Overblog
Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகில் உள்ள குப்பைகள் போடும் இடமொன்றில் ரவைகள் மீட்பு!

April 29 2019 , Written by lankatime

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகில் உள்ள குப்பைகள் போடும் இடமொன்றில் ரவைகள் மீட்பு!

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகில் உள்ள குப்பைகள் போடும் இடமொன்றில் இருந்து ஒருதொகை ரவைகள் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளன.

மக்கள் வழங்கிய தகவல் ஒன்றையடுத்து இடத்திற்கு விரைந்த இராணுவம் அதனை மீட்டுள்ளது

Read more

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான,சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய நண்பரான ஆசிரியர் ஒருவர் கைது

April 29 2019 , Written by lankatime

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான,சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய நண்பரான ஆசிரியர் ஒருவர் கைது

தாக்குதல் சம்பவத்தில்  உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படும் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான,  சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய நண்பரான ஆசிரியர் ஒருவர் ஹொரவப்பொத்தான- முக்கருவெவ பிரதேசத்தில் வைத்து கைது​செய்யப்பட்டுள்ளாரென ஹொரவப்பொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரவப்பொத்தான பொலிஸ் புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகி இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலின் பின்னர் வரகாபொல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருடனும் குறித்த ஆசிரியர் 2004ஆம் ஆண்டு தொடக்கம் நெருக்கமான உறவைப் பேணி வருபவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் தீவிரவாத அமைப்பு ஊடாக பணத்தைப் பெற்று வறிய குடும்பங்களுக்கு உதவும் நடவடிக்கையை குறித்த ஆசிரியர் முன்னெடுத்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை இன்றைய தினம் கெப்பிட்டி​கொல்லாவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more

பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன நியமனம்

April 29 2019 , Written by lankatime

பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன நியமனம்
Read more

எதிர்கட்சித் தலைவருக்கும், பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திபப்பு!

April 29 2019 , Written by lankatime

எதிர்கட்சித் தலைவருக்கும், பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திபப்பு!
எதிர்கட்சித் தலைவருக்கும், பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திபப்பு!
எதிர்கட்சித் தலைவருக்கும், பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திபப்பு!
எதிர்கட்சித் தலைவருக்கும், பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திபப்பு!
அடிப்படை வாதத்தை ஒழிப்பதற்கு, இரண்டு நாட்களுக்குள் அறிக்கை ஒன்றை தயாரித்து தன்னிடம் ஒப்படைக்குமாறு, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவருக்கும், பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.

நேற்று பிற்பகல் விஜேராமையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொட உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

இதன்போது, தமது கடந்த கால அனுபவங்களை பயன்படுத்தி, அடிப்படை வாதத்தை ஒழிப்பதற்கு அறிக்கை தயாரிக்குமாறு எதிர்கட்சித் தலைவர், பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பிரதானிகளிடம் கோரியுள்ளார்.
Read more

கிளிநொச்சியில் அதிகாலை சுற்றிவளைப்பு!கையடக்க தொலைபேசிகள், கமரா, ரவைகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீட்பு!

April 29 2019 , Written by lankatime

கிளிநொச்சியில் அதிகாலை சுற்றிவளைப்பு!கையடக்க தொலைபேசிகள், கமரா, ரவைகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீட்பு!
கிளிநொச்சியில் அதிகாலை சுற்றிவளைப்பு!கையடக்க தொலைபேசிகள், கமரா, ரவைகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீட்பு!
கிளிநொச்சி, கனகாம்பிகை குளம் பகுதியில் இன்று  அதிகாலை சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4 மணியளவில் கனகாம்பிகைக்குளம் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியை சுற்றி இச்சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

கிளிநாச்சி பொலிஸாரும், படையினரும் இணைந்து இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, பயன்பாட்டில் இல்லாத வீடு ஒன்றிலிருந்து சில சந்தேகத்திற்கிடமாக பொருட்கள் சோதனையின் போது மீட்கப்பட்டது, கையடக்க தொலைபேசிகள், கமரா, ரவைகள் உள்ளிட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டன.

எனினும் குறித்த வீட்டில் தங்கியிருப்பவர் இரும்பு வியாபாரி என அப்பகுதி மக்கள் அடையாளம் காட்டினர்.

இதேவேளை கமரா, தொலைபேசி ஆகியன அவர் பயன்படுத்தியது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வருகின்றது. எனினும் சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
Read more

இலங்கையில் பாதுகாப்பை மேம்படுத்த அமெரிக்காவின் ஒத்துழைப்பு

April 29 2019 , Written by lankatime

இலங்கையில் பாதுகாப்பை மேம்படுத்த அமெரிக்காவின் ஒத்துழைப்பு
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற கொடூரமான தாக்குதல்களை அடுத்து அமெரிக்க அரசாங்கம் இலங்கை அதிகாரிகளுக்கு தொடர்ந்தும் உதவி வருகிறது.

அண்மைய தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட குறுகிய கால, குறிப்பான நோக்கங்களை பூர்த்தி செய்தல் பற்றியும் குற்றவாளிகளை நீதிக்கு முன்பாக கொண்டு வருவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் அமெரிக்க நிபுணர்கள் ஏற்கனவே இலங்கை அதிகாரிகளுடன் பணியாற்றி வருகின்றனர். இந்த ஒத்துழைப்பானது இலங்கையில் அமெரிக்க பாதுகாப்பு அணிகளின் பெரியளவிலானதும் நீண்ட கால அடிப்படையிலானதுமான பிரசன்னத்தை சுட்டிக்காட்டவில்லை.

எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய அட்டூழியங்களை தடுப்பதற்கு பாதுகாப்பு மற்றும் தொடர்பாடல் நடைமுறைகளில் மாற்றங்களை அமுல்படுத்தவும் எதிர்காலமொன்றையும் இலங்கை எதிர்பார்க்கும் நிலையில், எமது சொந்த கடந்த கால பெருந்துயரங்களில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டும் உள்நாட்டு அதிகாரிகளுடனான எமது தற்போதைய ஒத்துழைப்பின் ஊடகவும் அதற்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது.

புதிய அச்சுறுத்தல்களில் இருந்து இலங்கை பிரஜைகளை பாதுகாப்பதற்கு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு பொறிமுறைகளை புரிந்துகொள்வதிலும் அதை பிரயோகிப்பதிலும் இலங்கை அரசாங்கமானது அது பற்றிய முன்னெடுப்புகளை சட்ட ஆட்சியை பாதுகாப்பதாகவும் தனிநபர்கள் அல்லது குழுக்களின் மனித உரிமைகளை மீறாததாகவும் வழிபடுதல், தொடர்பாடுதல் மற்றும் அமைதியாக ஒன்றுபட்டு வாழ்வதற்கான அவர்களது இயலுமையை கட்டுப்படுத்தாதகவும் இருக்கும் வழிகளில் மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

´இந்த பயங்கரமான தாக்குதல்களானது ஒரு சில தனிநபர்களின் செயலே தவிர ஒட்டுமொத்த சமூகமொன்றினால் மேற்கொள்ளப்பட்டதொன்றல்ல. இந்த அட்டூழியங்களை கண்டிப்பதில் அனைத்து பின்னணிகளையும் மத நம்பிக்கைகளையும் கொண்ட இலங்கையர்கள் ஒன்றுபட்டிருந்தனர். ஒற்றுமையே பயங்கரவாதத்திற்கு மிகவும் சக்திவாய்ந்த பதிலாகும்,´ என்று ஏப்ரல் 25 ஆம் திகதி ஒற்றுமையை வலியுறுத்தி விடுத்த அழைப்பில் அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்திருந்தார்.

´மிகவும் வெறுக்கத்தக்க இந்த குற்றச்செயல்களை புரிந்தவர்களை நீதிக்கு முன்பாக கொண்டு வருவதற்கு நாம் ஒன்றிணைந்த பணியாற்றி வரும் அதேநேரம், வலிமையான சமூகமொன்றின் ஆதார தூண்களை உருவாக்கும் ஜனநாயக கோட்பாடுகளை பாதுகாப்பதிலும் நாம் தொடர்ந்தும் விழிப்பாக இருக்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்களின் மத நம்பிக்கைகளை அன்றி அவர்களது திரிபுப்படுத்தப்பட்ட சித்தாந்தங்களை பகிராத அப்பாவி மக்கள் மற்றும் அமைதியான சமூகங்களை சிதைத்து விடாமல் நாம் அதை செய்ய வேண்டும். இலங்கையின் அற்புதமான பன்முகத்தன்மையை நாம் எப்போதும் மதிக்க வேண்டும் என்பதுடன், இந்த நாடு செழிப்படைய தேவைப்படும் ஒற்றுமை கலாசாரத்தை பலப்படுத்தவும் வேண்டும்,´ என்றும் தூதுவர் டெப்லிட்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Read more

நிட்டம்புவ காட்டுபகுதியில் அமைந்திருந்த முஸ்லிம் தீவிரவாதிகளின் மூகாம் விசேட அதிரடிப்படயினரால் முற்றுகை!

April 29 2019 , Written by lankatime

நிட்டம்புவ காட்டுபகுதியில் அமைந்திருந்த முஸ்லிம் தீவிரவாதிகளின் மூகாம் விசேட அதிரடிப்படயினரால் முற்றுகை!
நிட்டம்புவ காட்டுபகுதியில் அமைந்திருந்த முஸ்லிம் தீவிரவாதிகளின் மூகாம் விசேட அதிரடிப்படயினரால் முற்றுகை! நிட்டம்புவ காட்டுபகுதியில் அமைந்திருந்த முஸ்லிம் தீவிரவாதிகளின் மூகாம் விசேட அதிரடிப்படயினரால் முற்றுகை!

நிட்டம்புவ காட்டுபகுதியில் அமைந்திருந்த முஸ்லிம் தீவிரவாதிகளின் மூகாம் விசேட அதிரடிப்படயினரால்முற்றுகயிடப்பட்டது தமதுமுகாம் முற்றுகயிடும் தகவலை முன்கூட்டியே ஊகித்த இஸ்லாமியதீவிரவாதிகள் வேறு இடத்துக்கு நகர்ந்துள்ளனர் அவர்கள் அம்பாறை பகுதிக்கு வந்திருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கபடுகிறது அம்பாறை மட்டகளப்பு பபகுதி மக்களே

பரீட்சயமில்லாத யாரயும் உங்கள்ஊர்களுக்குள் அணுமதிக்கவேண்டாம் தயவு செய்து அனைவரும் சற்று விழிப்புடன்இருங்கள் சந்தேகத்திற்கிடமான பொருளயோ அல்லது நபரயோ ஏது சம்பவங்களயோ அவதானிக்க நேர்ந்தால் உடன்அவசர பொலிஸ்பிரிவுக்கு தகவல் சொல்வதோடு அருகில் உள்ள காவல் நிலயத்தை அணுமாறு கேட்கொள்கிறோம்.

Read more

தீவிரவாதிகளின் அபாயகர திட்டம் - பெரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டது!

April 29 2019 , Written by lankatime

தீவிரவாதிகளின் அபாயகர திட்டம் - பெரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டது!

தீவிரவாதிகளின் அபாயகர திட்டம் - பெரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டது, கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சிகரமானவை

சம்மாந்துறை வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து தீவிர விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் இரசாயனத் தாக்குதல்களை நடத்த தற்கொலைதாரிகள் திட்டமிட்டிருந்தனரா என்பது பற்றி விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

குடிநீரில் இவற்றை கலப்பது அல்லது வேறு பவுசர் ஒன்றில் இரசாயனக் கலவைகளை கொண்டுசென்று மோதி தாக்குதலை ஏற்படுத்துவது உட்பட்ட திட்டங்கள் இருந்தனவா என்பது பற்றி விசாரணைகள் நடக்கின்றன....

அதேசமயம் பத்து தலைக்கவசங்கள் பத்து ஆடைகள் உட்பட்ட தலா பத்து செட் உபகரணங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டமை விசாரணையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதுபற்றி கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் விசாரித்த போது பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி முக்கியமான கேந்திர நிலையமொன்றை முற்றுகையிட்டு அங்குள்ளோரை பணயக்கைதிகளாக வைத்து தாக்குதல்களை நடத்தும் திட்டமொன்று இருந்ததாக தெரியவந்துள்ளது.

விமான நிலையம் அல்லது கொழும்பின் பிரதான ஹோட்டலொன்று இவர்களின் இலக்காக இருந்ததாக சொல்லும் பாதுகாப்புத் தரப்பு ,அவற்றை மேற்கொள்ள முன்னர் பாதுகாப்பு தரப்பு முந்திக்கொண்டதால் பெரிய அனர்த்தமொன்று தவிர்க்கப்பட்டதாக கூறுகிறது.விசாரணையின்போது கிடைக்கும் தகவல்கள் மிகவும் அதிர்ச்சிகரமானவையாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

Read more

வெலிகம பகுதி முஸ்லிம் நபரொருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி 56 லட்சம் ரூபா மீட்பு!

April 29 2019 , Written by lankatime

வெலிகம பகுதி முஸ்லிம் நபரொருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி 56 லட்சம் ரூபா மீட்பு!

வெலிகம பகுதி முஸ்லிம் நபரொருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி 56 லட்சம் ரூபா பணம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது!

இவ்வளவு தொகைப்பணம் எங்கிருந்து வந்தது எனும் கேள்விக்கு உரிய விடை கிடைக்காததால் அங்கிருந்த ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், தான் ஒரு பட்டதாரி என்றும் சவூதியில் கணனி நிறுவனமொன்றில் தொழில்புரிந்து விட்டு கடந்த டிசம்பர் மாதம் தன் மனைவியுடன் இலங்கை வந்ததாகவும் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் நாளை மாத்தறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வீடுகளில் அதிக எண்ணிக்கையில் சிம் கார்ட், மொபைல் போன்ஸ்,போன்ஸ் பெற்றரி, பணம், கத்தி, வாள்,ட்ரொன் கமெரா என்பவற்றை வைத்திருந்த பலர் கடந்த சில நாட்களாக கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது!

Read more
<< < 1 2 3 4 5 6 7 8 9 10 > >>