Overblog
Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

கல்முனை சம்பவத்திற்கும் பொறுப்பேற்றது ஐ.எஸ்!

April 28 2019 , Written by lankatime

 கல்முனை சம்பவத்திற்கும் பொறுப்பேற்றது ஐ.எஸ்!
சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ISIS பொறுப்பேற்பு.
அத்துடன், சாய்ந்தமருது பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டவர்கள் என குறிப்பிட்டு ISIS ஆல் வெளியிடப்பட்டுள்ள புகைப்படம்.
 
அம்பாறை மாவட்டம், கல்முனை சாய்ந்தமருதில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் தனது உறுப்பினர்கள் 15 பேர் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்துள்ளனர் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் அறிவித்துள்ளது.
தமது உறுப்பினர்களின் தாக்குதலில் இலங்கைப் பொலிஸார் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தெரிவித்துள்ளது.
...
சாய்ந்தமருது தற்கொலைதாரி றிழ்வான் துப்பாக்கியுடன், உயிர்த்த ஞாயிறு தினமன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்த சஹ்ரான் ஹாசீமும் நிக்கும் படமும் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சாய்ந்தமருது சம்பவத்தில் பாதுகாப்புத் தரப்பினர் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Read more

யாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு!

April 28 2019 , Written by lankatime

யாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில்  திடீர் சுற்றிவளைப்பு!
யாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில்  திடீர் சுற்றிவளைப்பு!
யாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகள், சுற்றிவளைப்புகள் நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று அதிகாலை 4.30 மணியளவில் நாவாந்துறை, ஐந்து சந்தி பகுதிகளில் இராணுவம், மற்றும் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் இணைந்து அந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதுடன்.

இந்த பகுதிக்குள் செல்வதும், அங்கிருந்து வெளியே செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் சல்லடைபோட்டு தேடப்படுவதாக எமது செய்தியாளர் மேலும் கூறினார்.
Read more

ஒரே நாள்; ஒரே மருத்துவமனை... காதல் ஜோடி திருமணம்!!

April 28 2019 , Written by lankatime

ஒரே நாள்; ஒரே மருத்துவமனை... காதல் ஜோடி திருமணம்!!

இங்கிலாந்தில் 26 ஆண்டுகளுக்கு முன் மருத்துவமனை ஒன்றில், ஒரே நேரத்தில் பிறந்த இரு குழந்தைகள், காதலர்களாகி தற்போது திருமணத்தில் இணைந்துள்ளது அந்நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.லண்டனில் உள்ள விகான் மருத்துவமனையில் 1992 டிச., 22ல் ்ஒரே நாளில் சிறு இடைவேளையில், ஆண், பெண் என இரு குழந்தைகள் பிறந்தன. ஷவுனா கிரேஸி மற்றும் டாம் மாகிர் என்ற பெயரில் வளர்ந்து வந்த இக்குழந்தைகள் 18 ஆண்டுகளுக்கு பின், 2010ல் 18 வயதில் ஒரு விழாவில் மாறுவேட போட்டியில் கலந்து கொண்டனர்.

ஷவுனா கிரேஸியை பார்த்தவுடன் டாம் மாகிருக்குள் ஏதோ ஒரு துறுதுறுப்பு. ஷவுனாவிடம் பேச முயன்றார். ஆனால், ஷவுனா அவரிடம் பேச விரும்பவில்லை. தொடர்ந்து டாம் பேச முயன்ற போதெல்லாம் அதை தவிர்த்து வந்துள்ளார்.பல கட்ட முயற்சிகளுக்குப் பின், ஒருவழியாக டாமின் காதலை ஏற்றுக் கொண்டார் ஷவுனா. இதன்பின்னரே, இருவரும் ஒரு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் என்பதை அறிந்தனர்.

தங்கள் காதல் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாக நினைத்து மகிழ்ச்சி அடைந்த இந்த இளம் காதலர்கள். தற்போது, தங்களது 26வது வயதில் மண வாழ்க்கையில் இணைந்துள்ளனர். இது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

Read more

கோத்தாபயவின் அமெரிக்கா குடியுரிமை இரத்து!

April 28 2019 , Written by lankatime

கோத்தாபயவின் அமெரிக்கா குடியுரிமை இரத்து!

தனது அமெரிக்கா குடியுரிமையை இரத்து செய்யுமாறு கடந்த மார்ச் 6ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கத் தூதரகத்திற்கு விடுத்த வேண்டுகோளை, அந்நாட்டு அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய கோத்தாபய ராஜபக்வின் அமெரிக்கா குடியுரிமை இரத்து செய்யப்பட்டமையே உறுதி செய்யும் கடிதம், இலங்கையின் அமெரிக்க தூதரகத்தினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக நேற்றைய தினம் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியில் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read more

தேசிய தௌஹீட் ஜமாத் மற்றும் ஜமாத்தி மில்லத்து இப்ராஹீம் ஆகிய அமைப்புக்கள் இலங்கையில் தடை!

April 28 2019 , Written by lankatime

தேசிய தௌஹீட் ஜமாத் மற்றும் ஜமாத்தி மில்லத்து இப்ராஹீம் ஆகிய அமைப்புக்கள் இலங்கையில் தடை!
தேசிய தௌஹீட் ஜமாத் மற்றும் ஜமாத்தி மில்லத்து இப்ராஹீம் ஆகிய அமைப்புக்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Read more

அம்பாறை, சாய்ந்தமருது பிரதேசங்களில் ஐஸ் பயங்கரவாத குழுவுடன் இடம்பெற்ற மோதலில் 6 தற்கொலைதாரிகள் உட்பட சுமார் 15 பேர் பலி! Photos

April 27 2019 , Written by lankatime

6 தற்கொலைதாரிகள் உட்பட சுமார் 15 பேர் பலியான தீவிரவாத சம்பவம் இடம்பெற்ற சாய்ந்தமருது பகுதியே இதுவாகும். தற்கொலை வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற சாய்ந்தமருது வெலிவேரியன் கிராம மக்கள் அனைவரும் பொதுமைதானத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்....

குறித்த பகுதியில் மேலும் சில தற்கொலைதாரிகள் தலைமறைவாகி இருக்கலாம் என்ற அச்சத்தில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தற்கொலை வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற சாய்ந்தமருது வெலிவேரியன் கிராம மக்கள் அனைவரும் பொதுமைதானத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்....

குறித்த பகுதியில் மேலும் சில தற்கொலைதாரிகள் தலைமறைவாகி இருக்கலாம் என்ற அச்சத்தில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு சம்பவத்தில் இராணுவ தரப்புக்கு பாதிப்பில்லை. உயிரிழந்ததில் 6 பேர் தற்கொலை குண்டுதாரிகள்.

Read more

யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் – மூவர் கைது!

April 27 2019 , Written by lankatime

யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் – மூவர் கைது!
யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் – மூவர் கைது!

யாழ்.பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று அதிகாலை தொடக்கம் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை இராணுவம் மேற்கொண்டுள்ளது.

பவள் வாகனங்கள், கவச வாகனங்கள் சகிதம் பெருமளவு இராணுவத்தினா் குவிக்கப்பட்டு இன்று அதிகாலை தொடக்கம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதும் சுற்றிவளைப்பு தொடந்து கொண்டிருப்பதுடன், சோதனை நடவடிக்கைகளும் தொடா்ந்து கொண்டிருக்கின்றது.

சகல வா்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் பொது கட்டிடங்கள் என அனைத்தும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றது.

இந்த சுற்றிவளைப்பில் இதுவரை 3 போ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். கைது செய்யப்பட்டவா்களில் ஒருவா் முஸ்லிம் என கூறப்படுகின்றது.

Read more

சாய்ந்தமருதில் இரண்டு is துப்பாக்கிதாரிகள் கொல்லப்பட்டதை இராணுவம் உறுதி செய்தது!

கல்முனை சாய்ந்தமருதில் சுனாமி குடியிருப்பு வட்டாரத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்ற பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு துப்பாக்கிதாரிகள் கொல்லப்பட்டதை இராணுவம் உறுதி செய்தது.

குடியிருப்பு பகுதி என்பதால் முப்படைகளின் தேடுதல் நடவடிக்கை மெதுவாக நடக்கிறது. தற்கொலைதாரிகள் மேலும் இருக்கலாமென அஞ்சப்படுகிறது. கிழக்கில் முழுமையாக நிலைகொண்டுள்ள படைப்பிரசன்னம் மற்றும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கல்முனை வைத்தியசாலையில் ஒருவரின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று சம்மாந்துறையில் ஐ எஸ் சீருடைகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.அதேபோல் தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் என்று சொல்லப்படும் சஹ்ரானின் உறவினருக்கு சொந்தமான பதியப்படாத புது வேன் ஒன்றும் கல்முனையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் திகதி இது அக்கரைப்பற்றில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. சாய்ந்தமருதில் சம்பவம் நடந்த இடத்திற்கு செல்ல படையினர் எவரையும் அனுமதிக்கவில்லை. கொழும்பில் இருந்து நேற்றிரவு விசேட புலனாய்வு குழுக்கள் களமுனைக்கு புறப்பட்டன.

Read more

புலிககளை அழித்தது போன்று இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நாட்டிலிருந்து ஒழிக்கப்பேன் கோட்டாபய ராஜபக்ச

April 27 2019 , Written by lankatime

புலிககளை அழித்தது போன்று இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நாட்டிலிருந்து ஒழிக்கப்பேன் கோட்டாபய ராஜபக்ச

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ரொய்ட்டர் சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே கோத்தாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு புலனாய்வுத்துறையை மீண்டும் கட்டியெழுப்பி புலிககளை அழித்தது போன்று இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நாட்டிலிருந்து ஒழிக்கப் போவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது ,

அரசு புலனாய்வுத்துறை கட்டமைப்பாக இல்லை என்பதையே இந்த தாக்குதல்கள் காட்டுகின்றன.தாக்குதல் தொடர்பில் ஆளுக்காள் குற்றம்சாட்டி வருகின்றனர் தவிர இது எப்படி நடந்தது,எப்படி அவர்கள் நாட்டுக்குள் எப்படி வந்தனர் என்பதை பற்றியோ அல்லது தாக்குதல்கள் குறித்தோ எந்த தகவல்களும் எதனையும் யாரும் சொல்வதாக இல்லை.இப்படியான குழுக்களுக்குள் ஊடுருவி அந்த வலையமைப்பையே இல்லாமல் செய்திருக்க வேண்டும்.தேசிய பாதுகாப்பு குறித்து இவர்கள் அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை.நூற்றுக்கு நூறு வீதம் நான் தேர்தலில் போட்டியிடுவேன்.இந்த அடிப்படைவாதத்தை ஒழிப்பேன். என்றும் குறிப்பிட்டுள்ளார் கோட்டாபய

Read more
<< < 1 2 3 4 5 6 7 8 9 10 > >>