officers Course in India (1973), Battalion Support Weapon Officers Course in India (1979), Junior Command Course (1980), CRW Course, India (1983), Senior Command Course, India (1990-1992), Pacific Area Special Operation Course, Hawai, USA (1997), India based National Defence College Course (2000) in addition to a few overseas visits. He was also offered a special training course by British Security Services (M15) on Intelligence and Protective Security in the UK.

He was also appointed to play a vital role as the Military Adviser to the then Government delegation during the preliminary phase of the peace negotiations.

In praise of his bravery in the battlefront and recognition of his dedication to the service, he was decorated with several Gallantry Medals, including Weera Wickrema Vibhushana (WWV) Rana Wickrema Padakkama (RWP), Rana Sura Padakkama (twice) and a few other conferment including Uttama Seva Padakkama (USP), Purna Bhumi Padakkama and the Vadamarachchi Operation Medal.

This senior Officer who has masterminded a number of welfare measures for the benefit of his men is an old pupil of St Thomas College, Mount Lavinia. He excelled in sports representing his college in cricket, athletics and cadetting. He is married to Mrs Sonia Kottegoda and has two children, daughter and son.

Read more

ரிஷாட்,ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்குமாறு கோரிக்கை

April 29 2019 , Written by lankatime

ரிஷாட்,ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்குமாறு கோரிக்கை
அமைச்சர் ரிஷாட் பதியூதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

அது குறித்த மனு ஒன்று இன்று ஜனாதிபதி செயலகத்தில், கையளித்துள்ளதாக, சிங்கள ராவய அமைப்பின் பொது செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.
Read more

50 விகாரைகளை தாக்கப் போகிறார்கள் – ஞானசார தேரர் பரபரப்புத் தகவல்!

April 29 2019 , Written by lankatime

50 விகாரைகளை தாக்கப் போகிறார்கள் – ஞானசார தேரர் பரபரப்புத் தகவல்!

பயங்கரவாதிகள் சுமார் 50 விகாரைகளை தாக்கப் போகிறார்கள் என தெரிவித்துள்ளார் சிறைவாசம் அனுபவித்து வரும் ஞானசார தேரர் .

இன்று ஹோமாகம நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட அவர் மேலும் கூறியதாவது ,

“சுமார் 50 விகாரைகளை தீவிரவாதிகள் தாக்கப் போகின்றனர்.விகாரைகளில் நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களை நடத்தாதீர்கள் .மேலதிக தகவல்கள் தேவையெனில் சிறைக்கு வாருங்கள் .சொல்கிறேன் ”

என்றார் அவர்

Read more

மத்தியகிழக்கு தீவிரவாதம் இலங்கையில் பயங்கரம்!

April 29 2019 , Written by lankatime

மத்தியகிழக்கு தீவிரவாதம் இலங்கையில் பயங்கரம்!

ஜிகாத் அமைப்பு இலங்கையில் வளர்ச்சியடைந்த விதத்தினை கடந்த 21 ஆம் திகதிதான் உலகம் அறிந்துகொண்டது. இது உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியினையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதன்மூலம் மத்திய கிழக்கின் இரத்த கரை படிந்த எல்லைகள் இந்த தீவை நோக்கி நகர்த்தமை தெரியவந்துள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் அரச திணை;கள அதிகாரிகள் ‘இலங்கையில் கடந்த 2017 ஆம் ஆண்டு எந்தவிதமான நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை’ என குறிப்பிட்டிருந்தார்கள்.
சில தசாப்;தங்களுக்கு முன்பு இந்த நாட்டில் வியாபித்த பயங்கரவாதத்திற்கு எதிரான செயல்களை அடுத்து 2018 ஆம் ஆண்டு ஒரு வித்தியாசமான வருடமாக மாறியது.

அந்த வருடம் வன்முறை தாக்குதல்களும் ஜிஹாத் அமைப்பினரின் தாக்குதல்களுட் படிப்படியாக வளர்ந்து 2019 ஆம் மிகவும் பயங்கரமாக வெடித்தது.கடந்த 30 வருடங்களாக இலங்கையில்  புலிகளின் பய்ஙகரவாத செயல்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன.புலிகள் சீருடை அணிந்தவர்களாகவும், கடற்படை மற்றும் விமானப்படை போன்ற போன்ற படைகளை அமைத்து ஒரு பயங்கரவாத இயக்கமாக இருந்த அதேநேரத்தில் அவர்கள் ஓரு அரசங்கமாகவும் மாறியிருந்தார்கள்.

கடந்த 2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர் அவருடைய சகோதரரரான கோட்டாபய ராஜபக்ஷவை செயலாளராக நியமித்ததன் பின்னர் புலிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்கும் வழக்கத்தினையும் கைவிட்டார்.அதே நேரத்தில் மகிந்த தலைமையிலான அரசாங்கம் புலிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு அவர்களை பூண்டோடு அழித்தது.இன்று அந்த பயங்கரவாத இயக்கம் மக்களின் நினைவில் நிழலாடுவதுடன் சில இணையதத்தளங்களில் மாத்திரமே எஞ்சியிருக்கின்றது.

ஆனால் இன்று இலங்கையில் தீவிரவாத பிரச்சினை தலைதூக்கியுள்ளது. இலங்iகில் இஸ்லாமியர்களுடைய அச்சுறுத்தல் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.கடந்த 2016 ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்ட காணொளியில் இலங்கை வைத்தியர்கள் ஈராக் ரக்கா, சிரியாவில் சிகிச்சையளிப்பதை எடுத்துணர்த்தியது.கடந்த 2016 ஆம் ஆண்டு நீதியமைச்சராக கடமையாற்றிய நாடாளுமன்றத்தில் குறிப்பிடும் போது ‘ இலங்கையில் நன்றாக கல்வி கற்ற 32 முஜ்லிம்கள் ஐ.எஸ.ஐஎஸ் அமைப்புடன் இணைந்து சிரியாவில் இணைந்து போராடுவதாக குறிப்பிட்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஐ.எஸ.ஐஎஸ் பயங்கரவாத கூடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பயங்கரவாத கூடம் அநுராதபுரத்திலுள்ள பௌத்த விகாரைகளை குண்டு வைத்து தாக்க திட்டமிட்டமை கண்டறியப்பட்டது.இன்று இலங்கையிலுள்ள ஜிஹாத் அமைப்பினர் கிறிஸ்த்தவ மதங்கள் மற்றும் உல்லாச பயணிகள் தொடர்பிலும் கவனம் செலுத்த முன்வந்துள்ளது.

கடந்த 21 ஆம் திகதி வன்முறைகளை நடத்தியதும் இந்த அமைப்பாகும்.30 நிமிட இடைவெளிக்குள் 8 தற்கொலை குண்டுதக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தாக்குதல்களில் 280 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.கிறிஸ்த்தவ தேவாலயங்கள் மற்றம் நட்சத்திர விடுதிகள் என்பன தாக்கியளிக்கப்பட்டன.இவ்வளவு தீவிரமான ஒரு திட்டத்தை தேசிய ரீதியில் நடத்தியமைக்கு தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பு உரிமை கோரியதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

மேலும் ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகையில், ஒரு சர்வதேச வலைபின்னல் இல்லாமல் இத்தகைய தாக்குதலை நடத்த முடியாது.

அதேநேரம், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினரும் இந்த தாக்குதலை கொண்டாடியும் உரிமைகோரியும் இருந்தனர் என்பதோடு, இலங்கையில் தாக்குதல் மேற்கொண்டவர்களை ஸ்ரீ லங்கா ஜிஹாடி எ பெயரிட்டிருந்தனர்.இந்த தீவிரவாத அமைப்பு மத்திய கிழக்கில் தாக்கப்பட்டபொழுது சிரியாவிலிருந்த ஸ்ரீ லங்கா ஜிஹாடி அமைப்பினர் நாடு திரும்பினர்.அது மாத்திரமன்று, சர்வதேச ரீதியில் இடம்பெற்ற போதை பொருள் வர்த்தகம் இலங்கையில் தீவிரவாதம் வளர்வதற்க காரணமாக அமைந்தன.

கொழும்பின் தெற்கே இஸ்லாமியர்கள் வாழும் பிரதேசமாகும். அந்த பிரதேசத்தின் ஒரு பாரிய போதை பொருள் விநியோகஸ்த்தரான தாவுத் இப்ராஹிம் கஸ்கர் போதை பொருள் விநியோகத்திற்கான ஒரு அமைப்பினை உருவாக்கினர்.அவர் பாரிய அளவிலான போதை பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வந்தார். கடந்த 2003 ஆம் ஆண்டு அமெரிக்காவின் திரைசேரி திணைக்களம் இப்ராஹிம் தாவுத்தை பயங்கரவாதிகளின் ஆதரவாளர் என்று பிரகடனபடுத்தியது.

கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கை பொலிசாரின் வாக்குமூலத்திற்கு அமைய தாவுத்திற்கு சொந்தமானது என கருதப்படும் 736 கிலோ கிராம் போதை பொருளை கைப்பபற்றினர்.இந்த தாவுத் என்பவர் ஆரம்பத்தில் அப்கானிஸ்தானில் தலிபான்களின் உதவியோட அபின் வியாபாரத்தில் ஈடுபட்டார். அந்த தருணத்தில் ஐ.எஸ அமைப்பினர் பாகிஸ்தான் உளவு துறை ஊடாக அபினை நாடு கடத்த முயற்சித்தனர்.அத்துடன் பாகிஸ்தர்ன கராச்சியிலுள்ள தாவுத்தின் வீட்டினை பாகிஸ்தான் உளவு பிரிவின் பாதுகாத்து வருகின்றனர்.இந்த போதை பொருள் விநியோகம், இந்தேநேசியா சிங்கப்பூர், தாய்லாந்து வியட்நாம், பங்களாதேஷ், இந்தியா, மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.

 

இவ்வாறு நடைபெறும் போதை பொருள் விநியோகத்தின் கிடைக்கப்பெறும் இலாபத்தினை அல்கய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ், லக்சரி டீ தொயிபா, ஜமாத் ஆகிய தீவிரவாத அமைப்புக்களுக்கு பிரித்து வழங்கக்படப்டன.சட்டவிரோதமான அமைப்பு, போதை பொருள் மற்றும் ஆயுதங்கள் ஆகியனவற்றினால் இலங்கையில் வன்செயல்கள் இடம்பெறலாம் என்று கருதப்படுகின்றது.

 

இந்த 3 விடயங்களை தடுத்தாலன்றி வேறொன்றும் செய்யமுடியாது. பயங்கரவாத விடுதலை புலிகளை முறியத்த பின்னர் புதிதாக முளைத்துள்ள மத்திய கிழக்கு நாட்டிலுள்ள இஸ்லாமிய பயங்கரவாதம் தiதூக்க தொடங்கியுள்ளது.இந்த பயங்கரவாத்தினை முறியடிக்க வே;ணடும் என சர்வதேசத்தினர் அரசாங்கத்தினை எச்சரிக்கின்றனர்.இது முஸ்லிம்களுக்கு எதிரான விளைவுகளை உருவாக்கும் என்பதோடு இதனை தடை செய்வது கடினமான விடயமாகும்.

Read more
<< < 1 2 3 4 5 6 7 8 9 10 > >>