Overblog
Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

මහින්ද රාජපක්ෂ මැතිතුමන් හිටපු ආරක්ෂක ප්‍රධානීන් කැඳවයි...

April 29 2019 , Written by lankatime

මහින්ද රාජපක්ෂ මැතිතුමන් හිටපු ආරක්ෂක ප්‍රධානීන් කැඳවයි...

මහින්ද රාජපක්ෂ මැතිතුමන් හිටපු ආරක්ෂක ප්‍රධානීන් කැඳවයි... ඊළාම් යුධ සමයේදී ත්‍රිවිධ හමුදාවට නායකත්වය ලබාදුන් ප්‍රධාන පෙළේ ආරක්ෂක අංශ නිලධාරීන් එකොළොස් දෙනෙකු ඊයේ (28) විපක්ෂ නායක මහින්ද රාජපක්ෂ මහතාගේ විජේරාම නිල නිවසේදී ඒ මහතා හමුවුණා.

හිටපු නාවික හමුදාපති වසන්ත කරන්නාගොඩ, හිටපු ගුවන් හමුදාපති රොෂාන් ගුණතිලක, හිටපු යුධ හමුදාපති දයා රත්නායක, වයිස් අද්මිරාල් මොහාන් විජයවික්‍රම, හිටපු ආරක්ෂක මාණ්ඩලික ප්‍රධානී ජගත් ජයසූරිය සහ හිටපු පොලිස්පති මහින්ද බාලසූරිය ඇතුළු පිරිසක් මෙම හමුවට එක්වුණා.

මේ අවස්ථාවේ රටට එල්ල වී තිබෙන IS ත්‍රස්තවාදී තර්ජනය සම්බන්ධයෙන් කඩිනමින් ගතයුතු ක්‍රියාමාර්ග පිළිබඳ මෙහිදී සාකච්ඡා විය. එම යෝජනා ඇතුළත් කරමින් ඉදිරි දින කිහිපය තුළ දී ජනාධිපතිවරයාට සහ රටේ පොදු මහජනතාව වෙත විශේෂ සංදේශයක් ලබාදීමට ආරක්ෂක ප්‍රධානීන් සහ මහින්ද රාජපක්ෂ මැතිතුමන් අතර එකඟතාවයක් ඇති විය.

මෙම හමුව සදහා ආරක්ෂක අමාත්‍යංශයේ හිටපු ලේකම් ගෝඨාභය රාජපක්ෂ, හිටපු ආර්ථික සංවර්ධන අමාත්‍ය බැසිල් රාජපක්ෂ යන මහත්වරුන් ද සහභාගී විය.

 
Image may contain: 8 people, people sitting and indoor
Image may contain: 2 people, people sitting and indoor
 
 
 
Read more

குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எட்டாவது நாள் நினைவு தினம்! Photos

April 29 2019 , Written by lankatime

குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எட்டாவது நாள் நினைவு தினம்! Photos

மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட கொழும்பு,நீர்கொழும்பு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எட்டாவது நாள்.

இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு இடங்களிலும் பல்வேறு நிகழ்வுகள்  நேற்று நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு கோட்டைமுனை மகா மாரியம்மன் ஆலயத்தின் விசேட ஆத்மசாந்தி பூஜைகள் நேற்று காலை நடைபெற்றன.

ஆலய பரிபாலனசபை தலைவர் ஈஸ்வரராஜா தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி உட்பட பெருமளவான பொதுமக்கள்,ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது தீபங்கள் ஏற்றப்பட்டு விசேட பிரார்த்தனைகள் செய்யப்பட்டதுடன் ஆத்மசாந்தி அர்ச்சனைகளும் செய்யப்பட்டன.

இந்த வழிபாடுகளின்போது நாட்டில் மீண்டும் அமைதி திரும்பி நீடித்த சாந்தியும் சமாதானமும் ஏற்படவேண்டும் எனவும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Read more

மட்டக்களப்பு சீயோன் தேவாலய தாக்குதலில் படுகாயமடைந்தவர் மரணம்!

April 29 2019 , Written by lankatime

மட்டக்களப்பு சீயோன் தேவாலய தாக்குதலில் படுகாயமடைந்தவர் மரணம்!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த மற்றுமொருவர் நேற்று  மாலை உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தாக்குதலில் உயிரிழந்தோர் தொகை 27ஆக உயர்ந்துள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்றுவந்த நாவற்குடாவினை சேர்ந்த சுரங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more

படத்தில் உள்ளவர்களைப் பற்றிய விபரங்கள் தெரிந்தால் போலீஸாருக்கு முன் கூட்டியே அறிவியுங்கள்!

April 28 2019 , Written by lankatime

படத்தில் உள்ளவர்களைப் பற்றிய விபரங்கள் தெரிந்தால் போலீஸாருக்கு முன் கூட்டியே அறிவியுங்கள்!
படத்தில்(ஐஸ் தீவிரவாத சந்தேக நபர்கள்) உள்ளவர்களைப் பற்றிய விபரங்கள் தெரிந்தால் நாட்டின் நன்மை கருதி போலீஸாருக்கு முன் கூட்டியே அறிவியுங்கள்.
 
பிரச்சினைகளை எதிர் நோக்குவதற்கு முதல் பொலிஸிடம் தங்களை உறுதிப்படுத்த ஏதுவாக இருக்கும்.நெஞ்சில் ஈரமில்லாத இந்த காட்டுமிராண்டிகளை கண்டு பிடிப்பதற்காக
 
குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின், கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறு வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.
 
071 8591771
011 2422176
011 2395605
Read more

கம்பளை கடைக்குள் ஒளிந்திருந்த சந்தேக நபர்கள்!

April 28 2019 , Written by lankatime

கம்பளை கடைக்குள் ஒளிந்திருந்த சந்தேக நபர்கள்!

தற்கொலை தாக்குதல் சந்தேகநபர்களான சாதிக் அப்துல் ஹக்,ஷாஹித் அப்துல் ஹக் ஆகியோர் உட்பட சந்தேக நபர்கள் சென்ற வேனின் சாரதியும் நாவலப்பிட்டி பொலிஸாரினால் இன்று அதிகாலை கம்பளையில் கைதுசெய்யப்பட்டனர்

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் நாவலப்பிட்டி நகரில் உள்ள பள்ளிவாசல் ,அரபு முஸ்லிம் பாடசாலை போன்ற இடங்களை சனிக்கிழமை இரவு நாவலப்பிட்டி பொலிஸார் இரானுவத்தினர் விஷேடஅதிரடி படையினர் ஆகியோர் சோதனையிட்டனர்.அப்போது சந்தேகமான முறையில் இருந்த வேன் ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு அதன் சாரதியை பொலிஸார் கைதுசெய்தனர்,

கைது செய்யபட்ட சாரதியிடம் விசாரனைகளை ஆரம்பித்த பொலிஸார் குறித்தஅது யாருடையது இதில் பயணித்தவர்கள் யார் என விசாரணைகளை மேற்கொண்டபோதே- கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தின் தொடர்புடைய இருவர் கம்பளைபகுதியில் உள்ள பாதணி விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் தலைமறைவாகிள்ளதாகவும் குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் தான் குறித்த வாகனத்தில் ஏற்றிவந்ததாகவும் இவர்கள் இரண்டு பேரும்சகோதரர்கள் எனவும் பொலிஸாருக்கு குறித்த சாரதி வாக்குமுலம் வழங்கினார்.

சாரதியினால் வழங்கபட்ட வாக்குமுலத்தின்படி கம்பளை பகுதியில் உள்ள
பாதணி விற்பனை நிலையத்தினை நாவலப்பிட்டி பொலிஸார்
சுற்றிவளைத்த போதும் குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டு இருந்தது. இதன்
போது குறித்த வர்த்தக நிலையத்தின் கதவை உடைத்து பாதணி
விற்பனை நிலையத்திற்குள் புகுந்த பொலிஸார் இரண்டு பிரதான சந்தேக
நபர்களையும் கைது செய்தனர்.

இவர்கள் சி ஐ டி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் .

Read more

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பந்தமாக கேரளாவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரனை!

April 28 2019 , Written by lankatime

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பந்தமாக கேரளாவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரனை!

இலங்கை தலைநகர் கொழும்புவில், கடந்த வாரம் ஈஸ்டர் திருநாள் அன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என்று மொத்தம் 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த கொடூர சம்பவத்தில் 253 பேர் கொல்லப்பட்டனர். 400 க்கும் அதிகமானோர் படுகாயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் செயல்படும் நேஷனல் தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு (என்.டி.ஜே.,) க்கும் தொடர்பு இருப்பதாக அந்நாட்டு விசாரணை அமைப்புகள் கண்டறிந்துள்ளன.
 
இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து இந்திய உளவுத்துறை முன்னரே இலங்கைக்கு தகவல் அளித்துள்ளன. இந்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்தும் இலங்கை அதிகாரிகள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் இந்தியா சார்பில், அமெரிக்கா உள்ளிட்ட இதர நாடுகளும் இலங்கை குண்டுவெடிப்பு விசாரணையில் அந்நாட்டுக்கு உதவி வருகின்றன. அதன் ஒருபகுதியாக இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், கேரளாவில் 2 இடங்களில் முக்கிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 காசர்கோடு நகரைச் சேர்ந்த 2 பேரிடமும், பாலக்காட்டை சேர்ந்த ஒருவரிடமும் அவர்கள் தங்கி இருந்த வீடுகளிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இங்கு கைப்பற்றப்பட்ட சிம்கார்டு, லேப்டாப் , மற்றும் டிவிடிக்கள் ஆகியவற்றில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை குண்டுவெடிப்பில் அவர்களுக்கு சம்பந்தம் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர்.

இந்த சந்தேகம் உறுதியாகும் பட்சத்தில், விசாரணைக்கு பின்னர் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்படுவர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Read more

யாழ்ப்பாணத்தில் சுற்றிவளைப்புத் தேடுதல்-நால்வர் கைது

April 28 2019 , Written by lankatime

யாழ்ப்பாணத்தில் சுற்றிவளைப்புத் தேடுதல்-நால்வர் கைது

யாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகள், சுற்றிவளைப்புகள் நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று அதிகாலை 4.30 மணியளவில் நாவாந்துறை, ஐந்து சந்தி பகுதிகளில் இராணுவம், மற்றும் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் இணைந்து அந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதுடன்.இதில் நால்வர் கைது

இந்த பகுதக்குள் செல்வதும், அங்கிருந்து வெளியே செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் சல்லடைபோட்டு தேடப்படுவதாக எமது செய்தியாளர் மேலும் கூறினார்.

Read more

கல்முனை தாக்குதலில் காயமடைந்தவர்கள் சஹரானின் மனைவி மற்றும் குழந்தை என உறுதி!

April 28 2019 , Written by lankatime

கல்முனை தாக்குதலில் காயமடைந்தவர்கள் சஹரானின் மனைவி மற்றும் குழந்தை என உறுதி!
சாய்ந்தமருது தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் 4 வயது குழந்தை  மொஹமட் சஹரானின் மனைவி மற்றும் குழந்தை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

அப்துல் காதர் பாதிமா சாதியா , சஹரான் ஹஷீமின் மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , 4 வயதுடைய மொஹமட் சஹரான் ருசெயினா என்ற அவரது மகள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த வௌ்ளிக்கிழமை கல்முனை - சாய்ந்த மருது பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் 6 சிறார்கள் உட்பட 15 பேர் பலியாகியிருந்தனர்.

இதன்போது , காயமடைந்த குறித்த இருவரும் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு அம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Read more

தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய சகலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

April 28 2019 , Written by lankatime

தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய சகலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
தற்கொலைதாக்குதலுடன் தொடர்புடைய சகலரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் இடமொன்றில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே சாய்ந்தமருதில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரிகள் அந்தத் தாக்குதலுக்கு முன்னர் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியான மொஹமட் சஹரான் என்பவரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதியான மொஹம்மட் சஹ்ரான் என்பவரின் சாரதி கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கபூர் என்றழைக்கப்படும் மொஹம்மட் ஷரீவ் காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Read more
<< < 1 2 3 4 5 6 7 8 9 10 > >>