Overblog
Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

நீர்கொழும்பில் தங்கியிருந்த 600 பாகிஸ்தான் பிரஜைகள் வேறு இடத்திற்கு மாற்றம்!

April 25 2019 , Written by lankatime

நீர்கொழும்பில் தங்கியிருந்த 600 பாகிஸ்தான் பிரஜைகள் வேறு இடத்திற்கு மாற்றம்!
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் தங்கியிருந்த பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 600 பேர் நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹமதிய்யா நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் காணப்படுகின்ற யுத்த சூழ்நிலை காரணமாக ஐக்கிய நாடுகள் அமைப்பினால் அவர்கள் இந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை தொடர்ந்து குறித்த குழு நீர்கொழும்பில் தங்கியிருந்த வீடுகளில் இருந்து வௌியேறுமாறு அந்தந்த வீட்டு உரிமையாளர்கள் கூறியிருப்பதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

குறித்த பாகிஸ்தான் நாட்டவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் எழுந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Read more

கொழும்பு நகரத்தில் பாதுகாப்பு தரப்பினரால் தற்போது விஷேட சோதனை!

April 25 2019 , Written by lankatime

கொழும்பு நகரத்தில் பாதுகாப்பு தரப்பினரால் தற்போது விஷேட சோதனை!
கொழும்பு நகரத்தில் பாதுகாப்பு தரப்பினரால் தற்போது விஷேட சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதித் தடைகளை ஏற்படுத்தி வாகனங்கள் மற்றும் நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சோதனை நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Read more

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள வீதி மீண்டும் திறப்பு!

April 25 2019 , Written by lankatime

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் உள்ள வீதி மீண்டும் திறப்பு!
கட்டுநாயக்க விமான நிலையத்தின் முன்னால் உள்ள வீதி மீண்டும் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

வாகனத்தில் இருந்து சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னிணைப்பு - மு.ப. 11.20

கட்டுநாயக்க விமான நிலையத்தின் முன்னால் உள்ள வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வாகன தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று இருப்பதால் அதனை சோதனை செய்வதற்காக குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.
Read more

பூகொடையில் நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் வெடிப்பு சம்பவம்

April 25 2019 , Written by lankatime

பூகொடையில் நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் வெடிப்பு சம்பவம்
Read more

இலங்கையை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்புக்களை நடத்திய தௌஹீத் ஜமா பயிற்சி பெற்றவர்கள் 160 பேரா?

April 25 2019 , Written by lankatime

இலங்கையை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்புக்களை நடத்திய தௌஹீத் ஜமா பயிற்சி பெற்றவர்கள் 160 பேரா?
இலங்கையை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்புக்களை நடத்திய தௌஹீத் ஜமா பயிற்சி பெற்றவர்கள் 160 பேரா?

இலங்கையை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்புக்களை நடத்திய தௌஹீத் ஜமா அத் அமைப்புத்தான் இன்று இலங்கையில் அதிகம் பேசப்படும் பெயர். சிறிய முஸ்லிம் தீவிர நிலைப்பாடுடைய அமைப்பாக உருவாகி, இன்று இலங்கையில் பெரும் கொலைக்களத்தை உருவாக்கி விட்டது அந்த அமைப்பு.

நேற்று நாட்டு மக்களிற்கு உரையாற்றிய ஜனாதிபதி, ஒவ்வொரு தேசிய பாதுகாப்புகுழு கூட்டங்களிலும் அந்த அமைப்பைப் பற்றி ஆராய்வதாகவும், அதன் ஒவ்வொரு உறுப்பினர்களின் பெயர்களும் ஆராயப்படுவதாகவும், அவர்களின் பயண விபரங்கள் அனைத்தும் திரட்டப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையை உலுக்கிய தொடர் குண்டு வெடிப்புக்களை நடத்திய தௌஹீத் ஜமா பயிற்சி பெற்றவர்கள் 160 பேரா?

அவ்வளவு கண்காணிப்பில் இருந்த அமைப்பு, எப்படி இவ்வளவு பெரிய நாசத்தை அரங்கேற்றியது?

Read more

இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என சீன அரசினால் சீனவாசிகளுக்கு அறிவிப்பு

April 25 2019 , Written by lankatime

இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என சீன அரசினால் சீனவாசிகளுக்கு அறிவிப்பு
Read more

இஸ்லாமிய அடிப்படைவாத கருத்துக்கள் கற்றுக் கொடுக்கும் நிறுவனங்கள் குறித்த பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் ஜாதிக ஹெல உறுமய

April 25 2019 , Written by lankatime

இஸ்லாமிய அடிப்படைவாத கருத்துக்கள் கற்றுக் கொடுக்கும் நிறுவனங்கள் குறித்த பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும்  ஜாதிக ஹெல உறுமய

இஸ்லாமிய அடிப்படைவாத கருத்துக்கள் கற்றுக் கொடுக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.

அம்பிலிப்பிட்டிய போதிராஜ விகாரையில் நேற்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.

தற்கொலைத் தாக்குதலில் ஒருவர் ஈடுபடுவதாக இருந்தால், அவரது உள்ளம் அதற்காகவே பண்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த நாட்டில் காணப்படுகின்ற இஸ்லாமிய மத்ரஸாக்களில்தான் மதவாதம் ஊட்டப்படுகின்றது. சிறுவயது முதலே மத்ரஸாக்களில் இந்த தீவிரவாத சிந்தனை விதைக்கப்படுகின்றது. தனது உயிரை மதத்துக்காக தியாகம் செய்ய போதிக்கப்படும் முக்கிய நிலையமே இந்த மத்ரஸாவாகும்.

இந்த மத்ரஸாக்களில் ஆங்கிலம், தமிழ், அரபு என்பன மாத்திரமே போதிக்கப்படுகின்றன. சிங்களம் போதிக்கப்படுவதில்லை. இந்த மத்ரஸாக்களுக்கான ஆலோசனைகள் கல்வி அமைச்சிடமிருந்து கோரப்படுவதுமில்லை. அவர்களுக்கு செல்ல அனுமதிப்பதுமில்லை.

கிழக்கு மாகாணத்தில் சரீஆ பல்கலைக்கழகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேரர் சுட்டிக்காட்டினார்.

எமது நாட்டில் எதிர்காலத்தில் இந்த அடிப்படை வாதத்தை இல்லாமல் செய்ய வேண்டுமாக இருந்தால், இந்த மத்ரஸா பற்றிய கண்காணிப்பை கல்வி அமைச்சு மேற்கொள்ள வேண்டும் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார். 

Read more

ரஷ்யா சென்ற வட கொரிய தலைவர் Photos

April 25 2019 , Written by lankatime

ரஷ்யா சென்ற வட கொரிய தலைவர் Photos
ரஷ்யா சென்ற வட கொரிய தலைவர் Photos
ரஷ்யா சென்ற வட கொரிய தலைவர் Photos
ரஷ்யா சென்ற வட கொரிய தலைவர் Photos
ரஷ்யா சென்ற வட கொரிய தலைவர் Photos
ரஷ்யா சென்ற வட கொரிய தலைவர் Photos
ரஷ்யா சென்ற வட கொரிய தலைவர் Photos
ரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டினை சந்திப்பதற்காக, வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன், கிழக்கு ரஷ்யாவிற்கு நேற்று சென்றுள்ளார்.

தமது விசேட தொடருந்தின் மூலம் அவர் அவர் ரஷ்யாவின் கடற்கரை நகரான வ்ளாடிவோஸ்டொக்கை சென்றடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் பாரம்பரியத்தின் படி பானும் உப்பும் வழங்கப்பட்டு அவர் வரவேற்கப்பட்டுள்ளார்.

வடகொரிய தலைவருக்கும், ரஷ்யாவின் ஜனாதிபதிக்கும் இடையில் அணுவாயுத உற்பத்தி தொடர்பான சர்ச்சை குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், அமெரிக்க ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, வடகொரிய தலைவர், ரஷ்ய ஜனாதிபதியிடம்உதவிகளை கோருவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
Read more

இலங்கை குண்டுத் தாக்குதல் தொடர்பில் ரொயிட்டர்ஸ் செய்திச் சேவை தகவல்கள்

April 25 2019 , Written by lankatime

இலங்கை குண்டுத் தாக்குதல் தொடர்பில் ரொயிட்டர்ஸ் செய்திச் சேவை தகவல்கள்
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு 2 மணித்தியாலத்துக்கு முன்னதாகவும், இந்திய புலனாய்வுப் பிரிவினர் இலங்கை அதிகாரிகளுக்கு அதுதொடர்பான விபரங்களை வழங்கியதாக ரொயிட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த தாக்குதல் குறித்து ஏப்ரல் மாதம் 4ம் திகதியும், 21ம் திகதியும் இந்திய புலனாய்வுப் பிரிவு தகவல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் கைதான ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்க உறுப்பினர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய, இந்த எச்சரிக்கை இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இலங்கையில் பல இடங்களில் பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வழங்கியுள்ளதாகவும் ரொயிட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், சஹரான் ஹசீம் என்பவரின் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பினால் 3 கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட எட்டு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் இடம்பெற்ற 2 தினங்களின் பின்னர் தாக்குதலுக்கான பொறுப்பை ஐ.எஸ் .தீவிரவாதிகள் ஏற்றுக் கொண்டனர்.

வெளிநாட்டு ஊடகங்களில் தகவல்படி, தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கம், ஐ.எஸ். தீவிரவாதிகளின் அனுசரணையைப் பெற்று இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இயங்குகின்ற இயக்கமாகும்.

இந்த தாக்குதலை வெற்றிகரமாக முன்னெடுப்பதாக, ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைவர் அபூபக்கர் அல் பகாடியின் பெயரில், தாக்குதலுக்கு முன்னர் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும் காணொளி காட்சியும் வெளியாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகள், வெல்லம்பிட்டியவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தயாரிக்கப்பட்டுள்ளதாக டெயிலி மெயில் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையானது, தற்கொலை குண்டுதாரியான இன்ஃபாஸ் அஹமட் என்பவருக்கு சொந்தமானது.

இந்த தொழிற்சாலை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, அதில் பணியாற்றிய 9 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டியில் பிறந்த இன்சாப் கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுள்ளார்.

அவரது குடும்பத்தின் மற்றுமொரு சகோதரரான இல்ஹாம் என்பவரையும் உடன்சேர்ந்த அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

டெயிலி மெயில் தகவல்படி, கொழும்பு கிங்ஸ்பெரி மற்றும் சினமன் க்ராண்ட் ஆகிய விருந்தகங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களை, இன்சாப் மற்றும் இலஹாம் ஆகியோரே நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் தாம் சம்பியாவிற்கு வர்த்தக செயற்பாடுகள் நிமித்தம் பயணிப்பதாக அவர் தமது குடும்பத்தாரிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை நடத்திய இன்சாப் அஹமட்டிற்கு சகோதரர்கள் 9 பேர் இருப்பதுடன், அவரது தந்தை இலங்கையில் இறக்குமதி வர்த்தகராவார்.
Read more
<< < 1 2 3 4 5 6 7 8 9 10 > >>