Overblog
Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

அமெரிக்க எப்.பீ.ஐ. அதிகாரிகள் இலங்கைக்கு

April 26 2019 , Written by lankatime

அமெரிக்க எப்.பீ.ஐ. அதிகாரிகள் இலங்கைக்கு

அமெரிக்க எப்.பீ.ஐ. புலனாய்வுத் துறை பிரதிநிதிகள் பலர் இன்று (26) அதிகாலை இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடார் எயார்வேஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் இவர்கள் வருகை தந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

சர்வதேச பொலிஸ் பிரிவு மற்றும் நாடுகள் பலவற்றினதும் பாதுகாப்புப் பிரிவு என்பன இலங்கையில் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது என அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Read more

அமெரிக்க மற்றும் பிரித்தானிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை

April 26 2019 , Written by lankatime

அமெரிக்க மற்றும் பிரித்தானிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை அடுத்து இலங்கையில் சுற்றுலா மேற்கொள்வது தொடர்பில் விடுத்திருந்த எச்சரிக்கை அறிவுறுத்தலை கடுமையாக பின்பற்ற அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பிலுள்ள அமெரிக்கா தூதுவராலயம் இந்த எச்சரிக்கை அறிவுறுத்தலை நேற்று மீண்டும் கடுமையாக்கியுள்ளது.

தீவிரவாத குழுக்கள் இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சிக்க கூடும் என அமெரிக்கா எச்சரிக்கை அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

தாக்குதல்களுக்காக போக்குவரத்து மத்திய நிலையங்கள், வர்த்தக நிலையங்கள், கடைத்தொகுதிகள், அரசாங்க கட்டிடங்கள், சுற்றுலா விருந்தகங்கள், வழிப்பாட்டு தலங்கள், கலாச்சார நிகழ்வுகள், கல்வி நிறுவனங்கள், வானுர்தி தளங்கள் உள்ளிட்ட ஏனைய பொது இடங்களை பயன்படுத்த கூடும் என அமெரிக்க துர்துவராலயம் தெரிவித்துள்ளது.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகளை அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ளது.

இதனிடையே, பிரித்தானியா தமது பிரஜைகளுக்கு புதிய எச்சரிக்கை அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை மேற்கொண்ட குழுவின் ஏனைய உறுப்பினர்கள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தக் கூடிய ஏதுநிலை இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இலங்கையில் தேவையற்ற விஜயங்களை தவிர்த்து கொள்ளுமாறு பிரித்தானியா, தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது.

Read more

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது

April 26 2019 , Written by lankatime

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் அளுத்கம தர்கா நகரிலுள்ள அவரின் வீட்டில் வைத்து அளுத்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (25) இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடம் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

24 வயதுடை இந்த நபர் தொடர்பாக கடந்த ஒரு வருடத்துக்கு முன்னரும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்ததாகவும் பொலிஸ் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

கணனி தொடர்பில் அறிவுள்ள இவர், இணையத்தளம் ஊடாக ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Read more

வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் வரத் தேவையில்லை- விமல் வீரவங்ச வேண்டுகோள்

April 26 2019 , Written by lankatime

வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் வரத் தேவையில்லை- விமல் வீரவங்ச வேண்டுகோள்

இலங்கையின் பாதுகாப்புத் துறை எந்த வகையிலும் குறைந்தது அல்லவென்பதை முழு உலகுக்கும் எடுத்துக் காட்டியுள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பு விடயங்களில் வெளிநாட்டு பாதுகாப்புத் துறையை ஈடுபடுத்த எந்தவிதத் தேவையும் இல்லையென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (25) நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

நாட்டின் பாகாப்புத் துறையில் சிறந்த அதிகாரிகளை சிறையில் போட்டுவிட்டு, அந்த இடைவெளிக்கு வெளிநாட்டிலிருந்து பாதுகாப்பு அதிகாரிகளை இறக்குமதி செய்யத் தேவையில்லையெனவும் அவர் கேட்டுக் கொண்டார். 

Read more

இவர்கள் தொடர்பில் அறிந்தால் உடனே அழையுங்கள்..! புகைப்படங்கள் உள்ளே!

April 25 2019 , Written by lankatime

இவர்கள் தொடர்பில் அறிந்தால் உடனே அழையுங்கள்..! புகைப்படங்கள் உள்ளே!
கடந்த தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சிலரை இனங்காண காவற்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளின் படி அவர்கள் தொடர்பில் விபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் , கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறு வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.

071 8591771
011 2422176
011 2395605
Read more

மட்டக்களப்பில் ஏற்பட்ட பதற்றம் -மூடப்பட்ட வீதிகள் Photos

April 25 2019 , Written by lankatime

மட்டக்களப்பில் ஏற்பட்ட பதற்றம் -மூடப்பட்ட வீதிகள் Photos
மட்டக்களப்பில் ஏற்பட்ட பதற்றம் -மூடப்பட்ட வீதிகள் Photosமட்டக்களப்பில் ஏற்பட்ட பதற்றம் -மூடப்பட்ட வீதிகள் Photosமட்டக்களப்பில் ஏற்பட்ட பதற்றம் -மூடப்பட்ட வீதிகள் Photos
மட்டக்களப்பில் ஏற்பட்ட பதற்றம் -மூடப்பட்ட வீதிகள் Photosமட்டக்களப்பில் ஏற்பட்ட பதற்றம் -மூடப்பட்ட வீதிகள் Photosமட்டக்களப்பில் ஏற்பட்ட பதற்றம் -மூடப்பட்ட வீதிகள் Photos
மட்டக்களப்பில் ஏற்பட்ட பதற்றம் -மூடப்பட்ட வீதிகள் Photosமட்டக்களப்பில் ஏற்பட்ட பதற்றம் -மூடப்பட்ட வீதிகள் Photosமட்டக்களப்பில் ஏற்பட்ட பதற்றம் -மூடப்பட்ட வீதிகள் Photos
மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் குண்டு இருப்பதாக வெளியான தகவல்களை தொடர்ந்து அங்கு படையினரினால் தீவிர தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்காரணமாக மட்டக்களநகரில் பதற்ற நிலமையேற்பட்டதுடன் பின்னர் நகரம் வழமைக்கு திரும்பியது.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் அரசடியில் உள்ள தனியார் வங்கியொன்றிலேயெ இன்று காலை பொலிஸ் அவசர சேவைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்று குண்டுசெயலிழக்கச்செய்யும் படையினர் மற்றும் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குறித்த தனியார் வங்கியின் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது கல்முனை-மட்டக்களப்பு வீதியின் போக்குவரத்து அரசடி சந்திவரையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் காரணமாக மட்டக்களப்பு நகரில் பதற்ற நிலமையேற்பட்டதுடன் ஏனைய வங்கிகளும் தமது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டது.

எனினும் குறித்த பகுதியில் எந்தவிதமான வெடிபொருட்களும் மீட்கப்படாத
Read more

இலங்கைக் காட்டுக்குள் IS பயங்கரவாதிகளின் முகாம்களா? வெளியான அதிர்ச்சிப் புகைப்படங்கள்!

April 25 2019 , Written by lankatime

இலங்கைக் காட்டுக்குள் IS பயங்கரவாதிகளின் முகாம்களா? வெளியான அதிர்ச்சிப் புகைப்படங்கள்!
இலங்கைக் காட்டுக்குள் IS பயங்கரவாதிகளின் முகாம்களா? வெளியான அதிர்ச்சிப் புகைப்படங்கள்!
இலங்கைக் காட்டுக்குள் IS பயங்கரவாதிகளின் முகாம்களா? வெளியான அதிர்ச்சிப் புகைப்படங்கள்!
இலங்கைக் காட்டுக்குள் IS பயங்கரவாதிகளின் முகாம்களா? வெளியான அதிர்ச்சிப் புகைப்படங்கள்!
Read more

மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினுடன் வடகொரியா அதிபர் கிம்-ஜாங்-உன் சந்திப்பு!

April 25 2019 , Written by lankatime

மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினுடன் வடகொரியா அதிபர் கிம்-ஜாங்-உன் சந்திப்பு!
மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினுடன் வடகொரியா அதிபர் கிம்-ஜாங்-உன் சந்திப்பு!மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினுடன் வடகொரியா அதிபர் கிம்-ஜாங்-உன் சந்திப்பு!

ரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம்-ஜாங்-உன் சந்தித்து வருகிறார்.  வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்க அதிபர் டிரம்புடன் 2 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி உள்ள நிலையில், தனது நட்பு நாடான ரஷ்யாவுடனும் பேச்சு நடத்த விரும்பினார். இதனையடுத்து அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க திட்டமிட்டார். இதுகுறித்த தகவல்கள் கடைசி நிமிடம் வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கிம் ஜாங் உன் தனது பிரத்யேக  பச்சை நிற ரயில் மூலம், ரஷ்யாவின் துறைமுக நகரான விளாடிவோஸ்டாக்கில் உள்ள  கசான் ரயில் நிலையத்துக்கு நேற்று வந்தார்.

அங்கு அவருக்கு சிவப்பு கம்பள  வரவேற்பு அளிக்கப்பட்டது.  இவருக்கு பலத்த  வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று விளாடிவோஸ்டாக் நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, வட கொரியாவின் முன்னேற்றம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்டது.

இதனிடையே வடகொரியா மீது அமெரிக்கா  விதித்துள்ள பொருளாதார தடையை நீக்குவதற்கு  ரஷ்யாவின் ஆதரவைக் கோருவதற்காக  வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இங்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இரு அதிபர்கள் இடையே நடக்கும் முதல் முக்கிய  பேச்சுவார்த்தை இது என்பதால் உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இதற்கு முன்னர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை 4 முறையும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை 3 முறையும் கிம் ஜாங் உன் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

மாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது!

April 25 2019 , Written by lankatime

மாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது!
மாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியர் கைது!

மாதம்பைப் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்ட மாதம்பை அரபுக் கல்லூரியில் சேவை ஆற்றிய எகிப்து அரசாங்கத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரிந்த ஆசிரியர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவதாக  கல்லூரி நிருவாகம் தெரிவித்துள்ளது.

நேற்றைய கைது தொடர்பில் மாதம்பை அரபுக் கல்லூரியின் பொறுப்பாளர் அஸ்செய்க் நௌஸர்  இதனைக் கூறினார்.

அஸ்ரப் அப்துல் பத்தாஹ் சித்தீக் முஹம்மத் எனும் பெயரையுடைய குறித்த வெளிநாட்டு ஆசிரியர் கடந்த 2018 ஜனவரி 17 ஆம் திகதி இலங்கை வந்துள்ளார். ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அவர் இலங்கை வந்துள்ளார்.

இவருடைய ஒரு வருட ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர், முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சிடம் இவருடைய தகவல்கள் அனைத்தையும் வழங்கி வீசாவைப் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கலாச்சார அமைச்சின் மூலம் பாதுகாப்பு அமைச்சுக்கு அவருடைய தகவல்கள் வழங்கப்பட்டு பின்னர் அங்கிருந்து 2019 ஏப்ரல் 03 ஆம் திகதி வீசா வழங்கலாம் என்ற அனுமதியை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளது. இது குடிவர குடியகல்வு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டு இவருக்கான வீசா இன்று (25) கிடைக்கப் பெற்றது.

இந்த வீசாவுடன் கூடிய இவரது கடவுச் சீட்டை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாதம்பை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில், “கொன்ட்ரோலரின்” கடிதத்தை காட்டினால் அவரை விடுதலை செய்வதாக பொலிஸார்  ஆரம்பத்தில் கூறினர். அதனைக் காட்டியதன் பின்னர் மீண்டும் கடவுச் சீட்டைக் காட்டுமாறு கூறினர். இன்று கடவுச் சீட்டைக் காட்டிதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் போவதாக கூறுகின்றனர்.

அரபுக் கல்லூரிகளுக்கு எகிப்து பல்லைக்கழகத்தினால் ஆசிரியர்களை வழங்கும் நடவடிக்கை இலங்கை அரசாங்கத்துக்கும் – எகிப்து அரசாங்கத்துக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இடம்பெறுகின்றது. இவர்களுக்கு இலங்கையிலுள்ளவர்கள் உணவும், தங்குமிடமும் மாத்திரமே வழங்குவதாகவும் கல்லூரி நிருவாகி தெரிவித்தார்.

நேற்று இவர் கைது செய்யப்பட்டவுடன் கடந்த 4 வருடங்களாக வீசா இன்றி இருந்ததாக ஊடகங்களில் கூறப்பட்டது. இருப்பினும், இவர் ஒரு வருட வீசாவுடன் கடந்த 2018 ஆம் திகதியே இலங்கைக்கு முதல் தடவையாக வந்துள்ளதாகவும் கல்லூரி நிருவாகி அஸ்செய்க் நௌஸர் எம்மிடம் விளக்கமளித்தார்.

கல்லூரி வளாகத்திலிருந்த வாகனம் மாதம்பை கிராமவாசியொருவர் அரபுக் கல்லூரி விடுமுறை என்பதனால், வளாகத்தில் அனுமதியைப் பெற்று நிறுத்திச் சென்றது எனவும் அவர் மேலும் கூறினார். 

Read more
<< < 1 2 3 4 5 6 7 8 9 10 > >>